Oct 8, 2008

நான் நான் தான்....


         தன் வயதையொத்த சிறுவர்கள் எல்லாம் புழுதியில் புரண்டு சடுகுடு ஆடிக்கொண்டிருக்க பாபு மட்டும் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். பன்னிரெண்டு வயதில் யாருக்கும் இயல்பாய் வராத பயம் பாபுவிற்கு வந்தது.அடுத்து வாழ்க்கைகயில் என்ன செய்யப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையில் இருந்தான்.பச்சாதாபமற்ற இவ்வுலகை எப்படி எதிர்கொள்வது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவன் அம்மா, மாமா மற்றும் மாமன் மகள் இந்து மட்டும்தான்.இன்று அவர்களை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டான் பாபு.

         விளையாடிக்கொண்டிருந்த சிறுவனில் ஒருவன் இவனருகில் வந்து "யார் நீ?" என்றான்.

      "பாபு" என்ற ஒற்றை வார்த்தை பதிலை வெகு நேர யோசனைக்குப் பின் சொன்னான்.
       "இதுக்கு முன்னால ஒன்ன பார்த்தது இல்லையே.யார் வீடு" என்று தொல்லையை தொடர்ந்தான் அவன்.
      "நான் ஊருக்கு புதுசு"
     "புதுசுன்னா தனியாவா வருவாங்க.யார் கூட வந்த?உன் அம்மா அப்பா இல்லை"

      "த‌னியாத்தான் வந்தேன்.என‌க்கு இங்க‌ யாரையும் தெரியாது" என்றான் பாபு.

  ஏதொ ப‌ட‌மெடுத்த‌ நாக‌த்தை க‌ண்ட‌து போல் ப‌ய‌ந்து ஓடினான் அவ‌ன்.ஓடிய‌வ‌ன் த‌ன் ச‌காக்க‌ளிட‌ம் இவ‌னைப் ப‌ற்றி சொல்வ‌தை எந்த‌ ச‌ல‌ன‌முமின்றி பார்த்துக் கொண்டிருந்தான் பாபு.விளையாடுவ‌தை நிறுத்திவிட்டு இவ‌னை நோக்கி எல்லோரும் வ‌ந்தார்க‌ள்.வ‌ந்த‌வ‌ர்க‌ள் அவ‌னை சூழ்ந்து கொண்டு சிரிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் முழித்தான் பாபு.

     "ஒனக்கு வீடே இல்லையா?" என்றான் ஒருவன்.இவன் இல்லை என்பது போல் தலையாட்ட சிரிப்பு பலமானது.

       "நீ யாருன்னு உனக்கே தெரியாதா?" என்ற அடுத்தவனின் கேள்வி இவனை நிலைத் தடுமாற செய்தது.இவன் முழிப்பதைக் கண்ட அவர்களின் சிரிப்பொலி இன்னும் சத்தமானது.அடுத்தடுத்து அவர்கள் கேட்பதும் இவன் முழிப்பதும் அவர்கள் இன்னும் பலமாக சிரிப்பதும் பாபுவை அசிங்கப்பட வைத்தது.சாரிடான் விளம்பரத்தில் வருவதைப் போல் பயங்கர உருவம் கண்ட பலர் இவன் தலைக்குள் அடிப்பதும் சிரிப்பதும் போல் உணர்ந்தான். வெறுப்பும் கோபமும் அவனுள் தோண்றியது.என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து ஒருவனின் தலையில் ஓங்கி அடித்தான். பறவைகள் கூட்டமாக பறக்கும்போது ஒரு பறவை மட்டும் வேடனின் குண்டுக்கு இரையாகினால் அக்கூட்டம் எப்படி சிதறுமோ அதுப்போல் ஆளுக்கொருப்பக்கம் தலைத்தெறிக்க ஓடினார்கள்.ஒரு கணம் பேயறைந்தது போல் நின்ற பாபு அவர்கள் ஒடுவதைக் கணடு புன்னகைத்தான்.மெல்லிய புன்னகை மெல்ல சிரிப்பாக மாறியது.வெகு தூரம் ஓடிய பின் ஒருவன் பாபுவைத் திரும்பிப் பார்த்தான்.செங்கல்லை இன்னமும் அவன் கையில் இருப்பதைக் கண்ட அவன் வேகத்தைக் கூட்டி ஓடத் தொடங்கினான். இதைப் பார்த்த பாபுவிற்கு உற்சாகம் தலைக்கேறியது.சத்தம் போட்டு சிரிக்க தொடங்கினான்.அவர்கள் அனைவரது மொத்த சத்தத்தை விட அதிக சத்தம் வேண்டுமென்று இன்னும் பலமாய் சிரிக்க தொடங்கினான் பாபு.

       சிறிது தூரத்தில் அடிவாங்கிய சிறுவனின் நண்பன் ஒருவன் இருவது வயது மதிக்கதக்க இரு வாலிபர்களோடு இவனை வழி மறித்தான்.பாபுவின் கையில் இன்னமும் அந்த செங்கல்லை கண்ட அவன் ஒரு வித பயத்துடனே இவன்தான் என்று கைக்காட்டினான்.

    "யார்ரா நீ?எதுக்கு அவன அடிச்ச?" என்றான் ஒருவன்.மறுபடியும் "யார் நீ?" என்ற கேள்வி பாபுவைக் கலவரப்படுத்தியது.

     "பாபு" என்றான் சன்னமான குரலில்.

     "பாபுன்னா பாரத பிரதமரா? யாருன்னு ஒழுங்கா சொல்லுடா.உங்க அப்பா எங்க இருக்காருனு சொல்லு" என் மிரட்டினான் இன்னொருவன்.மீண்டும் அதே கேள்வி அவனுக்கு வெறுப்பை தந்தது.

     "பாபுன்னு சொல்றேன் இல்ல.அப்புறம் யார் யார்னு கேட்டா என்ன சொல்றது" என்றான் சற்று சத்தமாக.இதை சொல்லும்போதே சற்று பெருமையாகவும் சந்தோசமாகவும் உனர்ந்தான்.

      "ஒழுங்கா பதில் சொல்லுடா பொடிப்பையா" என்ற படி அவனை அடிக்க எத்தனித்தான் ஒருவன்.சிங்கத்திடம் சிக்கிய மானின் கடைசிப் போராட்டத்தைப் போல அவனையும் செங்கல்லால் அடிக்க முயன்றான்.லாவகமாக இவன் கையை முறுக்கி முதுகில் குத்தினான்.வலித்தாங்காமல் கத்தினான் பாபு."சொல்லு,நீ யாருன்னு சொல்லு" என்றபடி அடிப்பதை தொடர்ந்தனர் இருவரும்.அவர்கள் அடிப்பதை விட அவர்கள் கேட்கும் "யார் நீ?" என்ற கேள்வியே அவனுக்கு அதிகம் வலித்தது.ஒவ்வொரு அடிக்கும் "நான் பாபுதான்..நான் பாபுதான்" என்று கத்த தொடங்கினான்.வலித்தாங்கி கொண்டு தன் பேர் சொல்வதில் இனம் புரியாத ஒரு வித இனபத்தை கண்டான்.மெல்ல சிரிக்க ஆரம்பித்தான்.இவன் சிரிப்பதைக் கண்டு அவர்கள் வேகமாக அடிக்க தொடங்க, இவனும் "நான் பாபுதான்" என்று சத்தமாய் சிரித்துக் கொண்டே சொன்னான்."பாபுனு நீயே பேர் வச்சிகிட்டியா?உங்க அம்மா அப்பாதானே வச்சாங்க? யாரு அவங்க?எங்க இருக்காங்கனு சொல்றா..அது வரைக்கும் உன்ன விட மாட்டோம்" என்று அவர்களும் அடிப்பதை நிறுத்தவில்லை.

       அவர்கள் அதை சொன்ன போது, அவன் பேரும் அவனுக்கு சொந்தமில்லை.அவன் அப்பா வைத்தது என நினைத்தான் பாபு.இப்போது அவனுக்கு "நான் பாபு தான் " என்று கத்த மனம் வரவில்லை.. " நான் நான் " என இழுத்தான்.அவர்களும் அடிப்பதை நிறுத்த இவன் என்ன சொல்வது எனத் தெரியாமல் "நான் நான் " என்று அழத்தொடங்கினான்.இவனது விசித்திர குண‌த்தைக் கண்ட அவர்களும் அப்படியே விட்டுவிட்டு போய்விட்டார்கள்.முதுகை விட அவனுக்கு மனசு வலித்தது.அவன் அம்மா இவனை எரிச்சலுடன் "டேய் பாபு" "பாபு நாய" என்று அழைத்ததை எண்ணினான்.இப்போது அவனுக்கு பாபு என்ற பேரே பிடிக்காமல் போனது.. நான்.. நான்.. பாபு.. இல்ல.." என்று முனகி கொண்டே கீழே சரிந்தான்.இமைகள் மெல்ல மூடத் தொடங்கின.உதடுகள் மட்டும் "நான் பாபு இல்ல" என்று முனகி கொன்டிருந்தது.

    அப்படியே மயக்குமுற்ற அவனின் உள்மனதில் அவனின் சிறுவயது ஞாபகங்கள் ஓடத் தொடங்கியது. மூன்றாவது படிக்கும் போது இவன் அப்பா வேறு ஒரு பெண்ணோடு ஓடிப் போனது, அதன் பின் எல்லோரும் இவன் அப்பவின் செய்கையாலே அடையாளம் கண்டது, அவர் செய்த தவறு என்னவென்று அறியா வயதிலே அவர் மீதான வெறுப்பு, முதலில் பாசமாக இருந்த அம்மாவும் நாள‌டைவில் எரிச்சலுற்றது, இந்து அவனுக்கு நல்ல சாப்பாடு கொடுத்தாள் என்பதற்காக அவன் மாமா அவளுக்கு உதையும்,இவனுக்கு சூடும் போட்டது என எல்லாம் அவன் மனத் திரையில் மங்கலாக ஓடியது.தான் உண்மையாக சிரித்த நாள் அவன் நினைவில் இல்லவே இல்லை.உச்சகட்ட காட்சியாக ,ஆந்திராவிற்கு வேலை செய்ய இவன் அம்மாவும் மாமாவும் இவனை முரட்டு மீசைக்காரனிடம் விலை பேசியதை கண்டு லாரி ஏறி இந்த ஊருக்கு ஓடி வந்த காட்சியோடு முடிந்தது.

       நினைவு வந்து கண் திற‌ந்து பார்த்தான்.எதிரே ஒரு போலிஸ் நின்று கொண்டிருந்தார். இவன் கண் திறந்ததைக் கண்டவுடன் கையில் ஒரு பேப்பருடன் வந்த அவர் " யார்ரா நீ?உன் பேரென்ன?" என மிரட்டினார்.கண்விழித்த அடுத்த நொடியே அதே கேள்வியை எதிர் கொண்ட அவனுக்கு,அப்படியே கண் மூடியே போயிருக்கலாமென்று தோண்றியது.இந்த முறை கேட்டவர் போலிஸ் என்பதால் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தான்.அப்போது அங்கே வந்த டாக்டர் போலிஸை கடிந்து கொண்டு வெளியே இருக்குமாறு சொன்னார். அருகில் வந்த டாக்டர் "தம்பி பயப்படாதே.நான் இருக்கிறேன்" என்றார்.சற்றே ஆறுதலாய் உனர்ந்தான்.அவன் தலையில் கைவைத்து தடவிய அவர் அவனுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.அதை அவன் குடித்து கீழே வைக்கும்  போதே டாக்டர் அவனிடம் " இப்போ சொல்லுப்பா..யார் நீ?உன் பேரென்ன?" என்றார்.கண் மூடி ஒரு கணம் யோசித்த அவன் தீர்க்கமாக சொன்னான் "நான் நான் தான்..."..சொல்லிவிட்டு மீண்டும் படுத்தான்.அவன் கண்கள் மெல்ல மூடத் தொடங்கியது.

26 கருத்துக்குத்து:

இரவு கவி on August 14, 2008 at 12:23 PM said...

superb appu

கார்க்கி on August 14, 2008 at 12:28 PM said...

superb appu//


thanks pa...

கிரி on August 14, 2008 at 12:40 PM said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

கார்க்கி on August 14, 2008 at 12:42 PM said...

நன்றி கிரி..கதைய பத்தி ஒன்னும் சொல்லாம போறிங்க?

srid.. said...

சூப்பர் மச்சி..இப்படி எல்லாம் கூட எழுதுவியடா நீ?

சுந்தர் on August 14, 2008 at 9:33 PM said...

கலக்கீட்டிங்க!

Prosaic on August 14, 2008 at 11:02 PM said...

Beautiful. Proofread everything twice before posting it.

Abi

கார்க்கி on August 16, 2008 at 8:36 AM said...

//கலக்கீட்டிங்க!//

நன்றி சுந்தர்

கார்க்கி on August 16, 2008 at 8:37 AM said...

//Beautiful. Proofread everything twice before posting it.//

அப்படி செய்துதான் பதிவிடுகிறேன்!!!! :(

Anonymous said...

Excellent story, but onne onnu missing. Half century adicha santhoshathayei kanom storyla!!!!!

Anonymous said...

very touching..is it really ur story? selva

KA... said...

Good story...kadachiley namba per kuda nambaluku sontham illa endru azhaga solirikinga...never think of it b4. eppa naan yar endra yosika vechitinga :)

கார்க்கி on August 18, 2008 at 4:16 PM said...

//Good story...kadachiley namba per kuda nambaluku sontham illa endru azhaga solirikinga...never think of it b4. eppa naan yar endra yosika vechitinga :)/

வாங்க கலை.. கருத்திற்கு நன்றி...எப்படி இருக்கீங்க?

KA.... said...

//வாங்க கலை.. கருத்திற்கு நன்றி...எப்படி இருக்கீங்க?//

Naan arokiyama than eruken Karki. nenga eppadi erukinga? Good progress...lots of new segments in ur blog. Keep going and congrats!!!

KA.....

கார்க்கி on August 19, 2008 at 11:14 AM said...

எல்லாம் உங்களைப் போன்றோர் தரும் ஊக்கமும் ஆதரவும் தான் காரணம்.இதனால் நம்ம க்ரூப்க்கு அடிக்கடி வர முடியலை என்பதுதான் கவலை..

KA.... said...

//இதனால் நம்ம க்ரூப்க்கு அடிக்கடி வர முடியலை என்பதுதான் கவலை..//

Athu paruvalai Karki,eppa eppalam ungalku time kadaikutho apalam GP visit panungal.Guess many miss u there. unggal blog'kum mukiyam than.

KA...

Anonymous said...

very good story.

கார்க்கி on October 8, 2008 at 5:15 PM said...

நன்றி அனானி

தாமிரா on October 8, 2008 at 5:59 PM said...

நல்லாருந்தது..

கார்க்கி on October 8, 2008 at 6:07 PM said...

வாங்க தாமிரா.. ஒரு வார்த்தையோடு போறத பார்த்தா மொக்கைனு சொல்றீங்களா?

பரிசல்காரன் on October 8, 2008 at 6:44 PM said...

50க்கு வாழ்த்துக்கள் சகா.

வித்தியாசமாக வேறு தளத்தில் இருந்தது கதை.

அடிக்கடி இது போல எழுதுங்கள்...

கார்க்கி on October 8, 2008 at 6:53 PM said...

//
வித்தியாசமாக வேறு தளத்தில் இருந்தது கதை.

அடிக்கடி இது போல எழுதுங்கள்..//

நன்றி சகா.. முயற்சி செய்ய வேண்டும்..

Anonymous said...

வித்தியாசமான படைப்பு.
கார்க்கியிடம் இருந்து இப்படி மேலும் பல படைப்புகள் வர வேண்டும்...
வாழ்த்துகள்

கார்க்கி on October 9, 2008 at 4:53 PM said...

வாங்க தூயா.. நிச்சயம் முயற்சி செய்கிறேன்..

அனுஜன்யா on December 23, 2008 at 8:49 AM said...

நல்ல கதை கார்க்கி. இன்று தான் உயிரோசையில் பார்த்தேன். பிறகு உன் வலைப்பூவுக்கு வந்து தேடினால், நாலு மாதம் முன்னாலேயே இந்தக் கதை எழுதியிருக்கிறாய். மிக அழகான, உளவியல் சார்ந்த கதை. நிறைய எழுது கார்க்கி. ஆழமான எழுத்து உனக்கு நிச்சயம் வருகிறது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

thushanthini on December 23, 2008 at 11:59 AM said...

suberbbbbbbbbbbbbbbbb
ரொம்ப நல்ல இருக்கு அண்ணா

வாழ்த்துக்கள்

 

all rights reserved to www.karkibava.com