Aug 7, 2009

ஜென்...சச்சின்...விஜய்


புல்லின் இதழையும் புத்தராக பாவித்துக்கொள் என்கிறது ஜென் தத்துவம்.எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவதுதான் ஜென் மனநிலை. அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வது கடினம். புற உலகின் எரிச்சல், பொறாமை, சூழ்ச்சி, புன்னகை, கண்ணீர் என் எல்லாவற்றையும் மேலேயே மிதக்க விட்டுவிட்டு அடிஆழத்தில் சலனமற்று நகர்ந்துக் கொண்டிருக்கும் நதியைப் போன்றது அந்த மனநிலை.

தமிழில் நவீன கவிஞர்களின் நிறைய கவிதைகளில் ஜென் கூற்றுகளை காணலாம். தேவதச்சன், கலாப்பிரியா,கல்யான்ஜி,ரமேஷ் ப்ரேம் என அப்பட்டியல் நீளும்.ஜென் கவிதைகளில் இருந்து கிளைப் பிரிந்த வடிவம் தான் ஹைக்கூ. ஹைக்கூ கவிதைகளின் பிதாமகர் எனப் போற்றப்படும் "பாஷே" வின் "Traveling through a narrow crooked path" என்ற சுயசரிதையில் ஜென் தத்துவக் கவிதைகள் பல காணலாம். அவரின் புகழ்பெற்ற ஹைக்கூ ஒன்று

பழைய குளம்
தவளை குதிக்கிறது
க்ளக் க்ளக்...

An old pond

A frog jumps in —

Sound of water.

தமிழ்த் திரைப்பட பாடல்களில் ஜென் தத்துவங்களை காண்பது அரிது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தி ஜென் தத்துவ தரிசனத்தை தர முத்துக்குமார் மறப்பதில்லை.

சச்சின் என்ற படத்தில் வரும் "கண் மூடி திறக்கும்போது" என்றப் பாடலை இத்தகைய மனநிலையில் எழுதபட்ட பாடலாக பாடலாசிரியர் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வரியும் ஒரு ஹைக்கூ போலவே எழுதி இருப்பார்.

உன் பேரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா"

இந்த வரிகள் மிகச்சாதாரணமன வரிகள் போல் தெரிந்தாலும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மிக அழகாக இருக்கும்.

பாடலை படியுங்கள்.எனக்கு இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் பிடிக்கும். இப்பாடலை நிசப்தமான இரவுப் பொழுதுகளில் கேட்கும் போது உடல் லேசாகி பறக்கும் உணர்வு தோண்றும். இந்தப் பாடலை கேட்க மட்டுமல்ல, பார்ப்பதற்கும் நன்றாய் இருக்கும்.விஜயின் குறும்புத்தனத்தை இயக்குனர் அழகாய் உபயோகப்படுத்தி இருப்பார்.குறிப்பாக "வீதி உலா நீ வந்தால்" என்ற வரிக்கு விஜயின் முக பாவனைகள் வெகு சிறப்பு. என்னைப் பொறுத்தவரை விஜய் அழகாக இருப்பது இந்தப் படத்திலும் அதுவும் குறிப்பாய் இந்தப் பாடலில்தான்.அவருக்கு வயதாகுவதற்குள் இதுப் போல இன்னும் சிலப் படங்களில் நடிக்க வேண்டும்..நாயகன் நாயகி இருவரின் உடைகளும் படம்பிடித்த இடத்திற்கு ஏற்றவாறு அமைந்தது மற்றுமொரு சிறப்பு. ஜீவாவின் கேமிரா குளிர்ச்சியாய் இருக்கும்.இதற்கு மெட்டமைத்து தானே பாடியுமிருக்கிறார் இசையமைப்பாளர் தேவி பிரசாத்.

பல்லவி

கண் மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னே
அவளே வந்து நின்றாளே!

குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டிப் போகும் மழையைப் போல‌
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாளே!

தெரு முனையைத் தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன்!

அழகான விபத்தில் இன்று
அய்யோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்!

சரணம் 1

உன் பேரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா

நீ என்னைப் பார்க்காமல்
நான் உன்னைப் பார்க்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா?

உயிருக்குள் இன்னொருயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா?
இத‌யத்தில் மலையின் எடையை
உணர்கின்றேன் காதல் இதுவா?

சரணம் 2

வீதி உலா நீ வந்தால்
தெரு விள‌க்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும்
அடம் பிடிக்குமே!

நதியோடு நீ குளித்தால்
மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னைத் தொட்டுப் பார்க்கத்தான்
மழை குதிக்குமே!

பூகம்பம் வந்தால் கூட‌
புரளாத நெஞ்சம் எனது
பூ ஒன்று மோதியதாலே
சட்டென்று சரிந்தது இன்று!

41 கருத்துக்குத்து:

Sundar on August 28, 2008 at 9:30 PM said...

உங்கள் பாடல் ரசனை அழகு. 'prayer of the frog' books உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் - ஜென் தத்துவங்களுக்காக.

கார்க்கி on August 29, 2008 at 9:39 AM said...

ஆமாம் சுந்தர். அதன் ஆசிரியர் ஆந்தோனி டி மெல்லோவின் "the song of the bird" என்ற புத்தகத்தை பாதி படித்து விட்டு தொலைத்து விட்டேன்.. இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும்.. வந்தமைக்கு நன்றி

KA.... said...

அழகான விபத்தில் இன்று
அய்யோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்!
....beautiful lines.

Video...something new in ur blog. Good idea..

narsim on October 18, 2008 at 2:03 PM said...

சகா..

மிக நல்ல பதிவு.. அடர்த்தியான விசயங்கள்..

தொடரட்டும் இதுபோன்ற பதிவுகள்..

நல்ல பதிவுக்கு நன்றி சகா..

நர்சிம்

கார்க்கி on October 18, 2008 at 2:14 PM said...

ஊக்கத்திற்கு நன்றி சகா...

விஜய் ஆனந்த் on October 18, 2008 at 11:56 PM said...

எங்கயோ ஆரம்பிச்சு, எங்கயோ போய்ட்டீங்க!!!

சொன்ன விதம் அருமை!!!

btw, இந்த பாட்டு எனக்கு ரொம்ம்ம்ப பி்டிக்கும்...பி்டிக்கும்னு சொல்றதவிட, ஒவ்வொரு தடவ கேக்கும்போதும், மனசுக்குள்ள ஏதோ ஒடையிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்...

theni_ganesh said...

அருமையான பாடல் ... பாடலாசிரியர் , இசை அமைப்பாளர் , நடன இயக்குனர் , நடிகை மற்றும் நடிகர் உழைப்பு ஒன்றினைந்துள்ளது ... ஒரு கேள்வி ..அனைத்து நவீன தமிழ் திரை இசை பாடல்களின் வரி வடிவம் எந்த இணையத்தில் கிடைக்கும் ? அதுவும் பாடல் ஆசிரியர்களின் பெயர்படி வரிசைபடுத்தப் பட்டு இருந்தால் இன்னும் சிறப்பு ...

கார்க்கி on October 19, 2008 at 11:53 AM said...

வாங்க விஜய்..

/எங்கயோ ஆரம்பிச்சு, எங்கயோ போய்ட்டீங்க!!!
//

தொடர்பில்லாம எழுதறேனு சொல்றீங்களா?????????

கார்க்கி on October 19, 2008 at 11:55 AM said...

/theni_ganesh said...
அருமையான பாடல் ... பாடலாசிரியர் , இசை அமைப்பாளர் , நடன இயக்குனர் , நடிகை மற்றும் நடிகர் உழைப்பு ஒன்றினைந்துள்ளது ... ஒரு கேள்வி ..அனைத்து நவீன தமிழ் திரை இசை பாடல்களின் வரி வடிவம் எந்த இணையத்தில் கிடைக்கும் ? அதுவும் பாடல் ஆசிரியர்களின் பெயர்படி வரிசைபடுத்தப் பட்டு இருந்தால் இன்னும் சிறப்பு ...//


வருகைக்கு நன்றி நண்பரே..

இந்த இணையத்தளத்தில் http://lyricstamil.com/ தேடுங்கள்.. ஆனால் இந்தப் பாடல்கள் எல்லாம் நானே தட்டச்சு செய்தது..

தமிழ்ப்பறவை on November 3, 2008 at 3:18 PM said...

முழுப்பதிவுமே ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டு....simply superb

கார்க்கி on November 3, 2008 at 4:17 PM said...

நன்றி பறவை

radhika on August 7, 2009 at 9:54 AM said...

beautiful song karki. i love it.

well written.

நாஞ்சில் நாதம் on August 7, 2009 at 10:04 AM said...

ஒஹோ இதுதான் பாட்டுக்கு விளக்கம் எழுதுறதா ?

நல்லாயிருக்கு

டக்ளஸ்... on August 7, 2009 at 11:04 AM said...

மீள்ஸ்..!
அழுதுருவேன்.

டக்ளஸ்... on August 7, 2009 at 11:06 AM said...

\\நாஞ்சில் நாதம் said...

ஒஹோ இதுதான் பாட்டுக்கு விளக்கம் எழுதுறதா ?

நல்லாயிருக்கு\\\

ஒருவேளை, நாஞ்சிலாரோட ப்ளாக்க‌ ஹேக் செஞ்சுட்டாங்களோ..!
:)

ghost on August 7, 2009 at 11:59 AM said...

கண் மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னே
அவளே வந்து நின்றாளே!

குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டிப் போகும் மழையைப் போல‌
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாளே!

தெரு முனையைத் தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் என்றிருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று
திருநாள் என்கின்றேன்!

அழகான விபத்தில் இன்று
அய்யோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்!

அழகான பாடல்

குரு on August 7, 2009 at 12:34 PM said...

//
குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டிப் போகும் மழையைப் போல‌
அழகாலே என்னை நனைத்து
இதுதான் காதல் என்றாளே!
//

I love these line in this song. Even Im not a fan of Vijay, I jus love this song for these lines.

பிரியமுடன்.........வசந்த் on August 7, 2009 at 12:35 PM said...

//வீதி உலா நீ வந்தால்
தெரு விள‌க்கும் கண்ணடிக்கும்
வீடு செல்ல சூரியனும்
அடம் பிடிக்குமே!//

இந்த வரிகள்தாம் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் விஜயின் முகபாவனையோடு.........

வால்பையன் on August 7, 2009 at 12:36 PM said...

முத்துகுமார் பாடல்களை இனி ஆழ்ந்து கவனிக்க செய்து விட்டீர்கள்!

ஒரு சந்தேகம் பாடல்களை ஆழ்ந்து கவனிக்க யாரையாவது காதலிக்க வேண்டுமாமே! உண்மையா!?

தராசு on August 7, 2009 at 12:47 PM said...

ஒரு தினுசாத்தான் திரியறாய்ங்க, பாட்டுங்கறாய்ங்க, காதல்ங்கறாய்ங்க, கனவுங்கறாய்ங்க,

ம்ஹூம், மொக்கச்சாமிகளா, ஒரு நல்ல பையன் இப்படி கெட்டுப்போறானே, கொஞ்சம் கவனிக்க மாட்டிங்களா.....????

ஆனா,

//எதைச் செய்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவதுதான் ஜென் மனநிலை. அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வது கடினம்.//

புரியுது, புரியுது.

Anonymous said...

ஒரு தினுசாத்தான் திரியறாய்ங்க, பாட்டுங்கறாய்ங்க, காதல்ங்கறாய்ங்க, கனவுங்கறாய்ங்க,//

athane..

தராசு on August 7, 2009 at 1:10 PM said...

ஹலோ,

நல்ல பையன் கெட்டுப் போறானேன்னு சொன்னா ஒரு மொக்கைச்சாமி, மொக்கையே போடாம, அடிக்கடி, பாட்டு, கவிதைன்னு ட்ராக் மாறிகிட்டிருக்காரேங்கற கவலைதான்.

ம்றுபடியும் ஒரிஜினல் ட்ராக்குக்கு வரும்படி கோரிக்கை வைக்கப்படுகிறது.

SK on August 7, 2009 at 1:20 PM said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும் கார்க்கி இந்த பாட்டு

நல்ல பதிவு.

புலியூரான் "ராஜா" on August 7, 2009 at 1:33 PM said...

இம்புட்டு அறிவாளியா இருக்குற நீங்க எப்டி இன்னும் விஜய் ரசிகரா இருக்கீங்க?
இந்த பாட்டுல விஜய விட ஜெனிலயா ரொம்ப கியுட்டா இருப்பாங்க.... ரொம்ப அழகு பாத்துகிட்டே இருக்கலாம்... அதும் அந்த ஐஸ் கிரீம்மா மூக்குல வட்சிகிட்டு பாவமா ஒரு பார்வை பாப்பாங்களே... no chance

புலியூரான் "ராஜா" on August 7, 2009 at 1:33 PM said...

இம்புட்டு அறிவாளியா இருக்குற நீங்க எப்டி இன்னும் விஜய் ரசிகரா இருக்கீங்க?
இந்த பாட்டுல விஜய விட ஜெனிலயா ரொம்ப கியுட்டா இருப்பாங்க.... ரொம்ப அழகு பாத்துகிட்டே இருக்கலாம்... அதும் அந்த ஐஸ் கிரீம்மா மூக்குல வட்சிகிட்டு பாவமா ஒரு பார்வை பாப்பாங்களே... no chaance

டக்ளஸ்... on August 7, 2009 at 2:00 PM said...

\\இம்புட்டு அறிவாளியா இருக்குற நீங்க எப்டி இன்னும் விஜய் ரசிகரா இருக்கீங்க? \\

வன்மையாக கண்டிக்கின்றேன் ராஜா.
அடுத்தவர்களின் பர்சனலில் தலையிடுகின்றீர்.
பதிவிற்கு தேவையில்லாத விஷயம்.

புலியூரான் "ராஜா" on August 7, 2009 at 2:11 PM said...

டக்லஸ் ... சபைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தான....

வால்பையன் on August 7, 2009 at 2:15 PM said...

//இம்புட்டு அறிவாளியா இருக்குற நீங்க எப்டி இன்னும் விஜய் ரசிகரா இருக்கீங்க? //

இதுக்கு பேர் தான் மில்லியன் டாலர் கேள்வி என்பதா!?

ஒருவேளை கார்க்கி, விஜய் பாட்டுக்கு வாயசைத்ததுக்கே ரசிகர் ஆகிட்டாரோ!

டக்ளஸ்... on August 7, 2009 at 2:20 PM said...

\\புலியூரான் "ராஜா" said...
டக்லஸ் ... சபைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்தான....\\

சும்மா சாம்புரானி போடாதீங்க..!
அது ஏங்க, எதிராளிக்கிட்ட திறமையிருந்தாலும் நம்மளால பாரட்ட முடியமாட்டேங்குது..?
ஏதாவது நொட்டனை சொல்லிக்கிட்டே இருக்கோம்.

முதலமைச்சர் 2011 on August 7, 2009 at 8:09 PM said...

//இம்புட்டு அறிவாளியா இருக்குற நீங்க எப்டி இன்னும் விஜய் ரசிகரா இருக்கீங்க?//

அதனாலத்தான் விஜய் ரசிகரோ என்னவோ. ராஜா அவர்களே, நமக்கு பிடித்தது எல்லாம் மத்தவங்க‌ளுக்கும் பிடிக்கனும்னு ஏன் நினைக்கறீங்க? எனக்கும் விஜய் படங்கள் பிடிக்காது. ஆனால் அவரின் நடனம் நல்லா இருக்கும். அதுவும் இந்தப் பாடல் பார்க்க அருமையா இருக்கும். மத்தவங்க ரசனையை மதிக்க கத்துக்கோங்க.

அப்புறம் நீங்களும் பொதுவுக்கு வந்துவிட்டதால் எந்த கேள்வியென்றாலும் கேட்கலாமா? இது கார்க்கியின் பதிவு என்பதால் கேட்காமல் செல்கிறேன்.

பதிவு கலக்கல் சகா. இது போலவும் அடிக்கடி எழுதுங்கள்.

vettipaiyan on August 8, 2009 at 1:10 AM said...

Super song கார்க்கி
Real HERO Namma Ellaya Vairamuthu NA. Muthukumar தான்
உஙக தல விஜய் தன் நடிப்பால் கலக்கி இருப்பர் ?
யப்பா, கார்க்கி உலக விசயங்கள் எல்லாக் கலக்கரீஙக , ஆனா ?
விஜயின் குறும்புத்தனத்தை பார்க்க காணக் கண் கோடி வேண்டும், பாடல் ஆரம்பத்தில் சுவத்தில் சாய்ச்ட்டு இருப்பார் , super , Jackson BACK
Jenelia ICE Cream சாப்பிடும் போது பார்பார்பாருஙக ஒரு பார்வை , உடனே விஜய் கட்சி உருப்பினர் ஆயிடலாம், சான்ஸ்சே இல்லை


வீதி உலா நீ வந்தால்" என்ற வரிக்கு விஜயின் முக பாவனைகள் , Pre school Kids கிட்ட இந்த வரி சொல்லி இருந்தா , இப்படி பண்ண முடியாது, அவ்வளவு குழைந்தைதனம்,
இந்த வரி ஆரம்பதில் ஒரு நடை நடப்பார், 16 வயதினிலே கமல் Waste,
கார்க்கி ( கொ. ப. செ ) ( விஜய் கட்சி ) போதுமா, எப்படியாவது, துணை கொள்கை பரப்பு செயலாலர் பதவி Please.

Vijay Rasikan Vettipaiyan

vettipaiyan on August 8, 2009 at 1:23 AM said...

Sorry கார்க்கி
இந்த் பாடலில், விஜய் தன் காதலியை கிண்டல் செய்வது போல் நடித்து இருப்பார், ஆனால், வரிகள் உருகி பாடுவது போல் இருக்கும், இந்த முரண்பாடுகளுக்கு யார் காரணம், விஜய் அல்லது டான்ஸ் மாஸ்ட்டர்

Sorry கார்க்கி , புரியவில்லை
உண்மையான கலை ரசிகர்கள் , இதனை உணர்வார்கள்

டம்பி மேவீ on August 8, 2009 at 4:16 AM said...

enakku piditha orey vijay padal ithu ....


varigalum arumaai irukkum......

Kathir on August 8, 2009 at 8:10 PM said...

இப்போதான் முதல்முறையா இந்தப்பாட்டு கேட்டேன்.

நல்லா இருக்கு சகா.

சந்ரு on August 8, 2009 at 11:03 PM said...

நல்லாருக்கே...

கார்ல்ஸ்பெர்க் on August 10, 2009 at 3:02 PM said...

//அவருக்கு வயதாகுவதற்குள் இதுப் போல இன்னும் சிலப் படங்களில் நடிக்க வேண்டும்..//

அண்ணா, அவசரப்பட்டு இப்படி ஒரு வார்த்தைய சொல்லிடீங்க?? தளபதி எப்பவுமே நம்மள மாதிரி யூத் தான்.. இன்னும் 12 வருசத்துக்கு அப்பறமும் நாங்க காலேஜ் ஸ்டுடென்ட்'ஆ நடிப்போம்'ல..

ஷாஜி on August 10, 2009 at 7:42 PM said...

me too like the lyrics and tune of the song. As you said vijay is simply superb in this song...

ராமய்யா... on August 11, 2009 at 11:12 AM said...

Very Good Song.. But wasted drastically by giving it to Ilaya thalavali

விக்னேஷ்வரி on August 11, 2009 at 3:56 PM said...

எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடல் இது. அழகா எழுதிருக்கீங்க கார்க்கி.

கார்க்கி on August 11, 2009 at 5:45 PM said...

அனைவருக்கும் நன்றி.

கார்ல்ஸ்பெர்க், நம்ம கட்சியா? வாங்க வாங்க

ஷாஜி, ரொம்ப நன்றிப்பா.. :))

ராமய்யா, உங்க ரசனைக்கு ஒரு சல்யூட்

நன்றி விக்கி

பட்டிக்காட்டான்.. on August 12, 2009 at 3:22 AM said...

coincidence..

உங்க பதிவ படிக்கும்போது சரியா அந்த பாட்டு என் பிளேயர்ல பாடிட்டு இருந்தது..

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..

 

all rights reserved to www.karkibava.com