Aug 4, 2008

குசேலனும் சில பின்னூட்டங்களும்...


வர வர நம் நண்பர்கள் ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா..குசேலனை தாக்கி பதிவு போட்டு ஹிட்ஸ் அடிப்பவர்கள் நான் அனுப்பும் பின்னூட்டங்களை போடுவதில்லை.இது வரைக்கும் நான் எழுதிய 4 பின்னூட்டங்கள் அவர்கள் அனுமதிக்கவில்லை.என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது கண நேரத்தில் தோண்றியது இந்த உபயம். நான் எழுதிய பின்னூட்டங்களை வைத்தே ஒரு பதிவு போட்டாலென்ன?
பி.கு: நான் பின்னூட்டங்களை மட்டறுப்பதில்லை.

குசேலனை பற்றிய என் முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

முதல் சிரிப்பு:

//டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான்//

முழுப்பதிவை படிக்க (பதிவு)

"தலைவரே பொய் சொல்ல ஒரு அளவே இல்லையா? அஞ்சு சீட்டுதான் காலினு நினைச்ச‌ நீங்க அதுல ஒன்னதான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பீங்க.அப்பவே அவங்க அது புக் ஆயிடுச்சுனு சொல்லி இருப்பாங்க..அது தெரியாம உள்ள போனேனு சொல்றத என்னனு சொல்றது?விடுங்க,நீங்க நினைச்ச மாதிரி உங்க பதிவு சூடான இடுகைகள்ல வந்துடுச்சு..அதுக்காவது ரஜினிக்கு நன்றி சொல்லுங்க...வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்பிள்ளைதணமா இல்ல இருக்கு...."

அடுத்த‌ சிரிப்பு :

// “என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”
பி.கு: *** என்பது சூப்பர் ஸ்டார் என அர்த்தம். நீங்கள் கெட்ட வார்த்தையை போட்டு படித்திருந்தால் நான் பொறுபல்ல. //

முழுப்பதிவை படிக்க (பதிவு)

என்னா சூப்பர் ஸ்டார் படம் எடுத்து வச்சிருக்கானுங்க சூப்பர் ஸ்டார்ங்க. கடுப்பு சூப்பர் ஸ்டார் தான் இருக்கு

இந்த வரியில் ஏதாவது அர்த்தம் இருக்கா நண்பர்களே? ஹிஹிஹி...அய்யோ அய்யோ

அடுத்து :

//இவை தவிர்த்து குசேலன் ஒரு நல்ல பொழுது போக்கு படம்,தமிழ் திரை உலகை உலக தரத்திற்கு உயர்த்தும் படம் அல்ல. பின் நவீனத்துவம், நுண்ணிய அரசியல், உலக தரம்,கன்னட நா*, குப்பை படம், நடிக்க தெரியாதவன் படம், சமீபத்திய ரஜினி சர்ச்சை என்கிற பார்வையில் (சம்பந்தப்படுத்தி) விமர்சனம் படித்தாலும், படம் பார்த்தவர்களுக்கும் பார்க்கப்போகிறவர்களுக்கும் படம் மொக்கை தான்.
மேலே நான் //

முழுப்பதிவை படிக்க (பதிவு)

கலக்கல் நண்பரே!!இந்த தெளிவு இவர்களுக்கு வர வேண்டும் என்றுதான் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பதிவு போட்டென்..யாரு கேட்குறா?சரி,உங்க பதிவ எப்படி சூடான இடுகைகள்ல வர விட்டாங்க?

அடுத்து :

//1. சண்டை காட்சி இல்லாமல் பன்ச் வசனங்கள் இல்லாமல் இது போன்ற கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது. இது நாள்வரை மசாலா பாடங்களையே கொடுக்கிறார் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. இதை பற்றி ஒரு சிறு பாராட்டை ஒரு பதிவில்கூட பார்த்ததாக நினைவில்லை.//

முழுப்பதிவை படிக்க (பதிவு)


மிகச் சரியான கேள்வி..விட்டுவிடுவோம் நண்பரே.. இல்லையேல்,ந‌ல்ல படத்தை மசாலாக்கி விட்டார் என்று அடுத்த குண்டை போடுவார்கள்.

அடுத்து :

குசேல கிரகணம் - இட்லிவடை பதிவு

முழுப்பதிவை படிக்க (பதிவு)

இந்த மாதிரி அனானிகளுக்கெல்லாம் தலைவர் ஸ்டைலில் ஒரு சர்தார்ஜி கதை சொல்றேன்.
ஒரு சர்தார்ஜி டாக்டர் கிட்டே போனான்.டாக்டர் எனக்கு உடம்புல எங்க தொட்டாலும் வலிக்குது.என்ன பன்னலாம்னு கேட்டான்.டாக்டர் அவன தொட்டு பார்க்க போனாராம்.அதுக்கு அவன் இருங்க டாக்டர் நானே தொடரன்.நீங்க‌ வலிக்கிர மாதிரி தொடுவிங்கனு சொன்னானாம்.டாக்டரும் ஒரு ஒரு இடமா தொட சொன்னா எல்லா இடமும் வலிக்குதுனு சொன்னானாம்.உடனே உடம்பு ஃபுல்லா x-ray எடுத்து பார்த்த எல்லாம் சரியா இருந்துதாம்.டாக்டருக்கு இவன் ஒரு சர்தாருனு லேட்டாதான் ஞாபகம் வந்தது.அவன் விரல x-ray எடுத்து பார்த்தா அந்த எலும்பு உடைஞ்சு போயிருந்துச்சாம்.
இந்த மாதிரி அனானி எல்லாம் ஞானிகள்..சாரி,ஞானி இல்லை ஞாநி..குமுதம் ஓ போடும் ஞாநி...குறை சொல்றதுகுன்னே இருக்கிறவங்க..இவங்க கோட போய் சண்டை போடுறீங்களே bleaching powder..பார்த்து blue cross ல உங்கள புடிச்சிட்டு போய்ட போறாங்க..

32 கருத்துக்குத்து:

கிஷோர் on August 4, 2008 at 11:30 AM said...

ஹா ஹா ஹா

மற்றும்

மீ தி ஃபர்ஸ்ட்டு

கிஷோர் on August 4, 2008 at 11:32 AM said...

உம் இடுகையில் பிழையிருக்கிறது.
//குசேலனும் சில பின்னுட்டங்களும்...//
அது குசேலனும் சில பின்னூட்டங்களும்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. :)

கிஷோர் on August 4, 2008 at 11:34 AM said...

//அஞ்சு சீட்டுதான் காலினு நினைச்ச‌ நீங்க அதுல ஒன்னதான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பீங்க.//

நான் அந்த பொண்ணுகிட்ட கடைசி ரோவில ஒரு சீட்ட போடுனு தான் சொன்னேன்.
(இந்த சமாளிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை)

கார்க்கி on August 4, 2008 at 11:40 AM said...

//நான் அந்த பொண்ணுகிட்ட கடைசி ரோவில ஒரு சீட்ட போடுனு தான் சொன்னேன்.
(இந்த சமாளிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை)
//
நான் எந்த டிஸ்கியும் போடாத போதும் இதை நகைச்சுவையாக எடுத்து கொண்டதற்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி கிஷோர்

கிரி on August 4, 2008 at 12:06 PM said...

கார்க்கி நீங்க எனக்கு பின்னூட்டம் எதுவும் இது வரை போடவில்லை, அதனால வெளியிடலன்னு கூறி என்னை தாக்கிடாதீங்க ஹி ஹி ஹி ஹி

//உங்க பதிவ எப்படி சூடான இடுகைகள்ல வர விட்டாங்க?//

:-)) கருத்துக்கள் இல்லை (no comments)

கார்க்கி on August 4, 2008 at 12:09 PM said...

//கார்க்கி நீங்க எனக்கு பின்னூட்டம் எதுவும் இது வரை போடவில்லை, அதனால வெளியிடலன்னு கூறி என்னை தாக்கிடாதீங்க ஹி ஹி ஹி ஹி //

அய்யா, நான் போட்ட பின்னூட்டங்களை மீண்டும் போட விரும்பவில்லை.அதனால் இனிமேல் எழுதும் பின்னூட்டங்களை இங்கே போடலாம் என நினைத்தேன்.அதை விளக்காதது என் தவறுதான்.

கிஷோர் on August 4, 2008 at 12:14 PM said...

எப்படியாவது 1 மணி நேரத்துக்கு ஒரு பின்னூட்டம் போட்டு உங்களையும் சூடான இடுகையாக்குவோம் :)

கார்க்கி on August 4, 2008 at 12:17 PM said...

//எப்படியாவது 1 மணி நேரத்துக்கு ஒரு பின்னூட்டம் போட்டு உங்களையும் சூடான இடுகையாக்குவோம் :)//

இதுக்கு பின்னால முன்னால சைடுல பக்கவாட்டுல உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லையே?

கிஷோர் on August 4, 2008 at 12:22 PM said...

ஒரு மாதத்தில் 41 இடுகைகள்?

அவ்வ்வ்வ்வ்வ்.....

Word ©Copyright ச்சின்னப்பையன்

:)

கிஷோர் on August 4, 2008 at 12:23 PM said...

//இதுக்கு பின்னால முன்னால சைடுல பக்கவாட்டுல உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லையே?//

Lightaaa ;-)

கார்க்கி on August 4, 2008 at 12:35 PM said...

//ஒரு மாதத்தில் 41 இடுகைகள்?

அவ்வ்வ்வ்வ்வ்.....

Word ©Copyright ச்சின்னப்பையன்//

எதுக்கு ச்சின்னப்பையன்? புரியவில்லை நண்பரே

sri said...

kalakkal kaarki...

Bleachingpowder on August 4, 2008 at 9:02 PM said...

தூள் கிளப்புங்க கார்க்கி !! இட்லி வடையாரோட பதிவில எல்லா ஆனாத(ஆனானி) பயலுகளையும் ஒட ஒட விரட்டிட்டு இருக்கேன். நேரம் இருந்தா நீங்களும் வந்து கொஞ்சம் கும்மிட்டு போங்க.
http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post.html

கார்க்கி on August 5, 2008 at 10:49 AM said...

//தூள் கிளப்புங்க கார்க்கி !! இட்லி வடையாரோட பதிவில எல்லா ஆனாத(ஆனானி) பயலுகளையும் ஒட ஒட விரட்டிட்டு இருக்கேன். நேரம் இருந்தா நீங்களும் வந்து கொஞ்சம் கும்மிட்டு போங்க//

நன்றி நணபரே!!!இதோ வருகிறேன்.... யாரங்கே? யாரங்கே? யாரடா அங்கே?

கார்க்கி on August 5, 2008 at 10:52 AM said...

ஒரு வழியா நானும் சூடான இடுகைகள் வரிசையில வந்துட்டேன்.. நன்றி தலைவா...இனிமேலும் குசேலன் படத்தால் ஒரு பயனும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள் என் நினைக்கிறேன்

கார்க்கி on August 5, 2008 at 11:32 AM said...

புதுசா ஒரு பின்னூட்டம் சேர்த்திருக்கிறேன் நண்பர்களே

மனதின் ஓசை on August 5, 2008 at 12:19 PM said...

//மிகச் சரியான கேள்வி..//
பதில் சொல்ல யாருக்கும் மனதில்லை. சரி விட்டு விடுவோம்..

//விட்டுவிடுவோம் நண்பரே.. இல்லையேல்,ந‌ல்ல படத்தை மசாலாக்கி விட்டார் என்று அடுத்த குண்டை போடுவார்கள்.//
அதெல்லாம் ஆல்ரெடி போட்டாச்சு..

கிரி on August 5, 2008 at 12:53 PM said...

ஹா ஹா ஹா கார்க்கி போட்டு தாக்குறீங்க :-)))

கார்க்கி on August 5, 2008 at 2:48 PM said...

//ஹா ஹா ஹா கார்க்கி போட்டு தாக்குறீங்க :-)))//

இது எதற்கு கிரி? சர்தார்ஜி கதைக்கா?

கிருஷ்ணா on August 6, 2008 at 12:13 AM said...

படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்

கிஷோர் on August 6, 2008 at 7:10 AM said...

அவ்வ்வ்வ்வ்வ் என்ற வார்த்தைக்கு கிட்டத்தட்ட Copyright வாங்கி வைத்திருக்கிறார் சகபதிவர் ச்சின்னப்பையன்.

எனவே அந்த வார்த்தையை எங்கு உபயோகப்படுத்தினாலும் அங்கு Word ©Copyright ச்சின்னப்பையன் போட்டு கலாய்ப்பது நம் வழக்கம்

கிஷோர் on August 6, 2008 at 7:12 AM said...

//ஒரு வழியா நானும் சூடான இடுகைகள் வரிசையில வந்துட்டேன்.. நன்றி தலைவா...//

இப்போ புரியுதா எதுக்கு எல்லோரும் மொக்க போடுறோம்னு? :)

கிரி on August 6, 2008 at 8:04 AM said...

//
இது எதற்கு கிரி? சர்தார்ஜி கதைக்கா?//

எல்லாவற்றுக்கும் :-)))

//கிஷோர் said...
அவ்வ்வ்வ்வ்வ் என்ற வார்த்தைக்கு கிட்டத்தட்ட Copyright வாங்கி வைத்திருக்கிறார் சகபதிவர் ச்சின்னப்பையன்.//

ஹா ஹா ஹா ஹா

வந்தியத்தேவன் on August 6, 2008 at 8:42 AM said...
This comment has been removed by the author.
கார்க்கி on August 6, 2008 at 9:25 AM said...

//அவ்வ்வ்வ்வ்வ் என்ற வார்த்தைக்கு கிட்டத்தட்ட Copyright வாங்கி வைத்திருக்கிறார் சகபதிவர் ச்சின்னப்பையன்.//

அவ்வ்வ்வ்வ்வ்...இதற்கு கூட Copyright கொடுக்கறாங்களா?

(Word ©Copyright ச்சின்னப்பையன்)

கார்க்கி on August 6, 2008 at 9:29 AM said...
This comment has been removed by the author.
கார்க்கி on August 6, 2008 at 9:30 AM said...

//இப்போ புரியுதா எதுக்கு எல்லோரும் மொக்க போடுறோம்னு? :)//


புரியுது கிஷோர்...ஆனா ஒரு சந்தேகம்..தமிழ்மணத்திலே மொக்கை பதிவுகள்தான் சூடான் இடுகை ஆகிற‌து.பல நல்ல இடுகைகள் கவனத்தில் வருவதே இல்லை..ஆனால் சினிமா என்று வரும்பொது எல்லோரும் ஏன் பொழுதுபோக்கு படங்களை தாக்குகிறார்கள்?

கிஷோர் on August 6, 2008 at 9:46 AM said...

ஆங்கில படங்கள் பார்ப்பது பெருகி வருவதும், பேரரசு மாதிரி சில இயக்குனர்கள் திறமை இருந்தும் ட்ரெண்டை மாற்றுவதும், எப்போதாவது வந்து போகும் நல்ல படங்களும் தான் காரணம்.
மேலும் நல்ல படங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் தான்.

இதைப்பற்றி என் பதிவு

http://pathividukiren.blogspot.com/2008/06/blog-post.html

Bleachingpowder on August 6, 2008 at 10:48 AM said...

//படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்//

இதுல என்ன பச்சோந்திதனம் இருக்கு. காச போட்டு படம் வாங்கின விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பாதிக்க படக்கூடாதுறதுக்காக அவர் வருத்தம் தெரிவித்தார்.

இது என்ன சத்தியராஜ் படமா வெறும் நாலு தியேட்டர்ல ரிலிஸ் பண்ணி ரெண்டு நாள்ல தூக்கிட்டு அடுத்த வாரம் கலைஞர் டிவில போடறதுக்கு.

கர்நாடகாவில் ரஜினி படம் வெளிவந்தால் அதற்கு அவருக்கு தனி சம்பளமெல்லாம் கிடையாது.

கர்நாடகாவில் தலைவர் படம் வெளிவந்தால் அதில் நாலு பேர் பிழைப்பார்கள் என்ற நல்லென்னத்தில் தான் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மத்த மாநிலத்துகாரன் நம்ம ஊர்ல வந்து சம்பாதிக்கறது நமக்கு பொறுக்கல. அதனால அவர் என்ன செய்தாலும் நொள்ள சொல்றீங்க. இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது.

அப்புறம் யாராச்சும் வந்துருவிங்களே ரஜினி தமிழ்நாட்டிற்க்கு என்ன பண்ணினாருன்னு பிச்சை எடுக்க.

கார்க்கி on August 6, 2008 at 11:42 AM said...

//மத்த மாநிலத்துகாரன் நம்ம ஊர்ல வந்து சம்பாதிக்கறது நமக்கு பொறுக்கல. அதனால அவர் என்ன செய்தாலும் நொள்ள சொல்றீங்க. இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது.
//மண்ணித்து கொள்ளுங்கள் நண்பர்களே!!! கன்னடத்துகாரனுக்கு இங்கே என்ன வேலை என்று சொல்லும் பலரும் இப்போது தமிழகத்தில் இல்லை...வேலை நிமித்தமாக வேறு நாடுகளிலோ அல்லது வேறு மாநிலத்தில் இருக்கிறார்கள். நாம் சம்பாதிக்க அங்கு செல்லலாம்.ஆனால் வேறு யாரும் இங்கே வரக் கூடாது என்பது தான் பச்சோந்தி தனம்..
ரஜினியை அடக்க நான் ஒரு வழி சொல்கிறேன்.அவர் படங்கள் அதிக வசூலை கொடுக்க கூடாது.அதற்கு அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்.அதனால் தான் தமிழ்சினிமாவின் பாதுகாவலர்களுக்கு ஒரு படம் வெளிவரும் முன்னரே ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.அதை விட்டு விட்டு வேறு எதுவும் எழுதுவதற்கு இல்லை என்பது போல் இந்த பட்த்தை பார்த்து விட்டு கிழிப்பவர்கள் மறைமுகமாக அவரை வளர்த்துவிடுகிறார்கள்.அதற்கு நன்றி சொல்லுங்கள் bleaching powder

Anonymous said...

//ரஜினியை அடக்க நான் ஒரு வழி சொல்கிறேன்.அவர் படங்கள் அதிக வசூலை கொடுக்க கூடாது.அதற்கு அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்.//

அந்த வழி ரஜினிக்கே தெரியும் போல.
குசேலன் மாதிரி இன்னும் ரெண்டு படம் கொடுத்தாப் போதும்.

கார்க்கி on August 6, 2008 at 2:24 PM said...

//அந்த வழி ரஜினிக்கே தெரியும் போல.
குசேலன் மாதிரி இன்னும் ரெண்டு படம் கொடுத்தாப் போதும்.//

அப்போ கூட இவங்க எல்லாம் படம் பார்த்துதான் விமர்சனம் எழுத போறாங்க..அது போதுமே...குசேலன விட பாபா ஃப்ளாப்..அதுக்காக ரஜினி அவ்வளவுதானா....உங்களுக்கு ரஜினியோட பவர் பத்தி தெரியல..ந்மக்கு புடிக்குதோ இல்லையோ அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பத ஒத்து கொள்ளத்தான் வேண்டும்...

நமக்கு தான் பேர் சொல்லவே தைரியம் இல்லையே அப்புறம் எதுக்கு அவர பத்தி எல்லாம் பேச்சு?

 

all rights reserved to www.karkibava.com