Jul 4, 2008

தசாவதாரம்


இணையத்தில் கண்ட ஒரு விமர்சனத்தின் ஒரு பகுதி தான் இந்த கதை.

மேல்நாட்டு மன்னன் ஒருவனை ஏமாற்றி உலகத்திலேயே அழகான உடை தைத்துத் தருகிறேன் என்று சொல்லி நிறையப் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டானாம் ஒரு தையல் தொழிலாளி. அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. இந்த உடை உண்மை பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று " பிட்டை" பரப்பிவிட்டான். நகர்வல நாளும் வந்தது. உடைமாட்டிவிடுகிறேன் என்று சும்மாக்காச்சும் பாவனை காட்டினான். நிர்வாண மன்னனைக் கண்டு அலங்கார உடுப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடையாது என்று இன்னொரு " பிட்".மன்னனுக்கு தனது நிர்வாணத்தைக் கண்டு நாணம். இருந்தாலும் எங்கே தான் பொய் சொன்னதால் தான் தனக்கு இந்த உடை தெரிவதில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் "ஆஹா அற்புதம்" என்று வெமகுமதியளித்தான்.
குறிப்பாக ராணியிடம் சொன்ன பொய்கள். ராணியின் பாராட்டோ உண்மை போலவே இருந்தது. ரெம்ப நல்லா இருக்கு என்றால் பலருக்கும் பொதுப்படையாக இருக்குதே என்று சந்தேகம் வரும். இந்த 5 தங்க பொத்தான்களும் காலரின் சரிகைக்கு ஏற்றவாறு இருக்கின்றது என்று ராணி சொன்னால் பொய்போலவா இருக்கிறது. ராணிக்கும் தன் பொய்கள் குறித்துப் பயம். பின்னே அரசனுக்கு தினம் ஒருத்தி என்பதால் ராணி காயமுடியுமா ? தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் " ஐயே! ராஜா அம்மணமா வர்ராறு என்று போட்டு உடைத்துவிட்டான்.
வெட்கப்பட்ட ராஸா வீட்டுக்குள் ஓடினாராம். தசாவதாரம் படமும் உலகப்புகழ் பெற்ற உடை போலத்தான் இருக்கிறது. இருக்கிறது. கருணாநிதி முதல் மனோரமா வரை இப்படித்தான் புகழ்ந்து தள்ளினார்கள். அனேகமாகக் கருணாநிதி "கண்ணம்மாவை" ஒப்பிட்டுப் புகழ்ந்திருப்பாரோ என்ற ஐயமும் நிலவுகிறது.

உண்மைதான்.கமல் என்ற மகா கலைஞன் இது போன்ற படங்களை உலக தரம் என்கிற போது நமக்கு அவர் திறமை மீது சந்தேகம் வருவது இயல்பு தான்.அது வியாபார யுத்தி என்ற போதும் இது போன்ற செயல்களை அவர் தவிர்ப்பது நல்லது என்றே எனக்கு தோன்றுகிறது. இது தான் உலக தரம் என்றால் அவரது மஹாநதி மற்றும் அன்பே சிவம் படங்களை என்ன என்று சொல்வது?

2 கருத்துக்குத்து:

Anonymous said...

karki, ungalukku kalakkal karkinu paer vachathu thappei illapa.
Excellent eg.

cheena (சீனா) on December 14, 2008 at 1:04 PM said...

எண்ணியதை எண்ணியபடி வலிமையாக எழுதியது நன்று

நல்வாழ்த்துகள்

 

all rights reserved to www.karkibava.com