Aug 13, 2008

தமிழ்மணம்,வலையுலகம் மற்றும் நான்


       வலையுலக நண்பர்களுக்கும், குறிப்பாய் தமிழ்மண நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.ஏன் என்பதை இறுதியில் பார்ப்போம்.

          நான் வலை எழுத தொடங்கிய போது தமிழ்மணத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.என் எழுத்தை என் நண்பர்கள் கூட படிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது  உண்மை.ஆனால், நான் எழுத தொடங்கியது பிறருக்காக அல்ல.என் எண்ணங்களை நான் விரும்பும் வண்ணம் பதியவும், நான் எழுதிய சில கவிதைகளை பதியவும் தான் தொடங்கினேன்.வழக்கம் போல் என் நண்பர்கள் இதையும் நையான்டி செய்ய கூடாது என்பதற்காக "when we feel there is nobody to listen,we start writing" என்ற வரியை உபயோகித்தேன்.அது ஒரு வகையில் உண்மையும் கூட. என் வலையை தமிழ்மணத்தில் இணைத்ததலிருந்து ஹிட்ஸ் அதிகமாக ஆரம்பித்தது.நூற்றுகணக்கில் இல்லாவிட்டாலும் எல்லா பதிவிற்கும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன.இந்த பாரட்டுக்கள் எனக்கு ஊக்கத்தை அளித்தன.ஒரு மாதத்தில் 42 இடுகைகள் எழுதினேன்.ஆனால் மெல்ல இந்த போதை எனக்கும் ஏறியது.எனது பதிவும் சூடான இடுகைகளில் வர வேண்டும் என்ற ஆசை தூண்டியது. கவிதைகள்,ஹைக்கூக்கள், பயண கட்டுரை, தொடர்கதை என நான் எழுதிய‌ எதுவும் சூடாகவில்லை.அந்த சமயத்தில் எனக்கு கிடைத்த துருப்பு சீட்டுதான் குசேலன்."குசேலனும் சில பின்னூட்டங்களும்" என்ற எனது பதிவு சூடான இடுகையானது.பிறகு இன்னொரு முயற்சியாக "குசேலன் கின்னஸில் இடம் பிடிக்கும்" என்ற அடுத்த இடுகை எந்த செய்தியும் இல்லாமல் வெறும் தலைப்புக்காகவே சூடான இடுகையானது.ஆனால் எந்த நோக்கத்துடன் எழுத தொடங்கினேனோ அது நிறைவேறவில்லை. மொக்கை பதிவு தவறில்லை. நகைச்சுவை இல்லாமால் மனிதனே இல்லை.ஆனால் அத்தகைய பதிவுகள் மட்டுமே பரவலாக படிக்க படுகிறது.

      வெறும் ஹிட்ஸ்க்காகவும் பின்னுட்டங்களின் எண்ணிக்கைகாகவும் எழுத தொடங்கியதாய் உணர்ந்தேன்.இது வரை எழுதியதில் வெறும் 4 இடுகைகள் மட்டுமே அது போன்று எழுதி இருந்தாலும் என்னவோ போல் இருந்தது.அதிலும் வலையில் எனக்கு பிடித்த எழுத்துகளின் சொந்தக்காரரான‌ அய்யனார் அவர்கள் என் நண்பன் ஒருவனிடம் " நல்லா எழுத ஆரம்பிச்சிருக்கான்.அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை?" என்று சொல்லி இருக்கிறார்.அப்போது தான் அவர் என் பதிவுகளை படிக்கிறார் என்பதே எனக்கு தெரிந்தது.இது வரை ஒரு பின்னூட்டம் கூட அவர் எனக்கு போட்டதில்லை. அதிலும் இட்லி சாம்பாரைப் பற்றி ஒரு நகைச்சுவை கலந்த பதிவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது இதற்கு பேசாமல் ஒரு நமீதா படத்தைப் போட்டு நச்சென்று ஒரு தலைப்பு வைத்திருந்தால் இன்னோரு சூடான இடுகையும் ஒரு ஐநூறு ஹிட்ஸும் ஐம்பது பின்னூட்டங்களும் கிடைத்திருக்கும் என தோண்றியது. பாராட்டு என்பது ஒரு கலைஞனுக்கு அவசியமான ஒன்றுதான்.ஆனால் அதை விட தன்னிறைவு என்பதுதான் அவனைத் தொடர்ந்து வழி நடத்தி செல்லும் என நம்புகிறேன்.

    வலை மூலம் தமிழ் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு குறைய ஆரம்பித்திருக்கிறது.பல நல்ல படைப்புக்கள் தமிழ்மணத்தில் கேட்பாரற்று போகின்றன.கும்மி அடிப்போரையும் கலாய்ப்பவரையும் நான் குறை சொல்லவில்லை.அவர்கள் தங்கள் வலையிலே அதற்க்காகத்தான் எழுதுவதாக தெளிவாக சொன்னபின் அவர்களை நாம் என்ன சொல்ல முடியும்? ஒரு தடவை ஒரு பதிவரின் பேரைக் கொண்டு வேரொரு பதிவர் ஒரு இடுகை எழுதினார்.தன் பேர் கொண்ட இடுகை சூடான இடுகை ஆக வேண்டும் என்று அவரும் அவர் நண்பரும் அதற்கு சராமாரியாக பின்னுட்டமிட்டு அந்த இடுகையை சூடான இடுகை ஆக்கினார்கள்.இன்னொரு பதிவர் "சினிமாவை மறந்தால்தான் தமிழினம் தலை நிமிரும்" என்று சொல்லிவிட்டு எல்லா படத்திற்கும் விமர்சனம் எழுதுகிறார்.குசேலனை வைத்து மட்டுமே இது வரை ஐந்திற்கும் மேலான இடுகைகள் எழுதி விட்டார்.

       என் ஐம்பதாவது பதிவில் இருந்து இது போன்று வெறும் ஹிட்ஸ்க்காக எழுத கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.வாரம் ஒன்று என்றாலும் என்னால் முடிந்த ஒரு நல்ல இடுகை எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் ஏகன்,வில்லு என்று பல புயல்கள் தமிழ்மணத்தை தாக்ககூடும்.அதில் என்னைப் போன்ற பதிவர்கள் தாக்கு பிடிக்க முடியாது என்பதை நானறிவேன்.இருந்தும் நான் முன்னே சொன்னதைப் போல எனது வலைப்பூ எனக்கானது.

    நான் முதலில் சொன்ன நன்றி,இது என்னுடைய 49வது இடுகை.இத்துனையும் நான் இவ்வளவு சீக்கிரம் எழுத உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.இதோ இந்த பெரிய பதிவை எத்தனைப் பேர் இது வரைக்கும் படித்து கொண்டிருப்பார்கள் என தெரியாது.அதில் நீங்களும் ஒருவர் என்றால் என் நன்றி.

18 கருத்துக்குத்து:

இரவு கவி on August 13, 2008 at 12:43 PM said...

நான் என்ன நெனச்சுகிட்டு இருக்கின்றேனோ அத அப்படியே எழுதி இருக்குறீங்க.

ரொம்ப நன்றி

கார்க்கி on August 13, 2008 at 12:51 PM said...

//நான் என்ன நெனச்சுகிட்டு இருக்கின்றேனோ அத அப்படியே எழுதி இருக்குறீங்க//

அப்படியா? வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!!!

துளசி கோபால் on August 13, 2008 at 1:15 PM said...

அரைச்சதமா?

வாழ்த்து(க்)கள்.

கார்க்கி on August 13, 2008 at 1:17 PM said...

//அரைச்சதமா?

வாழ்த்து(க்)கள்.//

நன்றி..வாழ்த்துகள் என்பதே சரியானது..

கிரி on August 13, 2008 at 1:47 PM said...

//ஆனால் எந்த நோக்கத்துடன் எழுத தொடங்கினேனோ அது நிறைவேறவில்லை//
//மொக்கை பதிவு தவறில்லை. நகைச்சுவை இல்லாமால் மனிதனே இல்லை.ஆனால் அத்தகைய பதிவுகள் மட்டுமே பரவலாக படிக்க படுகிறது.//

பொதுவாக பதிவுகள் படிக்க வருபவர்கள் கொஞ்சம் நேரம் ஜாலியாக இருக்க தான் விரும்புவார்கள், அதன் தாக்கமே இது. அதிகம் மக்கள் பொழுது போக்கு படங்களையே விரும்பி பார்க்கிறார்கள், நாட்டிற்கு நமக்கு நல்லது கூறும், அறிவுரை கூறும் படங்களை யாரும் விரும்பி பார்ப்பதில்லை.

கார்க்கி நீங்கள் உங்கள் கருத்துக்களை அனைவரும் விரும்பும் வகையில் கொடுங்கள் அனைவரும் படிப்பார்கள். திரைக்கதை சரி இல்லை என்றால் எந்த படமும் ஓடாது, அதே போல தான் பதிவுகளும் சுவாரசியமாக இல்லா விட்டால் யாரும் படிக்க மாட்டார்கள்.

நல்ல கருத்துக்கள் கொண்ட பதிவுகள் பல காணாமல் போய் விடுவது உண்மை தான். அவை எல்லாம் தவிர்க்க முடியாதது. சூடான இடுகைக்காக எழுதப்படும் பதிவுகளே இங்கு அதிகம் என்று நீங்கள் கூறுவதை மறுக்கவில்லை. அதையும் தாண்டி பலரின் பதிவுகள் பலரால் படிக்கப்படுகின்றன அது எப்படி என்று யோசித்து பாருங்கள். அவ்வாறு சூடான இடுகைக்காக எழுதப்படும் பதிவுகள் அனைவரின் மனதிலும் நிற்காது.

// பாராட்டு என்பது ஒரு கலைஞனுக்கு அவசியமான ஒன்றுதான்.ஆனால் அதை விட தன்னிறைவு என்பதுதான் அவனைத் தொடர்ந்து வழி நடத்தி செல்லும் என நம்புகிறேன்.//

எனவே மேலே நீங்கள் கூறியபடி இதை நினைத்து கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள் (கலக்குங்கள்)

ஸ்டார்ட் மூஜிக் :-)

சுந்தர் on August 13, 2008 at 1:48 PM said...

மனதில் பட்டதை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி. தமிழ்மணம் போன்ற தொகுப்பு மூலம் அடைந்த ஏமாற்றத்தால் எனக்கு பிடித்த பதிவுகளை நானே தொகுத்து புது பதிவுகளை நானே போய் படிக்க ஆரம்பித்தேன். ஜன ரஞ்சகமான கருத்துக்களுக்கு தான் அச்சு பத்திரிக்கைகள் இருக்கே. உங்கள் தனித்துவமான கருத்துக்களை மட்டு எழுதுங்கள், உங்களுக்கென தொடரும் வாசகர்கள் கிடைப்பார்கள்.

லக்கிலுக் on August 13, 2008 at 1:52 PM said...

கார்க்கி!

சர்வதேச இலக்கிய விருதுகள் தங்கள் வலை தேடி வர வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் on August 13, 2008 at 2:00 PM said...

கார்க்கி,

நல்ல முடிவு தான்.

எப்போதும் சீரியசாகவே எழுதிக் கொண்டு இருக்க முடியாது, எழுத்து நம் தொழிலும் அல்ல, பொழுது போக்குக்காகவும், நம் சிந்தனைகளின் களம், கருத்துப்பரிமாற்றத்தின் களம் என்பதற்க்காகவும் எழுதுகிறோ. நேர்த்தியாக நல்ல இடுகையாக எழுதவேண்டும் என்று நினைப்பது தவறல்ல. அதே போன்று சற்று உற்சாகம் தரும் மொக்கை பதிவுகள் எழுதுவதும் பெரிய குற்றம் அல்ல. எப்பொழுதும் ஒன்று போலவே நம் சிந்தனை இருக்காதே. மொக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அது தவறான ஒன்றை படிப்பவர்களுக்கு கற்பித்துவிடாது.

4 பதிவு கருத்தோடு போட்டால், 1 பதிவு நகைச்சுவைக்காக எழுத வேண்டும். இல்லை என்றால் சிந்தனைகள் அனைத்தும் ஒற்றைப் புள்ளியாகப் போய்விடும். வேறொரு உலகத்தில் தான் அது நம்மை வைத்துவிடும். அதாவது அதிதீவிர எழுத்தாளன் !
:)

கார்க்கி on August 13, 2008 at 2:57 PM said...

//கார்க்கி நீங்கள் உங்கள் கருத்துக்களை அனைவரும் விரும்பும் வகையில் கொடுங்கள் அனைவரும் படிப்பார்கள். திரைக்கதை சரி இல்லை என்றால் எந்த படமும் ஓடாது, அதே போல தான் பதிவுகளும் சுவாரசியமாக இல்லா விட்டால் யாரும் படிக்க மாட்டார்கள்//

மிகச்சரி கிரி..ஆனால் எந்த பொருளும் அல்லாமல் வெறும் புகைப்படத்தையோ இல்லை ஒரு நடிகரைப் பற்றி மின்னஞ்சலில் வந்த துணுக்கயோ தாங்கி வரும் இடுகைக்கு கிடைக்கும் வரவேற்பு பல நல்ல இடுகைக்கு கிடைப்பதில்லை என்பதே என் ஏக்கம்..வாசகர்களை குறை சொல்லவில்லை..ந‌ல்ல படைப்புக்களை அடையாளம் காட்டினால் படிப்பார்கள் என்கிறேன்..

கார்க்கி on August 13, 2008 at 3:20 PM said...

//பொதுவாக பதிவுகள் படிக்க வருபவர்கள் கொஞ்சம் நேரம் ஜாலியாக இருக்க தான் விரும்புவார்கள், அதன் தாக்கமே இது. அதிகம் மக்கள் பொழுது போக்கு படங்களையே விரும்பி பார்க்கிறார்கள், நாட்டிற்கு நமக்கு நல்லது கூறும், அறிவுரை கூறும் படங்களை யாரும் விரும்பி பார்ப்பதில்லை.//

நீங்கள் சொல்வது சரி என்கிறேன் கிரி..பின் ஏன் பொழுதுபோக்கு திரைப்படங்களை உலக சினிமாவொடு ஒப்பிட்டு ஏளனம் செய்கிறார்கள்?

கார்க்கி on August 13, 2008 at 3:21 PM said...

//மனதில் பட்டதை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி./

நன்றி சுந்தர்

கார்க்கி on August 13, 2008 at 3:26 PM said...

//சர்வதேச இலக்கிய விருதுகள் தங்கள் வலை தேடி வர வாழ்த்துக்கள்!/

அதான் வந்து விட்டதே..லக்கி என்பவர் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் என்பது யாவரமறிவார்.. நீங்கள் கூட வலை மூலம் தமிழை வளர்ப்பது பற்றி சமீபத்தில் நடைபெற்ற பதிவர் கூட்டத்தில் பேசியதாக பிபிசி யில் சொன்னார்கள்.உண்மைதானே லக்கி?

நான் உங்கள் தீவிர வாசகன்.ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும். வேளச்சேரியில் தான் என் வீடு.ஆனால் இப்பொது இருப்பது வேலை நிமித்தமாக இருப்பது ஹைதரபாத்தில்

கார்க்கி on August 13, 2008 at 3:30 PM said...

//4 பதிவு கருத்தோடு போட்டால், 1 பதிவு நகைச்சுவைக்காக எழுத வேண்டும். இல்லை என்றால் சிந்தனைகள் அனைத்தும் ஒற்றைப் புள்ளியாகப் போய்விடும். வேறொரு உலகத்தில் தான் அது நம்மை வைத்துவிடும். அதாவது அதிதீவிர எழுத்தாளன் !//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கண்ணன். நான் நக்கலே கூடாது என்று சொல்லவில்லை. நகைச்சுவைக்கு கொடுக்கும் வரவேற்பை நல்ல கருத்துள்ள இடுகைக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறேன்.உடனே என் பதிவுகள் நல்ல இடுகைகளா என்று சிலர் கேட்க கூடும். நான் ஒரு வாசகனாக இதை சொல்கிறேன்.என் எழுத்துக்களைப் பற்றி அல்ல.

srid.. said...

கார்க்கிக்கு நக்கல் பிடிக்கலையா?????????? என்ன மச்சி ஆச்சு? வாய தொறந்தாலே எவனயாவது வாருவ..இப்போ என்ன?

கிரி on August 13, 2008 at 5:20 PM said...

//நீங்கள் சொல்வது சரி என்கிறேன் கிரி..பின் ஏன் பொழுதுபோக்கு திரைப்படங்களை உலக சினிமாவொடு ஒப்பிட்டு ஏளனம் செய்கிறார்கள்?//

இதை கூற தான் எண்ணினேன். அப்படி கூறினால் ரஜினிக்கு வக்காலத்து வாங்குவதாக கூறுவார்கள்..அதனாலேயே கூறவில்லை :-)

கார்க்கி on August 13, 2008 at 5:51 PM said...

//இதை கூற தான் எண்ணினேன். அப்படி கூறினால் ரஜினிக்கு வக்காலத்து வாங்குவதாக கூறுவார்கள்..அதனாலேயே கூறவில்லை :-)//

கிரி எனக்கு தோண்றத சொல்றேன் தப்ப நினைச்சாலும் பரவா இல்ல...மத்தவங்களுக்காக நமக்கு புடிச்சத ஏன் மாத்தனும்? இப்பவும் சொல்றேன் திரையில் அவர் என்றுமே சூப்பர் ஸ்டார் தான்..ஒரு நடிகனாக ரஜினியை பிடிக்காதவர்கள் வெகு சிலரே..அவரின் சினிமா இல்லாத வாழ்க்கையைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் நடிகர் ரஜினியின் வெறியன்.

கிரி on August 13, 2008 at 6:10 PM said...

சரி விடுங்க...அவங்க அனைத்தும் அறிந்தவங்களாகவே இருந்துட்டு போறாங்க..

நீங்க தொடர்ந்து பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கார்க்கி on August 13, 2008 at 6:18 PM said...

//நீங்க தொடர்ந்து பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி கிரி...

 

all rights reserved to www.karkibava.com