Jul 25, 2008

குசேலன்-ஒரு வேண்டுகோள்


இதோ..குசேலன் தயாராகி விட்டது.ஏற்கனவே அதைப் பற்றிய விவாதங்களும் தொடங்கிவிட்டன.முன்னோட்டத்தின் தெளிவான வீடியோவும் நண்பர் ஒருவர் தனது வலைபூவில் தந்து விட்டார்.பாடல்களும் வெளியாகிவிட்டன..சரி,என்ன சொல்ல வருகிறேன் என்கிறீர்களா?
இது தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல போகும் படமல்ல..உலகத்தரம் போன்ற எந்த முத்திரையும் இதற்கு இல்லை.வழக்கமாக ரஜினி படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் குசேலனிலும் இருக்கும் என் நம்பலாம்.ரஜினியை ரஜினியாகவே காண்பிக்க போகும் இந்த படத்தில் அவரின் திரையுலக செல்வாக்கை விவரிப்பது எளிதான செயலே.சந்திரமுகி,சிவாஜி படங்கள் வெளியான அன்று நடந்த கொண்டாட்டங்களில்( சிலருக்கு கூத்து)ஒரு பங்கை காட்டினாலே போதும்.ஆக,இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்து வைக்க போகும் படம் என்றுதான் இயக்குனர் சொல்லி வருகிறார். அதனால் நீங்கள் வேறு எதாவது எதிபார்த்து செல்வதாக இருந்தால் அதை விட சிறுபிள்ளைத்தனமான செயல் வேறு இருக்க முடியாது.
நான் சொல்ல வருவது என்னவென்றால் ,"வலையுலக நண்பர்களே!!! மேற்சொன்ன விடயங்களில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்காதீர்கள்..அதனால் உங்களுக்கு தலை வலியும் எரிச்சலும்,பண விரயமும்,கால விரயமும் ஏற்படும்.எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் உண்டு.அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அப்படி எல்லாம் இல்லை,சூடான இடுகைகள் பகுதியில் உங்கள் பதிவும் வர வேண்டும்,அதற்காகத்தான் நீங்கள் (திட்டி) விமர்சனம் எழுத போவதாக இருந்தால் அதை ஒரு அடைப்பு குறிக்குள் சொல்லிவிடுவது நலம்."
இப்படிக்கு,
உங்கள் நலம் விரும்பி கார்க்கி..

5 கருத்துக்குத்து:

rapp on July 25, 2008 at 11:58 AM said...

நீங்க அநியாயத்துக்கு நல்லவர் போல

கார்க்கி on July 25, 2008 at 12:30 PM said...

இல்லவே இல்லைங்க...எனக்கு ரஜினி,விஜய்,பரத் எல்லாம் புடிக்கும்...

Bleachingpowder on July 25, 2008 at 12:33 PM said...

ரொம்ப சரியா சொன்னீங்க. படம் வந்துட்டா இவங்க தொல்லை தாங்க முடியாது. எங்க எது கிடக்குமோ அங்க அதுதான் கிடைக்கும் ( அட குசேலன் டயலாக் இல்லீங்க).

Bleachingpowder on July 25, 2008 at 12:36 PM said...

//இல்லவே இல்லைங்க...எனக்கு ரஜினி,விஜய்,பரத் எல்லாம் புடிக்கும்...//

இந்த உள்குத்துதான வேண்டாகறது... பரத்தையெல்லாம் தலைவர் பேரோட சேர்த்து போடதீங்க. சிங்கம் சிங்கிளாதான் இருக்கனும்

கார்க்கி on July 25, 2008 at 12:52 PM said...

//இந்த உள்குத்துதான வேண்டாகறது... பரத்தையெல்லாம் தலைவர் பேரோட சேர்த்து போடதீங்க. சிங்கம் சிங்கிளாதான் இருக்கனும்//

அட மண்ணிச்சுகங்க..எனக்கு அவர் டான்ஸ் ரொம்ப புடிக்கும்...மத்தபடி தலைவர் கூட இவங்கள போய்....ஹே ஹேஹே ஹேஹேஹே

 

all rights reserved to www.karkibava.com