Aug 19, 2008

நான் ரசித்த பாடல்கள்


காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் வரும் காதல் உரிமையாளன் போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது.காலம்காலமாக இந்த மண்ணில் ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒரு தலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம் பெற்றிருக்கின்றன.
"இந்த சோகம்கூட சுகமானது.ஏனென்றால் இது நீ தந்தது" என்கிறான் ஒரு உருதுக் கவிஞன்.தண்ணீரை விடவும் இரத்தததை விடவும் அடர்த்தியானது கண்ணீர்த் துளி.இதயத்தின் அறைகளில் இமயத்தின் பாரத்தை எடுத்து வைப்பவை காதல் தோல்விப் பாடல்கள். அப்படி முத்துக்குமார் எழுதிய ஒருப் பாடல்தான் "7ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் வந்த "கண் பேசும் வார்த்தைகள்". இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அதன் உள்ளே ஊடாடிக்கொண்டிருக்கும் வலி நம் உயிருக்குள் ஊஞ்சலாடும்.
இந்தப் பாடல் உருவானதற்குப் பின்னால் நடந்த சம்பவங்களை பற்றி முத்துகுமார் "கண்பேசும் வார்த்தைகள்" என்ற புத்தகத்தில் இப்படி கூறுகிறார். "ஒரு நாள் அதிகாலையில் செல்வராகவன் அழைத்து இந்தப் படத்தின் முழுக்கதையும் சொன்னார்.அந்தக் கதையில் இருந்த உலகத் தரமும், நக‌ர்ப்புற இளைஞர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றமும் கேட்ட உடனேயே வசீகரித்தன.இந்தப் பாடலின் சூழலை சொல்லும் இயக்குனர் //நாயகன் விரும்பும் பெண் இவனைத் தவறாக புரிந்துக் கொண்டு செருப்பால் அடித்து விடிகிறாள்.அவளுக்கு வேறொருவனுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.இன்த‌ சூழ‌லில் நாய‌க‌ன் பாடுகிறான்.உன்னுட‌ன் ஒரு நாளாவ‌து வாழ‌ மாட்டேன‌ என்ற‌ உருக்க‌ம் வ‌ரிக‌ளில் இருக்க‌ வேண்டும்// என்றார் செல்வ‌ராகவ‌ன்.யுவ‌னின் பிர‌மாத‌மான‌ மெட்டும் த‌யாராகி விட்ட‌து. அலைவ‌ரிசை ஒத்துப்போகும் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ணியாற்றும்போது என் எழுதுகோல் ச‌ல‌ங்கை க‌ட்டி கொள்ளும்"
உண்மைதான்.முத்துகுமாரின் பாட‌ள்க‌ளில் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ பாட‌ல்க‌ளில் இதுவும் ஒன்று.ஒரு த‌லை காத‌லுக்கு ப‌ல‌ க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ உருவ‌க‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார்க‌ள்.ஆனால் இந்த‌ப் பாட‌லில் இவ‌ர் தந்த‌ "காட்டிலே காயும் நில‌வை க‌ண்டு கொள்ள‌ யாருமில்லை " என்ற‌ வ‌ரியும் " தூர‌த்தில் தெரியும் வெளிச்ச‌ம் பாதைக்கு சொந்த‌மில்லை " என்ற‌ வ‌ரியும் மிக‌ச் சிற‌ந்த‌து என்ப‌து என் க‌ருத்து.
நாய‌கி த‌ன்னை விட்டு பிரிந்த‌ போதும் அவ‌ளின் நினைவுக‌ள் த‌ன்னுட‌னே உண்டு என்ப‌தை விள‌க்க‌ பாடலாசிரிய‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தும் கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளைப் ப‌டிக்கும் போது ஏதோ ஓர் இன‌ம்புரியாத‌ உண‌ர்வு நம்மை ஆட்கொள்கிற‌து.
"காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும் கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை"
"அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌ம‌டி"
கார்த்திக்கின் உருக்க‌மான‌ குர‌லும்,யுவ‌னின் ம‌ன‌தைப் பிழியும் மெட்டும், அர‌விந்த் கிரிஷ்னாவின் அரையிருள் ஒளிப்ப‌திவும் முத்துக்குமாரின் வ‌ரிக‌ளுக்கு ப‌க்க‌ ப‌ல‌மாய் இருந்த‌து. இந்த‌ப் பாட‌லிலும் த‌னுஷே ந‌டித்திருந்தால் இன்னும் சிற‌ப்பாய் இருந்திருக்கும் என்றாலும் பாடலை கெடாம‌ல் பார்த்துக்கொண்ட‌தில் தேறியிருக்கிறார் ர‌வி கிருஷ்ணா. நான் கோத்ரேஜில் வேலை செய்த போது இந்த‌ப் பாட‌லைப் பாடித்தான் முத‌ல் ப‌ரிசு பெற்றேன் என்ப‌து என்ன‌ள‌வில் இந்த‌ப் பாட‌லை இன்னும் நெருக்க‌மாக்கிய‌து.
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய‌ கண்ணாடி இதயமில்லை‍ கடல் கை மூடி மறைவதில்லை!!
காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும் கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள்மணம் மறப்பதில்லை! ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை! கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண்மணம் புரிவதில்லை!
சரணம் 1
காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை! கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை! மின்னலின் ஒளியைப் பிடிக்க‌ மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!
விழி உனக்குச் சொந்தமடி வேதனைகள் எனக்குச் சொந்தமடி! அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌மடி!
சரணம் 2
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது! ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது!
பனித்துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது! பூமியிம் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டிப் பெண்ணானது!
புயல் அடித்தால் மலை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும்! சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்!

10 கருத்துக்குத்து:

Sundar on August 19, 2008 at 5:32 PM said...

ரொம்ப உருக்கிட்டீங்க.
வெளியில் வந்த கண்ணீரை விட வெளி வராத கண்ணீருக்கு அழுத்தம் அதிகம் என்று நினைக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தா கொஞ்சம் எடுத்து விட்டு மனசை ஆத்திக்குங்க. எவ்வளவு பாடல் கேட்டாலும் கஷ்டம் தான் அதிகமாகும் ;)

KA.... said...

my fav song. one of the best love lyrics by muthukumar. other lines that i like most r..

1)ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை

2)கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லைKA...

கார்க்கி on August 20, 2008 at 9:51 AM said...

கருத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சுந்தர்

கார்க்கி on August 20, 2008 at 9:51 AM said...

உண்மைதான் கலை... உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி

துரை on August 20, 2008 at 4:06 PM said...

7ஜி ரெயின்போ காலனியில் வரும் அனைத்து பாடலும் அருமையே
//***இந்த‌ப் பாட‌லிலும் த‌னுஷே ந‌டித்திருந்தால் இன்னும் சிற‌ப்பாய் இருந்திருக்கும் ***//
பாடலில் மட்டும் அல்ல படத்திலும் தனுஷை போட்டிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்

கார்க்கி on August 20, 2008 at 5:25 PM said...

//பாடலில் மட்டும் அல்ல படத்திலும் தனுஷை போட்டிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்//

உண்மைதான்.. அற்புதமான படம்..தனுஷால் இன்னும் மெருகேறி இருக்க கூடும்..கருத்திற்கும் நன்றி துரை

Anonymous said...

mokkaisamy yai thavirthu - kavithai, katturai, kathainu ellamei sogam thaluviyei irukkei karki???

Anonymous said...

//உலகத்தில் எத்தனை பெண் உள்ளது //

இலக்கணப் பிழை?
பெண் அஃறிணை அல்லவே?

Karthik on September 15, 2008 at 7:56 PM said...

எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு...
சூப்பரா எழுதியிருக்கீங்க..!
:)

கார்க்கி on September 16, 2008 at 9:39 AM said...

நன்றி கார்த்திக்

 

all rights reserved to www.karkibava.com