Aug 30, 2008

மடிப்பாக்கத்தை நெருங்கி விட்டேன்

18 கருத்துக்குத்து
ஒரு வழியாய் நானும் மடிப்பாக்கத்தை நெருங்கி விட்டேன்.. நாங்கள் ஆதம்பாக்கத்தில் புதிதாய் கட்டியுள்ள வீடு மடிப்பாக்கத்திற்கு வெகு அருகில் இருக்கிறது. சென்ற வாரம் தான் புது வீட்டிற்கு சென்றோம்.இதோ வீட்டின் புகைப்படம்.இது ஆர்க்கிடெக்ட் தந்த டிசைன்
இது இறுதியாய் வந்தது..
நீங்க வேற நினைச்சு வந்தீங்களா? அதுக்கு பரிசல்காரனைப் போய் படியுங்கள்...

அப்படியே வீட்டை பற்றிய உங்கள் கருத்துக்களை கிறுக்கிட்டு போங்க....

Aug 28, 2008

ஜே.கே.ரித்திஷின் தசாவதாரம்

19 கருத்துக்குத்து

இவன் சிகரங்களை தொடப்போவது உறுதி.. இனி நானும் ஜே.கே ஆர் ரசிகனூங்கோ!!!!!

அவதாரம் 1

Bulls Eye Avatar அடுத்த சூர்யா???????

அவதாரம் 2

Stylish அவதார் அடுத்த சிம்பு???????


அவதாரம் 3

Victory Avatar அடுத்த விஜய்???????
அவதாரம் 4
Affectionate Avatar அடுத்த சரத்குமார்???????

அவதாரம் 5

SuperStar Avatar அடுத்த ரஜினி???????
அவதாரம் 6

Action Avatar அடுத்த விஜய்காந்த்???????

அவதாரம் 7
Six-Pack Avatar அடுத்த விஷால்???????

அவதாரம் 8

Romantic Avatar அடுத்த கமல்???????


அவதாரம் 9
Michael Jackson Avatar அடுத்த பிரபுதேவா???????

அவதாரம் 10

Animal Avatar அடுத்த அஜித்???????Aug 26, 2008

என் செல்ல‌க்குட்டியின் மூன்றாவ‌து நினைவு நாள்

14 கருத்துக்குத்து

         செல்லக்குட்டி..உனக்கு நான் ஆசையாய் வைத்த பெயர்..இன்றும் யாரவது தங்கள் குழந்தையையோ காதலியையோ செல்லம் என்று அழைக்கும்போது ஒரு கணம் சலனமற்று போவேன்.உன் மீது எனக்கிருந்த அன்பு அப்படி. நீயும் உன் அன்பை உன் செய்கைகள் மூலம் பல தடவை வெளிப்படுத்தியதுண்டு. வார்த்தைகளில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லை.  இன்றோடு நீ என்னை விட்டு பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. உன் நினைவுகள் அவ்வபோது நச்சரித்தாலும் நீ இல்லாமல் எப்படி என்னால் இயல்பாக இருக்க முடிகிறது என்பது புரியாத புதிராகவே இன்னும் இருக்கிற‌து.

   2004 திசம்பர் 12 வது நாள்.உன்னை உன் குடும்பத்திடம் இருந்து நான் பிரித்து வந்த நாள்.அன்று உன் அம்மா கத்தியதை எல்லாம் இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கிறது.உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக உன்னை நான் கடத்திக் கொண்டு வந்தது தவறு என்பதை நீ இறந்தப் பிறகுதான் நான் உணரத் தொடங்கினேன். செல்லக்குட்டி!!! உன்னை நான் வேறு பெயர் கொண்டு அழைத்தாக நினைவில்லை. ஒரு நாளும் நீ உன் குடும்பத்தை பார்க்க சென்றது கிடையாது.  நானும் அதைப் ப‌ற்றி யோசித்த‌து கிடையாது.  என் அன்பை நீ புரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியசாலிதான்.

        உன்னுடன் நான் என் வீட்டுக்கு வந்த அன்று என் அம்மாவும் நம்மை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நீ உயர்ந்த ஜாதி இல்லையாம். நீ அவருக்கு சுமையாம். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. உன்னை என் அறைக்கு அழைத்து சென்று போது ஏதொ பெரும் பாவத்தை செய்ததைப் போல் பார்த்தார்கள் என் அம்மா.என் விருப்பத்தை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. நீயும் நானும் என் படுக்கையில் அன்று ஒன்றாய் படுத்திருந்ததை என் வீட்டு வான்டுகளும் ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்ததை நான் பார்த்து விட்டு,ஜன்னலை மூடிய பின் உன் நெற்றியில் நான் தந்த முத்தம் ஏதோ நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.

         நான் தினமும் வெளியே செல்லத் தயாராகும்போது உன் முகம் சுருங்கி விடும். எனக்குத் தெரியும்... என் வீட்டில் உள்ளவர்கள் உன்னிடம் பேசுவதில்லை. உன்னை கவணித்துக் கொள்வதில்லை என்பது எனக்குத் தெரியும். உனக்காகவே நான் மாலையில் சீக்கிரம் திரும்பி விடுவேன்.எனக்காகவே நீ கதவின் அருகில் நின்று நான் வரும் வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாய். உன்னைக் கண்ட சந்தோஷத்தில் நான் உன்னை தூக்கி செல்வேன்.என் அம்மா தலையில் அடித்துக் கொள்வாள். உன்னால் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் சில உறவினர்கள் வருவது இல்லை  என்று அம்மா ஆரம்பிப்பாள்.உன்னால் எனக்கு நடந்த மற்றொரு நன்மை அது என நினைத்துக் கொள்வேன். உன்னைப் போய் இவர்களுக்கு எப்படி பிடிக்காமல் போனது?

       ஒரு நாள் நான் மாலையில் என் புதுக் காருடன் திரும்பும்போது உன்னை வாசலில் காணவில்லை. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தேன். என் அம்மாவிடம் நீ எங்கே என்றேன்.உனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், நம் அறையை விட்டு நீ வெளியே வரவே இல்லை என்றும் சொன்னார்கள். உன்னை என் புது காரில் மருத்துவமனைக்கா அழைத்து செல்ல வேண்டும்? என் அம்மா காரில் கோவிலுக்கு முதலில் செல்லலாம் எனத் தயாராகி இருந்தாள். நான் உன்னுடன் சென்றுவிட்டேன். ஏதேதோ சொன்னார்கள். புரியவில்லை. முழுசாய் தந்த உன்னை வெட்டி வெட்டி துண்டாக்கி விட்டார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.ஒரு வாரம் நம் அறையை விட்டு வெளியே வரவே இல்லை நான். அதற்குள் என் அம்மா உனக்கு மாற்றாக  வெளிநாட்டுக்காரி ஒருத்தியின் படத்தை காண்பித்து என் அனுமதி கேட்டார்கள். வேண்டாம் எனக் கூறிவிட்டேன். இதோ உன் மூன்றாவது நினைவு நாள்.என்ன செய்யப் போகிறேன் செல்லக்குட்டி....????

       உன்னைப் போல் வேறொரு நாய்க்குட்டி கிடைக்கும் என‌ என‌க்குத் தோண்ற‌வில்லை.

Aug 25, 2008

மொக்கமாமியும் குருவியும்

15 கருத்துக்குத்து

ஒரு தடவை நம்ம மொக்கசாமியின் கனவில் கடவுள் வந்து "உனக்கென்ன வரம் வேண்டும் கேள் மகனே" என்றாராம். மொக்கசாமியும் எனக்கு சாவே வரக்கூடாது என்றானாம்."அப்படியே ஆகட்டும்" என்றார் கடவுள்.

மறுநாள், இனி நான் ஆயிரம் வருடம் தாண்டியும் உயிரோடிருப்பேன். கடவுள் வரம் தந்தார் என்று எல்லாரிடமும் சொன்னான் மொக்கசாமி.யாரும் நம்பத் தயாரில்லை. ஒரு பத்திரிக்கை நண்பர் மட்டும் இவனிடம் வந்து நான் உங்களை நம்புகிறேன்.உங்கள் பெயர் என்ன என்றார்.

"மொக்கமாமி" என்றான் மொக்கசாமி.

-----------------------------------------------------------------------------

ஒருநாள் ஹெல்மெட்டை மறந்து வைத்துவிட்டு வண்டியில் சென்றான் மொக்கசாமி.பாதி வழியில் ஞாபகம் வர,வீட்டுக்குத் திரும்பினான்.வழியில் டிராஃபிக் போலிஸ் மடக்கினார்.

"எங்கப்பா ஹெல்மெட்" என்றார் போலிஸ்.

"மறந்துட்டேன் சார். எடுக்கத்தான் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன் சார்"

"ஃபைன் கட்டிட்டு போய் எடுத்திட்டு வா"

எந்த சமாளிப்பும் எடுபடாமல் கடைசியாக 20ரூபாய் லஞ்சம் கட்டிவிட்டு எஸ்கேப் ஆனான் மொக்கசாமி. கிளம்பும்போது "வழியில் வேறு போலிஸ் மடக்கினால் காக்கா என்று சொல்,விட்டுவிடுவார்கள்" என்றார் போலிஸ்.

வேறொரு நாள் இதே போல் மொக்க போலிஸில் மாட்டினான்.என்ன செய்வது என்று யோசித்து " காக்கா" என்றான் மொக்கசாமி.

அந்தப் போலிஸ் சிரித்துக் கொண்டே "இன்று குருவி " என்றார்.

Aug 20, 2008

சோக்கான ஜோக்குகள்

13 கருத்துக்குத்து

  உன்னை வருடத்தானோ
  என்னவோ
  வருடாவருடம் புயல்
  வங்கக்கடலில்
  சென்னையின் அருகே
  மையம் கொள்கிறது...

  என்னைக் கண்டு பயந்ததோ
  என்னவோ ??????????
  பின்
  ஆந்திராவை நோக்கி
  நகர்ந்து விடுகிறது...
 ___________________________________________________
  நாம்
  ஒன்றாய் எடுத்துக் கொண்ட‌
  புகைப்படங்களில்
  நம்
  இருவருக்குமிடையே உள்ள‌
  இடைவெளியில் அமர்ந்திருக்கிறது
  நம்முடைய காதல்...

___________________________________________________

உன்
வீட்டுக் கண்ணாடியை
பார்க்க வேண்டும் நான்..

உன்
மொத்த அழகையும்
உள்வாங்கிக் கொண்டு
இன்னும் எப்படி உடையாமலிருக்கிறது?
 ___________________________________________________

கவிதை எழுதுவது எளிது என்றேன்..

அப்படியா என்றாய்..

உன் அப்பனுக்கே அது தெரிந்திருக்கிறதே!!!!

___________________________________________________

     தலைப்பு எதுக்குனு கேட்கிறீங்களா? என் நண்பன் ஒருவனிடம் என் கவிதைய படிடானு சொன்னேன்... "ஜோக்கடிக்காதடா..இதப் போய் கவிதைனு" சொன்னான்..அதான் அப்படி வச்சிட்டேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க?

Aug 19, 2008

நான் ரசித்த பாடல்கள்

10 கருத்துக்குத்து

காதலும் காற்றைப் போலத்தான்.அது கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. சொல்லபோனால் காற்று நுழையாத இடத்தில் கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன் போல் வரும் காதல் உரிமையாளன் போல் வீட்டுக்குள் தங்கிவிடுகிறது.காலம்காலமாக இந்த மண்ணில் ஜெயித்த காதலைவிட தோல்வியுற்ற காதலும் ஒரு தலைக் காதலுமே காவியமாகி நம் மனதில் இடம் பெற்றிருக்கின்றன.
"இந்த சோகம்கூட சுகமானது.ஏனென்றால் இது நீ தந்தது" என்கிறான் ஒரு உருதுக் கவிஞன்.தண்ணீரை விடவும் இரத்தததை விடவும் அடர்த்தியானது கண்ணீர்த் துளி.இதயத்தின் அறைகளில் இமயத்தின் பாரத்தை எடுத்து வைப்பவை காதல் தோல்விப் பாடல்கள். அப்படி முத்துக்குமார் எழுதிய ஒருப் பாடல்தான் "7ஜி ரெயின்போ காலனி" என்ற படத்தில் வந்த "கண் பேசும் வார்த்தைகள்". இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அதன் உள்ளே ஊடாடிக்கொண்டிருக்கும் வலி நம் உயிருக்குள் ஊஞ்சலாடும்.
இந்தப் பாடல் உருவானதற்குப் பின்னால் நடந்த சம்பவங்களை பற்றி முத்துகுமார் "கண்பேசும் வார்த்தைகள்" என்ற புத்தகத்தில் இப்படி கூறுகிறார். "ஒரு நாள் அதிகாலையில் செல்வராகவன் அழைத்து இந்தப் படத்தின் முழுக்கதையும் சொன்னார்.அந்தக் கதையில் இருந்த உலகத் தரமும், நக‌ர்ப்புற இளைஞர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றமும் கேட்ட உடனேயே வசீகரித்தன.இந்தப் பாடலின் சூழலை சொல்லும் இயக்குனர் //நாயகன் விரும்பும் பெண் இவனைத் தவறாக புரிந்துக் கொண்டு செருப்பால் அடித்து விடிகிறாள்.அவளுக்கு வேறொருவனுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.இன்த‌ சூழ‌லில் நாய‌க‌ன் பாடுகிறான்.உன்னுட‌ன் ஒரு நாளாவ‌து வாழ‌ மாட்டேன‌ என்ற‌ உருக்க‌ம் வ‌ரிக‌ளில் இருக்க‌ வேண்டும்// என்றார் செல்வ‌ராகவ‌ன்.யுவ‌னின் பிர‌மாத‌மான‌ மெட்டும் த‌யாராகி விட்ட‌து. அலைவ‌ரிசை ஒத்துப்போகும் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ப‌ணியாற்றும்போது என் எழுதுகோல் ச‌ல‌ங்கை க‌ட்டி கொள்ளும்"
உண்மைதான்.முத்துகுமாரின் பாட‌ள்க‌ளில் என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ பாட‌ல்க‌ளில் இதுவும் ஒன்று.ஒரு த‌லை காத‌லுக்கு ப‌ல‌ க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ உருவ‌க‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார்க‌ள்.ஆனால் இந்த‌ப் பாட‌லில் இவ‌ர் தந்த‌ "காட்டிலே காயும் நில‌வை க‌ண்டு கொள்ள‌ யாருமில்லை " என்ற‌ வ‌ரியும் " தூர‌த்தில் தெரியும் வெளிச்ச‌ம் பாதைக்கு சொந்த‌மில்லை " என்ற‌ வ‌ரியும் மிக‌ச் சிற‌ந்த‌து என்ப‌து என் க‌ருத்து.
நாய‌கி த‌ன்னை விட்டு பிரிந்த‌ போதும் அவ‌ளின் நினைவுக‌ள் த‌ன்னுட‌னே உண்டு என்ப‌தை விள‌க்க‌ பாடலாசிரிய‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தும் கீழ்க‌ண்ட‌ வ‌ரிக‌ளைப் ப‌டிக்கும் போது ஏதோ ஓர் இன‌ம்புரியாத‌ உண‌ர்வு நம்மை ஆட்கொள்கிற‌து.
"காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும் கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை"
"அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌ம‌டி"
கார்த்திக்கின் உருக்க‌மான‌ குர‌லும்,யுவ‌னின் ம‌ன‌தைப் பிழியும் மெட்டும், அர‌விந்த் கிரிஷ்னாவின் அரையிருள் ஒளிப்ப‌திவும் முத்துக்குமாரின் வ‌ரிக‌ளுக்கு ப‌க்க‌ ப‌ல‌மாய் இருந்த‌து. இந்த‌ப் பாட‌லிலும் த‌னுஷே ந‌டித்திருந்தால் இன்னும் சிற‌ப்பாய் இருந்திருக்கும் என்றாலும் பாடலை கெடாம‌ல் பார்த்துக்கொண்ட‌தில் தேறியிருக்கிறார் ர‌வி கிருஷ்ணா. நான் கோத்ரேஜில் வேலை செய்த போது இந்த‌ப் பாட‌லைப் பாடித்தான் முத‌ல் ப‌ரிசு பெற்றேன் என்ப‌து என்ன‌ள‌வில் இந்த‌ப் பாட‌லை இன்னும் நெருக்க‌மாக்கிய‌து.
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய‌ கண்ணாடி இதயமில்லை‍ கடல் கை மூடி மறைவதில்லை!!
காற்றில் இலைக‌ள் ப‌ற‌ந்த‌ பிற‌கும் கிளையில் த‌ழும்புக‌ள் அழிவ‌தில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள்மணம் மறப்பதில்லை! ஒருமுறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை! கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண்மணம் புரிவதில்லை!
சரணம் 1
காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை! கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை!
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை! மின்னலின் ஒளியைப் பிடிக்க‌ மின்மினிப் பூச்சிக்கு தெரியவில்லை!
விழி உனக்குச் சொந்தமடி வேதனைகள் எனக்குச் சொந்தமடி! அலை க‌ட‌லை க‌ல‌ந்த‌ப் பின்னே நுரைக‌ள் ம‌ட்டும் க‌ரைக்கே சொந்த‌மடி!
சரணம் 2
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது! ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது!
பனித்துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது! பூமியிம் உள்ள பொய்களெல்லாம் அட புடவை கட்டிப் பெண்ணானது!
புயல் அடித்தால் மலை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்து விடும்! சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும்!

Aug 16, 2008

மாஸ் Vs கிளாஸ்..

23 கருத்துக்குத்து

இதற்கு முதலில் அய்யனார் Vs லக்கிலுக் என்றுதான் பெயரிட்டிருந்தேன். ஆனால் சூடான இடுகைக்கான என் இன்னொரு முயற்சியோ(?) என்று நீங்கள் அப்படியே ஓடிட கூடாதென்று மாற்றினேன்.ஆம்,வலையுலகில் என்னை கவர்ந்த இரு பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய என் கருத்துக்களே இந்த பதிவு.

தனிமையின் இசை என்ற வலையின் பெயரிலே முதல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் அய்யனார்.சற்றும் சளைத்தவர் அல்ல எங்கள் லக்கி.தனக்கான வாசகர்களை "சும்மா டைம் பாஸ் மச்சி" என்று வாயிலிலே ஃபில்டர் செய்கிறார். இருவரும் தன்னை நம்பி வரும் வாசகர்களை ஏமாற்றாமல் பதிவிடுகின்றனர்.

அய்யனாரின் "நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா" என்ற பதிவை படித்த பிறகு இத்தனை இயல்பாய் எழுத முடியுமா என்ற ஆச்சரியம் வராமல் போக வாய்ப்பில்லை.தெருவிற்கு நான்கு காதல் இந்தக் கதையைப் போல் இருப்பதால் இதைப் படிக்கும் போது நம் வாழ்க்கையைப் பற்றியதோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நமக்கோ இல்லை நமக்கு தெரிந்த யாருக்கோ நிச்சயம் இந்த அனுபவம் இருந்திருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவரின் அனைத்து பதிவையும் படித்துவிடும் முயற்சியில் இறங்கியுள்ள எனக்கு,இதுவரை இதுதான் சிறப்பான பதிவாக தெரிகிறது.

கணத்த இதயத்தோடு வெளிவருகிறோம் அய்யனாரின் வலையைவிட்டு. எத்துனை துயரமாக இருந்தாலும் நமக்கு மருந்து வைத்திருக்கிறார் லக்கி.அவரின் சமீபத்திய சாதனையான(?) டமாரு கொமாருவை ரசிக்க முடியாதவர்கள், ப்ளீஸ் சிரிக்க சீக்கிரம் கத்துகோங்க.. குறிப்பாக சென்னை தமிழின் மேல் காதல் உள்ளவர்கள் டமாரு கொமாருக்காக லக்கிக்கு மடிப்பாக்கத்தில் ஒரு கிரவுண்டு நிலத்தை பரிசாக தரவும் தயங்க மாட்டார்கள். அய்யனாரை வாசிக்கும் போது நமக்கு பரிச்சயமில்லாத வழமைகள்,பின்நவீனத்துவம் போன்ற பல புரியாத தமிழ் வார்த்தைகள் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் லக்கியின் பல வார்த்தைகள் தமிழே இல்லை என்ற போதும் புரிந்து விடுகின்றன.

இரண்டு லட்சம் ஹிட்ஸ் அடித்ததற்காக ஒரு பெரிய (?) எழுத்தாளர் பெங்களூரில் தன் வாசகர்களுடன் கொண்டாடினாராம்.ஆனால் எங்க லக்கி எட்டு லட்சத்தை இன்னும் ஒரே மாதத்தில் தொடப்போகிறார்.எங்களுக்கு எங்கே பார்ட்டி லக்கி? இங்கே தான் மாஸ் அல்ல கிளாஸ் என்று நிரூபிக்கிறார் அய்யனார்.அவர் வலையில் ஹிட்ஸ் கவுண்டரே கிடையாது. அவரின் வெற்றியைப் பறை சாற்ற அவரின் படைப்புக்களே போதும் என்று நினைத்து விட்டார் போலும்.

வலையின் மூலம் தமிழை வளர்ப்பது அய்யனாரின் வேலை என்றால் வலைக்கான வாசகர்களை சேர்ப்பது லக்கியின் வேலை.இவ்விரு கரையின் இடையில் தமிழ்மணம் என்ற நதி வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.அப்போதுதான் அதில் பல புதிய பரிசல்களை காண முடியும். லக்கியின் பதிவுகள் நகைச்சுவை மட்டும்தான் என் சொல்லிவிட முடியாது.அவரின் மிகப் பெரிய பலம் என அதைச் சொல்லலாம்.
மனித எண்ணங்களின் அதிர்ச்சியூட்டும் முகங்களை தன் எழுத்தின் மூலம் முகத்தில் அறைவதுப் போல் சொல்வது அய்யனாரின் பாணி என்றால், "வெட்கப்படாதீங்க பாஸ்" என்று அதையே நக்கலாய் சொல்வது லக்கியின் ஸ்டைல்.இவ்விரு தூண்களை ஒரே தராசில் வைத்து எடை போடுவது நியாயமாகாது.எனினும் வெவ்வேறு தராசில் எடை போட்டு பார்த்தாலும் இருவரும் ஒரே எடையாய்த்தான் இருக்க கூடும்.
இருந்த‌ போதும்,அய்யனாரை நான் வாசித்த வரையில், விமர்சணம் செய்யும் போது அது சம்பந்தபட்டவர்கள் மீது தனக்குள்ள அபிப்பிராயத்தினால் விமர்சணம் செய்யும் போக்கை நான் கண்டதில்லை.ஆனால் லக்கியின் பில்லா பட விமர்சணத்தை படித்த போது அவர் அஜித் ரசிகர் என்பது போலவும்,அந்த ஒரு காரணத்தால் அந்தப் படத்தை போற்றுவது போலவும் எனக்குள் தோண்றியது.அது நிஜமா இல்லையா என்பதை லக்கியோ அல்லது லக்கியின் வாசகர்கள் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

என்னை யாராவது கொலை செய்யுங்களேன்!!!

10 கருத்துக்குத்து
சில நாட்களை நாம் குறித்துக் கொள்ள விரும்புகிறோம்.சில நாட்களை நம் வாழ்க்கை நாட்குறிப்பிலிருந்து கிழித்து விட விரும்புகிறோம்.அப்படி ஒரு நாளாய்த்தான் நேற்று ஆகிவிட்டது எனக்கு. எதற்கு, என்ன காரணம் என பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் நானில்லை. தீயினார் சுட்ட புண் எனத் தொடங்கும் வள்ளுவர் வாக்கு உண்மையென அனைவர்க்கும் தெரிந்தாலும் இத்தகைய தருணங்களில் அது ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. நான் பேசியதும், என்னை நோக்கி பேசப்பட்டதும் அவ்வகையே. என் வார்த்தைகள் எதிர்வாதியின் பேச்சுக்கான பதில் தான் என்ற போதும் அப்படி செய்திருக்க கூடாதுதான்.என்ன செய்யலாம்? என்ன நடந்தது என்று சொல்லாமல் உங்களிடம் புலம்புவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? போகட்டும் என்னை ஏதவாது யாராவது செய்யுங்கள்.
மெல்ல என் நரம்புகளை மட்டும் என் உடலலிருந்து வெளியெடுத்து துண்டுதுண்டாய் நறுக்குங்கள். இன்னுமொருவர் கறி வெட்டுபவன் கோழியின் தலையை பக்குவமாக திருகுவதைப் போல் அல்லாமல் பச்சாதாபமில்லாமல் திருப்புங்க‌ள்.என் கையை ஒரு கட்டையின் மீது வைத்து சமையற்கலைஞர் கொத்தவரங்காய் நறுக்குவது போல் வெட்டுங்கள்.உங்களில் பலமானவர் யாரேனுமிருந்தால் ஒரு பெரிய கல்லை என் காலின் மீது போடுங்கள். ஜனா, ரெட் போன்று படங்களைப் பார்த்து மெல்ல சாக நான் விரும்பவில்லை. IRREVERSIBLE படத்தில் வருவதைப் போல் தீயணைப்பானைக் கொண்டு என் முகத்தை அடையாளம் தெரியாமல் சிதையுங்கள்.என் முகம் தரை மட்டும் ஆகும் வரை அடித்துக் கொண்டே இருங்கள். என் கை நகங்களைக் கொறடாக் கொண்டு தனியே எடுத்து விடுங்கள். முடிந்தால் ஒரு கத்திக் கொண்டு சிதைந்த தலையைத் தனியே எடுத்து என்னை முண்டமாக்கி விடுங்கள். இன்னும் வேறுக் கொடூர முறைத் தெரிந்தால் சொல்லுங்களேன்... வேண்டாம் செய்யுங்களேன்..என்ன சொல்கிறேன் என்றால் 'அய்யோஎன்னை யாராவது கொலை செய்யுங்களேன்!!!.. நிஜமாய்த்தான் சொல்கிறேன்..

Aug 13, 2008

தமிழ்மணம்,வலையுலகம் மற்றும் நான்

18 கருத்துக்குத்து

       வலையுலக நண்பர்களுக்கும், குறிப்பாய் தமிழ்மண நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.ஏன் என்பதை இறுதியில் பார்ப்போம்.

          நான் வலை எழுத தொடங்கிய போது தமிழ்மணத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை.என் எழுத்தை என் நண்பர்கள் கூட படிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது  உண்மை.ஆனால், நான் எழுத தொடங்கியது பிறருக்காக அல்ல.என் எண்ணங்களை நான் விரும்பும் வண்ணம் பதியவும், நான் எழுதிய சில கவிதைகளை பதியவும் தான் தொடங்கினேன்.வழக்கம் போல் என் நண்பர்கள் இதையும் நையான்டி செய்ய கூடாது என்பதற்காக "when we feel there is nobody to listen,we start writing" என்ற வரியை உபயோகித்தேன்.அது ஒரு வகையில் உண்மையும் கூட. என் வலையை தமிழ்மணத்தில் இணைத்ததலிருந்து ஹிட்ஸ் அதிகமாக ஆரம்பித்தது.நூற்றுகணக்கில் இல்லாவிட்டாலும் எல்லா பதிவிற்கும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்தன.இந்த பாரட்டுக்கள் எனக்கு ஊக்கத்தை அளித்தன.ஒரு மாதத்தில் 42 இடுகைகள் எழுதினேன்.ஆனால் மெல்ல இந்த போதை எனக்கும் ஏறியது.எனது பதிவும் சூடான இடுகைகளில் வர வேண்டும் என்ற ஆசை தூண்டியது. கவிதைகள்,ஹைக்கூக்கள், பயண கட்டுரை, தொடர்கதை என நான் எழுதிய‌ எதுவும் சூடாகவில்லை.அந்த சமயத்தில் எனக்கு கிடைத்த துருப்பு சீட்டுதான் குசேலன்."குசேலனும் சில பின்னூட்டங்களும்" என்ற எனது பதிவு சூடான இடுகையானது.பிறகு இன்னொரு முயற்சியாக "குசேலன் கின்னஸில் இடம் பிடிக்கும்" என்ற அடுத்த இடுகை எந்த செய்தியும் இல்லாமல் வெறும் தலைப்புக்காகவே சூடான இடுகையானது.ஆனால் எந்த நோக்கத்துடன் எழுத தொடங்கினேனோ அது நிறைவேறவில்லை. மொக்கை பதிவு தவறில்லை. நகைச்சுவை இல்லாமால் மனிதனே இல்லை.ஆனால் அத்தகைய பதிவுகள் மட்டுமே பரவலாக படிக்க படுகிறது.

      வெறும் ஹிட்ஸ்க்காகவும் பின்னுட்டங்களின் எண்ணிக்கைகாகவும் எழுத தொடங்கியதாய் உணர்ந்தேன்.இது வரை எழுதியதில் வெறும் 4 இடுகைகள் மட்டுமே அது போன்று எழுதி இருந்தாலும் என்னவோ போல் இருந்தது.அதிலும் வலையில் எனக்கு பிடித்த எழுத்துகளின் சொந்தக்காரரான‌ அய்யனார் அவர்கள் என் நண்பன் ஒருவனிடம் " நல்லா எழுத ஆரம்பிச்சிருக்கான்.அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை?" என்று சொல்லி இருக்கிறார்.அப்போது தான் அவர் என் பதிவுகளை படிக்கிறார் என்பதே எனக்கு தெரிந்தது.இது வரை ஒரு பின்னூட்டம் கூட அவர் எனக்கு போட்டதில்லை. அதிலும் இட்லி சாம்பாரைப் பற்றி ஒரு நகைச்சுவை கலந்த பதிவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த போது இதற்கு பேசாமல் ஒரு நமீதா படத்தைப் போட்டு நச்சென்று ஒரு தலைப்பு வைத்திருந்தால் இன்னோரு சூடான இடுகையும் ஒரு ஐநூறு ஹிட்ஸும் ஐம்பது பின்னூட்டங்களும் கிடைத்திருக்கும் என தோண்றியது. பாராட்டு என்பது ஒரு கலைஞனுக்கு அவசியமான ஒன்றுதான்.ஆனால் அதை விட தன்னிறைவு என்பதுதான் அவனைத் தொடர்ந்து வழி நடத்தி செல்லும் என நம்புகிறேன்.

    வலை மூலம் தமிழ் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு குறைய ஆரம்பித்திருக்கிறது.பல நல்ல படைப்புக்கள் தமிழ்மணத்தில் கேட்பாரற்று போகின்றன.கும்மி அடிப்போரையும் கலாய்ப்பவரையும் நான் குறை சொல்லவில்லை.அவர்கள் தங்கள் வலையிலே அதற்க்காகத்தான் எழுதுவதாக தெளிவாக சொன்னபின் அவர்களை நாம் என்ன சொல்ல முடியும்? ஒரு தடவை ஒரு பதிவரின் பேரைக் கொண்டு வேரொரு பதிவர் ஒரு இடுகை எழுதினார்.தன் பேர் கொண்ட இடுகை சூடான இடுகை ஆக வேண்டும் என்று அவரும் அவர் நண்பரும் அதற்கு சராமாரியாக பின்னுட்டமிட்டு அந்த இடுகையை சூடான இடுகை ஆக்கினார்கள்.இன்னொரு பதிவர் "சினிமாவை மறந்தால்தான் தமிழினம் தலை நிமிரும்" என்று சொல்லிவிட்டு எல்லா படத்திற்கும் விமர்சனம் எழுதுகிறார்.குசேலனை வைத்து மட்டுமே இது வரை ஐந்திற்கும் மேலான இடுகைகள் எழுதி விட்டார்.

       என் ஐம்பதாவது பதிவில் இருந்து இது போன்று வெறும் ஹிட்ஸ்க்காக எழுத கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்.வாரம் ஒன்று என்றாலும் என்னால் முடிந்த ஒரு நல்ல இடுகை எழுத வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் ஏகன்,வில்லு என்று பல புயல்கள் தமிழ்மணத்தை தாக்ககூடும்.அதில் என்னைப் போன்ற பதிவர்கள் தாக்கு பிடிக்க முடியாது என்பதை நானறிவேன்.இருந்தும் நான் முன்னே சொன்னதைப் போல எனது வலைப்பூ எனக்கானது.

    நான் முதலில் சொன்ன நன்றி,இது என்னுடைய 49வது இடுகை.இத்துனையும் நான் இவ்வளவு சீக்கிரம் எழுத உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.இதோ இந்த பெரிய பதிவை எத்தனைப் பேர் இது வரைக்கும் படித்து கொண்டிருப்பார்கள் என தெரியாது.அதில் நீங்களும் ஒருவர் என்றால் என் நன்றி.

Aug 12, 2008

இட்லி சாம்பார்‍ - 2

10 கருத்துக்குத்து

    ரத்னா கஃப் இட்லி சாம்பார்‍ பற்றி முதல் பதிவில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்.இந்த பதிவில் இட்லி சாம்பாரை எப்படி சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

      இட்லியை சாம்பாருடன் சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்பதை ரத்னா கஃபே இலக்கணமாக்கினாலும் அதை எப்படி சாப்பிடுவது என்பதை அவரவர் விருப்பதிற்கு விட்டுவிடுவது நுகர்வோரை மதிக்கும் நிர்வாகத்தின் பண்பை பறை சாற்றுகிறது.கபினி அணையிலிருந்து பொங்கி வழியும் காவிரி ஆற்றைப் போல் தட்டில் நுங்கும் நுரையுடன் வந்து விழும் சாம்பாரை ஆசைத் தீர துழாவிவிட்டு இட்லியின் சரிந்த பகுதியில் ஸ்பூனால் ஒரு வெட்டு வெட்டி ,மேற்படி இட்லித்துண்டைத் தண்ணீர்த் தொட்டியில் தலையை அமுக்கி கொலை செய்யும் வெறியனைப் போல் அல்லாது சாம்பாரில் மெல்ல மெல்ல முக்கி எடுத்து,கிண்ணென்றும் இல்லாமல் சொதசொதவென்றும் இல்லாமல் நடுநிலையில் அத்துண்டினை ஸ்பூனால் ஆசையுடன் வாரி எடுத்து உச்சி மோர்ந்து உண்ணுவது உத்தம முறையாக பரிந்துரைக்கபடுகிறது.

       சாம்பாருடன் தட்டில் இரண்டர கலந்து விட்ட இட்லியை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற மமதையுடன் நோஞ்சான் ஸ்பூனினால் கை தேர்ந்த சமையற்கலைஞர் அடுக்கிய கொத்தவரங்காய் பிஞ்சுகளை "டக்‍டக்‍டக்‍டக்‍டக்‍" என்ற காலப் பரிமாணத்தின் சீரான அளவில் வெட்டுவதுப் போல் வெட்டிவிட்டு இட்லித்துண்டங்கள்‍சாம்பார்க் கலவையை கட்டுமான தொழில் புரியும் கொத்தனார் இரும்பு பான்டில்  சிமென்ட்,மணல்,தண்ணீர் கலவையைக் கொல்லர் உதவியுடன் லாவகமாக கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து மறுபடியும் கலக்கி,பிளந்து, சரி செய்து,சேர்த்து பின்னர் கலவையைப் பூச உபயோகிப்பது போல ஸ்பூனால் எடுத்து வாய்க்குள் செலுத்துவது ஜனரஞ்ச செயலாகும்.

      சிலர் உபரியாக உளுந்து வடை ஒன்றையும் சேர்த்து துண்டங்கள் அங்கிங்கென்னாதபடி எங்கும் பரவி இட்லியின் துணுக்குகளுடன் இரண்டரக் கலந்து இருக்கும் வகையில்  வெட்டி அமைத்துக் கொள்வது, இக்கலவைக்கு இன்னும் உறுதி  அளித்தால் என்ன என்று எழுப்பிய கேள்விக்கு அளித்துக் கொள்ளும் வடையாகும்..அதாவது விடையாகும்.

      வெறும் இட்லி மாத்திரம் சுவையான,நிலையான டிபன் ஆயிடுமா? அதற்கு சாம்பார், வெள்ளைச் சட்டினி, வெங்காயச் சட்டினி, புதினா சட்டினி போன்ற மற்றக் கட்சிகளுடன் கூட்டணித் தேவைப்படுகிறது.தட்டின் மத்தியில் கூட்டு சேர்ந்த சிவப்புக் கார சட்டினி இட்லியை நாட வைக்குமா அல்லது ஆட வைக்குமா? காலம்(கோவி.கண்ணன் அல்ல? தான் பதில் கூற‌ வேண்டும்.

Aug 11, 2008

ம்ம்ம்ம்...சாம்பார் இட்லி

10 கருத்துக்குத்து

        திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

         சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பதர்களுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

      காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

     கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

     சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை வேறொரு பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்

Aug 10, 2008

குசேலன் கின்னஸில் இடம் பிடிக்க வாய்ப்பு‍ - கமல்

14 கருத்துக்குத்து


ந‌ம்ப‌முடிய‌வில்லையா?


கீழே பாருங்கள்

அது வந்து...... இன்னொரு சூடான இடுகைக்கு ஒரு முயற்சி... கோச்சுகாதிங்க....


Aug 8, 2008

இதற்கு பேரும் காதல்...

121 கருத்துக்குத்து

என் சமகால தோழர்களே,

மன்னித்து விடுங்கள்...இவை எதுவுமே கவிதைகள் அல்ல..ஒரு அப்பழுக்கற்ற ஆத்மார்த்தமான உறவின் அந்திமகால நிகழ்வை அதன் பரிபூரண முறிவுக்கு பின் பதிவு செய்யும் முயற்சி அவ்வளவே. இதை எந்த இடையூறுமின்றி சாத்திய படுத்தியமைக்கு என் தேவதை வாழும் திசை நோக்கி நன்றி கலந்த புன்னகையை காற்றின் கைகளில் கொடுத்தனுப்புகிறேன். உங்களை போலவே எங்களுக்கும் எங்கள் இடையே இருந்த உறவின் சரியான பெயர் தெரியவில்லை. தோழியாகவோ தாயாகவோ காதலியாகவோ என்னுள் அவள் விருப்பப்படி உலவி கொண்டுஇருக்கிறாள்.என் காதலை எழுத்துக்களாகவும் அவள் காதலை எண்ணங்களாகவும் கொண்டு எங்கள் காதலை சொல்ல போகிறேன்.

காற்றிற்கு பதிலாக

காதலை சுவாசிக்கும்

காதலர்கள் அனைவருக்கும்

காணிக்கை....

கார்க்கி.

---------------------------------------------------------------

மெல்ல கலைகிறது...
ஆன்ம வெளியெங்கும்
வியாபித்திருந்த என்
ஆதர்ச பிம்பம்
மெல்ல கலைகிறது...

---------------------------------------------------------------

எந்த குபேரபுரிக்கும்
எடுத்து செல்லும்
உத்தரவாதம் இல்லாத போது
ஏன் மேற்கொள்கிறேன்
இந்த சுடுமணல் பாதையில்
வெறுங்கால் பயணத்தை?

---------------------------------------------------------------

விழிஎட்டும் தூரம் வரை
இலக்குகள் அற்று நீளும்
இருளடர்ந்த பாதையில்
என்னை தனியே நடக்க
விட்டு கைஅசைப்பவளே!!
உற்று பார்..
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம் . ..

---------------------------------------------------------------

எனக்கென மட்டும்

எப்போதும் வைத்திருக்கிறாய் நீ

பிரத்யேகமாய் ஓர்

புன்னகையை...

நானல்லாத யார்மீதும்

பிரயோகிப்பதில்லை அந்த

பிரம்மாஸ்திரத்தை..

---------------------------------------------------------------

என் வாழ்க்கை குறித்த
என் அத்துனை
சந்தேககளுக்கும்
ஒட்டுமொத்தமாய் கிடைத்த
ஒரே பதில்
" நீ " !!!

---------------------------------------------------------------

ஓர்
மூங்கிலிருந்து வெளியாகும்
காற்று இசையாவதை போல்
என்னிலிருந்து
வெளிப்படும் நீ
கவிதையாகிறாய்...

---------------------------------------------------------------

நீ யொருத்தி மட்டும் தான்

என்வேரில் அமிலம் ஊற்றி

கிளையில் பூமலர செய்யும்

அதிசய கலை அறிந்தவள் ..

---------------------------------------------------------------

பி.கு: மறக்காம தமிழ்மண வோட்டு ஒன்னு குத்திடுங்க. ரொம்ப முக்கியம். என்னனு அடுத்த வாரம் சொல்கிறேன்.

Aug 5, 2008

நான் ரசித்த பாடல் 2

60 கருத்துக்குத்து

நான் ரசித்த பாடலின் முதல் பதிவை படிக்க இங்கே அழுத்துங்கள்

முத்துக்குமாரை அறிமுகப்படுத்திய பாடல் வேறாக இருந்தாலும் அடையாளப்படுத்திய பாடல் "தேவதையை கண்டேன்".ஒரு ஆணின் காதலை அத்தனை அழுத்தமாக எழுதிய இவர் "பேசுகிறேன் பேசுகிறேன்" பாடலில் ஒரு பெண்ணின் ஏமாற்றத்தை சொல்லி இருக்கிறார்.
       பேசுகிறேன் பேசுகிறேன்
       உன் இதயம் பேசுகிறேன்
       புயல் அடித்தால் கலங்காதே -
       நான் பூக்கள் நீட்டுகிறேன்

பெண்ணின் இத‌ய‌மே அவ‌ளுக்கு ஆறுத‌ல் சொல்வ‌து போல் தொட‌ங்கி ஆர‌ம்ப‌ வ‌ரிக‌ளிலே ந‌ம் கவன‌‌த்தை ஈர்க்கிறார்.அது ம‌ட்டும் இல்லாம‌ல் ,இந்த  பாட‌லின் ஒவ்வொரு வ‌ரிக‌ளிலும் க‌தை இருக்கிற‌து.ப‌டித்து பாருங்க‌ள்,ஒரே ஒரு வ‌ரி கூட‌ க‌தையை விட்டு வில‌காது.

  இந்த பாடலில் என்னால் எனக்கு பிடித்தமான வரியை தெரிவு செய்ய முடியவில்லை.இருந்தும்,இந்த ஒரு வரியை மட்டும் ஏனோ மனம் கொண்டாடுகிற‌து.

   முற்றுப்புள்ளி அருகில் நீயும்
   மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
   முடிவென்பதும் ஆரம்பமே....

எத்துணை அழகு? இதை ப‌ற்றி மேலும் சொல்வ‌து அந்த‌ அழ‌கை கெடுத்துவிடும் என்ப‌தால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

   யுவ‌ன் த‌ன் த‌ந்தையை மிஞ்ச‌ முடியா விட்டாலும் அவ‌ர் பெய‌ரை காப்பாற்றுவ‌து இது போன்ற‌ சில‌ பாட‌ல்க‌ளில் தான்.பாட‌கி வ‌ட இந்தியாவை
சேர்ந்தவர் என்றாலும் உச்சரிப்பில் போதிய கவனம் காட்டி இருக்கிறார்.பாடலின் ஜீவனை கெடுக்காத வகையில் படமாக்கிய இயக்குனர் வசந்தும் கண்களாலே கவிபாடிய நடிகை பத்மபிரியாவிர்க்கும் இது சிற‌ந்த பாடல் என்பது என் கருத்து. இந்த கூட்டு முயற்சி என்றாலும் ஆட்ட நாயகன் விருது என்னவோ பாடலாசிரியருக்குதான்.. 

பல்லவி

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே -
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....

சரணம் 1

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

சரணம் 2
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

Aug 4, 2008

குசேலனும் சில பின்னூட்டங்களும்...

32 கருத்துக்குத்து

வர வர நம் நண்பர்கள் ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா..குசேலனை தாக்கி பதிவு போட்டு ஹிட்ஸ் அடிப்பவர்கள் நான் அனுப்பும் பின்னூட்டங்களை போடுவதில்லை.இது வரைக்கும் நான் எழுதிய 4 பின்னூட்டங்கள் அவர்கள் அனுமதிக்கவில்லை.என்னடா செய்யலாம் என்று யோசித்தபோது கண நேரத்தில் தோண்றியது இந்த உபயம். நான் எழுதிய பின்னூட்டங்களை வைத்தே ஒரு பதிவு போட்டாலென்ன?
பி.கு: நான் பின்னூட்டங்களை மட்டறுப்பதில்லை.

குசேலனை பற்றிய என் முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தவும்

முதல் சிரிப்பு:

//டிக்கெட்டின் போது,எந்த சீட் வேண்டும் என்று டிக்கெட் விற்ற பெண் நக்கலாக கேட்டார். பார்த்தால் முழுக்க எல்லா சீட்களும் நீல நிறத்தில் இருந்தன. போச்சுடா டிக்கெட் இல்லை போல என்று நினைத்து கவலைப்படலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது கடைசி வரிசையில் ஆச்சர்யமாக ஒரு 5 சீட் காலியாக இருக்க(ஆரஞ்சு நிறம்) பிடித்தேன் ஒரு சீட்டை.உள்ளே நுழைந்ததும் தான் தெரிந்தது, மொத்தமே தியேட்டரில் 5 பேர் தான்//

முழுப்பதிவை படிக்க (பதிவு)

"தலைவரே பொய் சொல்ல ஒரு அளவே இல்லையா? அஞ்சு சீட்டுதான் காலினு நினைச்ச‌ நீங்க அதுல ஒன்னதான் அந்த பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பீங்க.அப்பவே அவங்க அது புக் ஆயிடுச்சுனு சொல்லி இருப்பாங்க..அது தெரியாம உள்ள போனேனு சொல்றத என்னனு சொல்றது?விடுங்க,நீங்க நினைச்ச மாதிரி உங்க பதிவு சூடான இடுகைகள்ல வந்துடுச்சு..அதுக்காவது ரஜினிக்கு நன்றி சொல்லுங்க...வடிவேலு சொல்ற மாதிரி சின்னப்பிள்ளைதணமா இல்ல இருக்கு...."

அடுத்த‌ சிரிப்பு :

// “என்னா *** படம் எடுத்து வச்சிருக்கானுங்க ****ங்க. கடுப்பு *** தான் இருக்கு.”
பி.கு: *** என்பது சூப்பர் ஸ்டார் என அர்த்தம். நீங்கள் கெட்ட வார்த்தையை போட்டு படித்திருந்தால் நான் பொறுபல்ல. //

முழுப்பதிவை படிக்க (பதிவு)

என்னா சூப்பர் ஸ்டார் படம் எடுத்து வச்சிருக்கானுங்க சூப்பர் ஸ்டார்ங்க. கடுப்பு சூப்பர் ஸ்டார் தான் இருக்கு

இந்த வரியில் ஏதாவது அர்த்தம் இருக்கா நண்பர்களே? ஹிஹிஹி...அய்யோ அய்யோ

அடுத்து :

//இவை தவிர்த்து குசேலன் ஒரு நல்ல பொழுது போக்கு படம்,தமிழ் திரை உலகை உலக தரத்திற்கு உயர்த்தும் படம் அல்ல. பின் நவீனத்துவம், நுண்ணிய அரசியல், உலக தரம்,கன்னட நா*, குப்பை படம், நடிக்க தெரியாதவன் படம், சமீபத்திய ரஜினி சர்ச்சை என்கிற பார்வையில் (சம்பந்தப்படுத்தி) விமர்சனம் படித்தாலும், படம் பார்த்தவர்களுக்கும் பார்க்கப்போகிறவர்களுக்கும் படம் மொக்கை தான்.
மேலே நான் //

முழுப்பதிவை படிக்க (பதிவு)

கலக்கல் நண்பரே!!இந்த தெளிவு இவர்களுக்கு வர வேண்டும் என்றுதான் படம் வெளியாவதற்கு முன்பே ஒரு பதிவு போட்டென்..யாரு கேட்குறா?சரி,உங்க பதிவ எப்படி சூடான இடுகைகள்ல வர விட்டாங்க?

அடுத்து :

//1. சண்டை காட்சி இல்லாமல் பன்ச் வசனங்கள் இல்லாமல் இது போன்ற கதையில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டப்பட வேண்டியது. இது நாள்வரை மசாலா பாடங்களையே கொடுக்கிறார் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை. இதை பற்றி ஒரு சிறு பாராட்டை ஒரு பதிவில்கூட பார்த்ததாக நினைவில்லை.//

முழுப்பதிவை படிக்க (பதிவு)


மிகச் சரியான கேள்வி..விட்டுவிடுவோம் நண்பரே.. இல்லையேல்,ந‌ல்ல படத்தை மசாலாக்கி விட்டார் என்று அடுத்த குண்டை போடுவார்கள்.

அடுத்து :

குசேல கிரகணம் - இட்லிவடை பதிவு

முழுப்பதிவை படிக்க (பதிவு)

இந்த மாதிரி அனானிகளுக்கெல்லாம் தலைவர் ஸ்டைலில் ஒரு சர்தார்ஜி கதை சொல்றேன்.
ஒரு சர்தார்ஜி டாக்டர் கிட்டே போனான்.டாக்டர் எனக்கு உடம்புல எங்க தொட்டாலும் வலிக்குது.என்ன பன்னலாம்னு கேட்டான்.டாக்டர் அவன தொட்டு பார்க்க போனாராம்.அதுக்கு அவன் இருங்க டாக்டர் நானே தொடரன்.நீங்க‌ வலிக்கிர மாதிரி தொடுவிங்கனு சொன்னானாம்.டாக்டரும் ஒரு ஒரு இடமா தொட சொன்னா எல்லா இடமும் வலிக்குதுனு சொன்னானாம்.உடனே உடம்பு ஃபுல்லா x-ray எடுத்து பார்த்த எல்லாம் சரியா இருந்துதாம்.டாக்டருக்கு இவன் ஒரு சர்தாருனு லேட்டாதான் ஞாபகம் வந்தது.அவன் விரல x-ray எடுத்து பார்த்தா அந்த எலும்பு உடைஞ்சு போயிருந்துச்சாம்.
இந்த மாதிரி அனானி எல்லாம் ஞானிகள்..சாரி,ஞானி இல்லை ஞாநி..குமுதம் ஓ போடும் ஞாநி...குறை சொல்றதுகுன்னே இருக்கிறவங்க..இவங்க கோட போய் சண்டை போடுறீங்களே bleaching powder..பார்த்து blue cross ல உங்கள புடிச்சிட்டு போய்ட போறாங்க..

 

all rights reserved to www.karkibava.com