Jul 4, 2008

இயக்குனர் மகேந்திரனிடம் சில கேள்விகள்


சமீபத்தில் வண்ணத்துபூச்சி என்ற திரைப்படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவில் பேசிய மஹேந்திரன் இன்றைய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..டூயட் எனப்படும் காதல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டுமாம். சிறந்த படைப்பாளி என்று சிலரை நாம் நினைத்து கொண்டு இருக்கும் போது அவர்களது சில கருத்துக்கள் நம்மை சந்தேகிக்க வைத்து விடும். அவர் படங்கள் எடுத்த போது அவருக்கு தோன்றாத இது போன்ற சில விஷயங்கள் இப்போது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அப்படி என்றால் டூயட் பாடல்களோடு அவர் எடுத்த சில காவியங்கள் உண்மையிலே சிறந்த படங்கள் இல்லையா? முள்ளும் மலரும் என்ற அற்புதமான படத்தில் நித்தம் நித்தம் நெல்லி சோறு என்ற குத்து பாடல் வைத்த மகேந்திரனக்கு இப்போது பாடல்கள் மேலே வெறுப்பு வர காரணம் என்ன?சரி, காலப்போக்கில் இதை புரிந்து கொண்ட இயக்குனர் இந்த நற்செயலை தனது சாசனம் படத்தில் இருந்தவாது தொடங்கி இருக்கலாமே.வித்யாசாகர் இசைமைத்த பல நல்ல பாடல்களுக்காகவே அவரது படத்தை ஆவலுடன் சில ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அப்போதும் வரவில்லை இந்த நல்ல விஷயம் இயக்குனரின் கவனத்திற்கு.



பின் அவரது மகன் சச்சின் என்ற படம் எடுத்த போதும் அவருக்கு தோன்ற வில்லை ..இப்போது ,அதுவும் ஒரு படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவின் போது இந்த கருத்தை சொல்லி இருக்கிறார் மஹேந்திரன்.அவரது நியாயம் எனக்கு புரியவில்லை.உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்..

4 கருத்துக்குத்து:

Ka..... said...

Eppa puriyathu ungal kadupu vaar mellai..

கார்க்கி on July 15, 2008 at 8:07 PM said...

enna puriyuthu ??????

KA.... said...

Nenga matita oruvar eppadi sollitaruthane unggalku evaloo manem varutum?

cheena (சீனா) on December 14, 2008 at 1:08 PM said...

அன்பின் கார்க்கி,

கருத்துகள், கொள்கைகள் மாறுவதற்கு பல காரணங்கள் இருக்கும். வேண்டுகோளினை ஏற்பதும் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். கொள்கைகளை மாற்றுவதைத் தடுக்கவோ தட்டிக்கேட்பதோ இயலாத செயல். அவர் எந்த அடிப்படையில் அக்கருத்தினைக் கூறினார் என்பதும் நமக்குப் புரியவில்லை.

 

all rights reserved to www.karkibava.com