Nov 4, 2008

கமலுடன் என் நண்பன்.....


என் நண்பன் ஒருவனுக்கு நடிகர் கமலின் மகல் ஸ்ருதியை தெரியும்.ஒரு நாள் அவர் என் நண்பனை தன் தந்தையிடம் அறிமுகம் செய்து வைத்திருககிறார். ஒரிரு வாரங்கள் கழித்து அவனுக்கு கமலிடம் இருந்து அழைப்பு வந்தது.அவனை பார்க்க விரும்புவதாய் அவர் சொன்னதாக சொன்னான்.தொப்புள் பற்றி "பாண்டி" மயில்சாமி விளக்கம் சொன்ன அளவிற்கு இல்லை என்ற போதும் அவ்வபோது சின்ன சின்ன "கதைகள்" சொல்லுவான்.அப்படி ஏதாவது சொல்கிறானா என்று கேட்டதற்கு கோபமடைந்து விட்டான்.சொல்வதை கேள்டா என்றான். அவனும் துள்ளல் நடையும் தூள் பறக்கும் ஸ்டைலுமாய் அவரை காண அவர் இல்லத்திற்கு சென்றிருக்கிறான்..

அங்கே சென்ற அவனுக்கு மேலும் ஒரு ஆச்சரியம்."உலக தர" இயக்குனர் K.S. இரவிக்குமாரும் உடன் இருந்திருக்கிறார்.தன் அளப்பரியா ஆனந்தத்தை கட்டுப்படுத்தி கொண்டு அவர்கள் முன்னால் அமர்ந்தானாம்.எடுதத உடனே, கமல் அடுத்த படத்திற்கு ஒரு புதுமுகத்தை தேடுவதாக சொல்லி இருக்கிறார்.இவனிடம் பள்ளி அல்லது கல்லூரியில் நடித்த அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்றாராம் ஹே ராம்...இவன் சிறு வயதில் கார்ட்டூன் படங்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறான்.அதையும் ஒரு டாகுமென்ட்ரி படத்தில் குழந்தை நட்சித்தரமாக நடித்ததையும் சொல்லி இருக்கிறான்

இயக்குனர் அவர்கள் இவனிடம் நடிக்க விருப்பமா என்று கேட்டு ஸ்க்ரீன் டெஸ்ட் எல்லாம் நடந்து இருக்கிறது.பின் ஒரு காட்சி ஒன்றை விளக்கி இவனை நடிக்க சொல்லி இருக்கிறார்கள்.அது ஒரு காதல் படமாம்.அதனால் நல்ல ஒரு ரொமான்ஸ் சீனைத்தான் தந்தாராம் ரவிக்குமார்.ஒரு பெண்ணிடம் எப்படி எல்லாம் அவளை காதலிப்பதாக சொல்வதை போல் காட்சியும் வசனமும் இருந்ததாம்.அவன் இதை சொல்ல சொல்ல நாங்கள் எல்லாம் உண்ணிப்பாக கவனிக்க ஆரம்பித்தோம்.அவனும் அங்கு இருந்த ஸ்ருதியை பார்த்து தன் காதலை சொல்வது போல் நடிக்க முயற்சி செய்திருக்கிறான்.இவன் சொல்லி முடித்த பின் எழுந்து வந்த கமல் இவனை கட்டிபிடித்து பாராட்டி இருக்கிறார்.இவன் கண்கள் கலங்கி இருக்கிறது.நாங்கள் கூட கமலின் வாயால் பாராட்டைப் பெற்றதால் வந்த ஆனந்த கண்ணீரா என்று கேட்டோம்.

கமல் இவனிடம் என்ன, எதற்கு அழுகிறாய் என் கேட்டதற்கு நான் நடிக்கவில்லை ,உண்மையாகவே ஸ்ருதியை காதலிக்கிறேன் "EVERY ONE IS ACTING IN THIS WORLD NOT ONLY IN FRONT OF CAMERA BUT REAL LIFE TOO THE BODY ACTS N THE MIND DIRECTS !!!" என்றானாம்.நாங்கள் மிரண்டு போய் அவனை பார்த்தோம்.இவனுக்கு ஸ்ருதி மீது ஆசை உன்டு என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆனால் இத்தனை தைரியமாய் கமலிடமே சொல்வான் என்று நாங்கள் நினைக்கவில்லை..
அப்புறம் என்னடா ஆச்சு என்று கேட்ட போது அவன் சொன்னதை இப்போது நினைத்தாலும் என் மீது எனக்கே வெறுப்பாக இருக்கிறது.
சீ...அந்த நேரம் பார்த்து எங்க அம்மா காபி கொடுக்க எழுப்பிடாங்கடா " என்ற அவனை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன்.ஏதாவது ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கள் நண்பர்களே.....

53 கருத்துக்குத்து:

ஜெகதீசன் on July 22, 2008 at 1:00 PM said...

:)

கொலைவெறியோடு கோவிந்தசாமி said...

அவர விடுங்க...உங்கள என்ன பண்றது?

வால்பையன் on July 22, 2008 at 1:11 PM said...

இத எங்ககிட்ட சொன்ன உங்களை என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கோம்

வால்பையன்

கார்க்கி on July 22, 2008 at 1:16 PM said...

நீங்க என்ன சொல்றிங்களோ அதை செஞ்சிடலாம்..மக்களே இதுல என் தப்பு எதுவும் இல்ல...

வந்ததற்கு நன்றி திரு கோவிந்தசாமி,ஜெகதீசன்,வால் பயன் அவர்களே..

Anonymous said...

டாய்ய்ய்ய்ய்.....

முடியல....

PPattian : புபட்டியன் on July 22, 2008 at 3:55 PM said...

ஏற்கெனவே செல்வேந்திரனின் "அப்பாவும் ரஜினியும்" படித்ததால இது டுபாக்கூர்னு தெரிஞ்சிடுச்சி.. ஆனாலும் நல்லாருக்கு..

கார்க்கி on July 22, 2008 at 4:17 PM said...

அப்படியா?அந்த பதிவுக்கு ஒரு லின்க் கொடுங்க நண்பரே..வந்தமைக்கு நன்றி

PPattian : புபட்டியன் on July 22, 2008 at 6:00 PM said...

http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_11.html

கார்க்கி on July 22, 2008 at 6:29 PM said...

நன்றி.மற்றபதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

ச்சின்னப் பையன் on July 22, 2008 at 8:36 PM said...

:-)))))))

rapp on July 22, 2008 at 9:14 PM said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................
இன்னும் எத்தனப் பேர் இப்படி கெளம்பிருக்கீங்க

மதுவதனன் மௌ. on July 22, 2008 at 9:43 PM said...

நான் பின்னூட்டங்களை வாசிச்சிட்டுத்தான் இடுகையை வாசிக்கிற பழக்கமுள்ளவன்..ஹீ..ஹீ...

மதுவதனன் மௌ.

வீரசுந்தர் on July 22, 2008 at 10:22 PM said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல.. நானும் கடைசி வரைக்கும் ஒரு ஆர்வத்தோடவே படிச்சிட்டுருந்தேன்..இப்படி கவுத்தீட்டீங்களே!!

ILA on July 23, 2008 at 12:16 AM said...

வெவரமா கடேசி பத்திய முதல்லயே படிச்சுட்டேன்.

கயல்விழி on July 23, 2008 at 3:18 AM said...

இன்று என்ன இப்படி அனைவரும் கொலைவெறியோடு எழுதி இருக்கிறீர்கள்? :(

Udhayakumar on July 23, 2008 at 9:00 AM said...

:-D

இவன் on July 23, 2008 at 9:23 AM said...

//அவர விடுங்க...உங்கள என்ன பண்றது?//

ரிப்பீட்ட்டேடேடேடேடே......
உங்களைத்தேடி ஆட்டோ வந்துகிட்டு இருக்கு.... ஊங்க address என்ன??

கார்க்கி on July 23, 2008 at 9:34 AM said...

// இன்னும் எத்தனப் பேர் இப்படி கெளம்பிருக்கீங்க//

எனக்கு தெரிஞ்சுது நான் மட்டும்தான்..அப்போ நிறைய பேர் இருக்காங்களா? வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி..

கார்க்கி on July 23, 2008 at 9:35 AM said...

// நான் பின்னூட்டங்களை வாசிச்சிட்டுத்தான் இடுகையை வாசிக்கிற பழக்கமுள்ளவன்..ஹீ..ஹீ...//
அப்போ பின்னுட்டங்கள் இல்லாத இடுகைகளை படிப்பது இல்லையா?
வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி..

கார்க்கி on July 23, 2008 at 9:41 AM said...

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முடியல.. நானும் கடைசி வரைக்கும் ஒரு ஆர்வத்தோடவே படிச்சிட்டுருந்தேன்..இப்படி கவுத்தீட்டீங்களே!!//

அதானே வேணும் ..வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி வீரசுந்தர்

கார்க்கி on July 23, 2008 at 9:42 AM said...

// வெவரமா கடேசி பத்திய முதல்லயே படிச்சுட்டேன்.//

வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி ..எப்படி அஞ்சு வயசுலே பத்தாவது படிச்சிங்களா?

கார்க்கி on July 23, 2008 at 9:43 AM said...

// இன்று என்ன இப்படி அனைவரும் கொலைவெறியோடு எழுதி இருக்கிறீர்கள்? :( //

வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி

சரவணகுமரன் on July 23, 2008 at 10:47 AM said...

முடியல....

KA..... said...

Intha kataiya evalo urukama sonna ungala enna panurathu Karki??

கார்க்கி on July 23, 2008 at 7:07 PM said...

என்ன பன்னலாம்னு நீங்களே சொல்லுங்க கலை..

கார்க்கி on July 23, 2008 at 7:08 PM said...

வந்ததற்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி சரவண குமரன்

Ka..... said...

//என்ன பன்னலாம்னு நீங்களே சொல்லுங்க கலை..//

Blog'la sonna nala nenga tapicitinga..

Intha matiri yera varukidhayum katai solirathinga...adi vagiruvinga...heheKA...

yuva said...

Kathai vidrathunu solvangalei athu ithuthaana?
nalla viteenga ponga!!!

SurveySan on September 6, 2008 at 11:22 PM said...

;)

கார்க்கி on September 6, 2008 at 11:30 PM said...

@சர்வேசன்
வாங்க நண்பரே

@யுவா,

ஆமாம் யுவா...அதேதான்

குடுகுடுப்பை on September 9, 2008 at 8:50 PM said...

பொய்யும் ஒரு அனுபவம்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.

கார்க்கி on September 10, 2008 at 9:30 AM said...

கரீக்டா சொன்னிங்கண்ணா

ARUVAI BASKAR on September 10, 2008 at 10:30 AM said...

நல்ல இருந்தது உங்கள் நடை கார்க்கி !

கார்க்கி on September 10, 2008 at 11:03 AM said...

@பாஸ்கர்,

நன்றி நண்பரே

பரிசல்காரன் on November 4, 2008 at 8:40 AM said...

கொலைவெறி கோவிந்தசாமியோடு நானும் வரத்தயார். ஒன்ன கொல பண்ண...

நற...நற....

கார்க்கி on November 4, 2008 at 9:11 AM said...

கொல பண்றதுக்கு முன்னாடி இன்னைக்காவது பதிவு உண்டானு சொல்லிடுங்க.. அதிஷா உங்களையும் கெடுத்துட்டாரா? என்னாச்சு சகா?

உலக பரிசல் ரசிகர்கள் சார்பாக...

anand on November 4, 2008 at 10:17 AM said...

ஏற்கனவே படித்தாற்போல் ஞாபகம். மீள் பதிவா?
--prakash

Bleachingpowder on November 4, 2008 at 12:01 PM said...

எங்கேயோ எப்பவோ இத படிச்ச மாதிரியே இருக்கு தல இந்த பதிவு ஆனாலும் சூப்பர் :))

narsim on November 4, 2008 at 12:30 PM said...

அப்ப இன்னும் உடம்பு சரியாகலயா சகா.. பார்த்துக்கோங்க..

நர்சிம்

Karthik on November 4, 2008 at 1:33 PM said...

போட்டோ இல்லாத உடனே கடைசி வரியை படித்து தொலைத்துவிட்டேன்.
:(

உருப்புடாதது_அணிமா on November 4, 2008 at 3:17 PM said...

இது ஒரு மீள் பதிவா??
எங்கயோ பாத்த மயக்கம் >>>>>>

வெண்பூ on November 4, 2008 at 6:09 PM said...

நல்ல கற்பனை கார்க்கி.. ரசித்தேன்..

தாமிரா on November 4, 2008 at 6:35 PM said...

வெண்பூ, பரிசல், நர்ஸிம் அனைவருமே பிரெஷ்ஷா பதில் போட்ருக்காங்களே.. இது மீள்பதிவுதானே? டிஸ்கியே போடவில்லை?

கார்க்கி on November 4, 2008 at 7:12 PM said...

//anand said...
ஏற்கனவே படித்தாற்போல் ஞாபகம். மீள் பதிவா?
--praகஷ்//

அதேதான்...

// bleachingpowder said...
எங்கேயோ எப்பவோ இத படிச்ச மாதிரியே இருக்கு தல இந்த பதிவு ஆனாலும் சூப்பர் :))//

நல்ல ஞாபக சக்தி சகா உங்களுக்கு :))))

கார்க்கி on November 4, 2008 at 7:15 PM said...

// narsim said...
அப்ப இன்னும் உடம்பு சரியாகலயா சகா.. பார்த்துக்கோங்க..//

ஆமாம் சகா.. விட்டு விட்டு காய்ச்சல் வருது..

// karthik said...
போட்டோ இல்லாத உடனே கடைசி வரியை படித்து தொலைத்துவிட்டேன்.//

சூப்பர்... பெரிய ஜேம்ஸ்பாண்ட வருவ..

கார்க்கி on November 4, 2008 at 7:18 PM said...

// உருப்புடாதது_அணிமா said...
இது ஒரு மீள் பதிவா??
எங்கயோ பாத்த மயக்கம் >>>>>>//

ஆமாண்ணே...

//வெண்பூ said...
நல்ல கற்பனை கர்க்
கி.. ரசித்தேன்..//


நன்றி சகா..// தாமிரா said...
வெண்பூ, பரிசல், நர்ஸிம் அனைவருமே பிரெஷ்ஷா பதில் போட்ருக்காங்களே.. இது மீள்பதிவுதானே? டிஸ்கியே போடவில்லை?//

மீள்பதிவுதான்.. ஆனா இது ஆரம்பக்காலத்தில் எழுதபட்டது.. யாரும் படிசிருக்க மாட்டங்கனு போட்டேன்.. இதுக்கு டிஸ்கி போட்டா பப்படம் ஆயிடாதா சகா?

விலெகா on November 4, 2008 at 7:38 PM said...

சீ...அந்த நேரம் பார்த்து எங்க அம்மா காபி கொடுக்க எழுப்பிடாங்கடா " என்ற அவனை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறேன்.ஏதாவது ஒரு நல்ல ஐடியா சொல்லுங்கள் நண்பர்களே.....

ஹி ஹி ஹி ஹி பேர் அடிமை சிக்கீட்டானு இப்புடியெல்லாம் கொல்றாரே கார்க்க்கி:----))))))))

விலெகா on November 4, 2008 at 7:41 PM said...

கார்க்கியின் அடுத்த பதிவு ஆவலுடன் படிக்க தயாராகுங்கள் "கீழ்பாக்கத்தில் கார்க்கி" :-)))))))))))))

தமிழ்ப்பறவை on November 5, 2008 at 12:04 AM said...

மீள்பதிவுதானே.. ஏனெனில் நான் முதலில் படித்த உங்கள் பதிவு இது.

கார்க்கி on November 5, 2008 at 9:33 AM said...

//ஹி ஹி ஹி ஹி பேர் அடிமை சிக்கீட்டானு இப்புடியெல்லாம் கொல்றாரே கார்க்க்கி:----))))))))//

ஹிஹிஹி..
//தமிழ்ப்பறவை said...
மீள்பதிவுதானே.. ஏனெனில் நான் முதலில் //

ஆமாம் சகா

கும்க்கி on November 5, 2008 at 9:42 AM said...

ஹூம்..வெளையாட்டு புள்ள..சீக்கிறம் ஒரு கல்யானத்த பன்னவேண்டியதுதான்...(அதத்தான் இப்படி மறைமுகமா சொல்லிகாட்டுதோ?)

Raja Subramaniam on November 21, 2009 at 12:52 AM said...

பாராட்டுங்கள்.....

callsriganesh on March 13, 2012 at 8:49 AM said...

A lot can happen over coffee boss

 

all rights reserved to www.karkibava.com