Jul 29, 2008

கோல்கொண்டா கோட்டை -ஒரு பயணம்








சென்ற வாரம் கோல்கொண்டா கோட்டைக்கு சென்றேன்.உண்மையில் பல ஆச்ச்ரியங்களை கொண்டது இந்த கோட்டை.முகப்பிலே உள்ள "curtain wall" என்ற சுவர் கோட்டையின் கதவை எதிரிகளின் தாக்குதகளில் இருந்து காக்கும் வண்ணம் எழுப்பபட்டிருந்தது. கையால் வரையப்பட்டிருந்தாலும் இந்த பலகை தெளிவான பாதையை காட்டியது.தினம் ஆயிரம் சுற்றுலா பயனிகள் வரும் இந்த கோட்டைக்கு அவ்வளவுதான் நிதி ஒதுக்கபட்டது போலும்.



இந்த கோட்டையின் மிக பெரிய ஆச்சரியம் இதுதான். "clapping hall" என்று அழைக்கபடும் இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நின்று கைத்தட்டினால் அது 24 முறை எதிரொலிக்கிற‌து.ந‌ம் கைகளில் இருந்து செல்லும் ஒலி அலைகள் இந்த கூரையின் 24 முகங்களில் பட்டு எதிரொலிக்கிறது.அதுவும் இந்த எதிரொலி நீங்கள் அந்த இடத்தில் நின்றால் மட்டுமே கேட்கிரது.உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கு கூட கேட்பதில்லை.இதை எல்லம் விட,நாம் தட்டும் பலமான கைத்தட்டல் கோட்டையின் மிக உயரமான புள்ளியில் (சுமார் 450 அடி)தெளிவாக கேட்கிற‌து. அந்த காலத்தில், கோட்டைக்கு வருபவர்களை பற்றி உய்ரத்தில் இருக்கும் அரசவையில் இருக்கும் மந்திரிகளிடம் தெரிவிக்க இதை பயன் படுத்தி இருக்கிறார்கள்.நம்ப முடிகிறதா? அது மட்டுமில்லாமல் இது போன்ற பல கூரைகள் அரண்மனை முழுவதும் காணப்படுகிற‌து.நான்கு மூளைகளில் நான்கு பேர் நின்று கொண்டு சுவறில் எழுப்பும் மெல்லிய ஒலி மீதி மூவருக்கும் தெளிவாக கேட்கிற‌து.இது பாரசீக கட்டட கலையின் அதிசயம்.அதை பற்றி கேள்விபட்டு அந்நாட்டு கலைஞரின் உதவியோடு கட்டபட்டிருக்கிற‌து.






இன்னமும் சிதையாத தடுப்பு சுவர்.




என் கண்ணில் சிக்கிய‌ அழகிய மரம்.



காலத்தால் அழியா கோட்டையைத்தான் நம்மால் கட்ட முடியாது என்று நம் மக்கள் மக்காத பிளாஸ்டிக் குவளைகளை கோட்டையில் போட்டு தங்கள் வரவை அழியாத வகையில் பதிவு செய்கின்றனர்.


இது ஓசோன் மண்டல ஓட்டை இல்லை.கோட்டையில் உள்ள அரண்மனையின் கூரையில் விழுந்த ஓட்டை."கோட்டையில் ஓட்டை" என்று வாரப்பத்திரிக்கைகள் ஒரு கட்டுரை எழுதலாம்.
இன்னும் பல படங்களும் செய்திகளும் இருக்கிற‌து.அதை தனியே ஒரு வலைபூவில் போடலாம் என்று எண்ணம்.உங்கள் கருத்துக்களை சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே !!!

10 கருத்துக்குத்து:

sri.. said...

superb pics...very informative..good job .

யாத்ரீகன் on July 29, 2008 at 8:15 PM said...

>> அது 24 முறை எதிரொலிக்கிற‌து <<

did it really sound exactly so many number of times ?

good to know interesting details.. thanks..

கார்க்கி on July 30, 2008 at 10:13 AM said...

yes..i dint count the exact number..but i felt that...thanks for coming..

உண்மைத் தமிழன்(15270788164745573644) on July 30, 2008 at 12:54 PM said...

நன்று.. இது போன்ற சுற்றுலா கட்டுரைகள் அடுத்தவரையும் பயணிக்க வைக்கும்.

நன்றி கார்க்கி..

கார்க்கி on July 30, 2008 at 2:25 PM said...

நன்றி தமிழன்..இன்னும் முழுமையாக சில பயண கட்டுரைகளை எழுதி கொண்டிருக்கிறேன்.

yuva said...

Charminar uruvana vitham matrum, ippothu irukkum nilamayum patriya ungal karuthai ethirpaarkindraen karki.......

கார்க்கி on September 6, 2008 at 7:13 PM said...
This comment has been removed by the author.
KA.... said...

'Clapping hall'..interesting.

Thanks for the 'trip' and also beatiful photos.

Nice place for a visit.

கார்க்கி on September 9, 2008 at 10:15 AM said...

நன்றி கலை

விக்னேஷ்வரி on August 21, 2009 at 1:08 PM said...

Nice pics Karki.

 

all rights reserved to www.karkibava.com