Jul 17, 2008

தமிழ் மண அன்பர்களுக்கு...


கலைகளும்,ரசனைகளும்,கலாச்சாரங்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் இணத்திருக்கும் மாறுபடும். பூச்சிகளை வறுத்து சாப்பிடுவதை என்னால் பார்க்க கூட இயலாது.சொந்த மகளையே விலை பேசி விற்கும் அத்தனை தாய்களை தாய்லாந்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. மேற்கிந்திய மக்களின் தலை முடியை ஸ்டைல் என்று எத்தனை பேர் ஒத்து கொள்வார்கள்?
இவை ஏன்,ஒரு வீட்டுலேயே எவருக்கும் ஒரே வித விருப்பங்கள் இருப்பது இல்லை. எதிரெதிர் திசையில் இருவர் நிற்கும் போது ஒருவர்க்கு வலப்பக்கம் இருக்கும் பொருள் மற்றவருக்கு இடப்பக்கம் தானிருக்கும்.
சும்மா நானும் மொக்கை போட ட்ரை பண்ணேன்...சில பதிவர்கள் தங்களை தாங்களாகவே பெருசா நினச்சுகிட்டு தனக்கு புடிக்கலனா அது மட்டம்,குப்பை என்று சகட்டு மேனிக்கு திட்டுவதை வாடிக்கையாக இருக்கின்றனர். குறிப்பாக சினிமா விமர்சனத்தில் இத்தகைய போக்கு நிறைய இருக்கு..உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் காசு கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆனால்,என் கேள்வி எல்லாம் ரஜினியும் விஜயும் இன்ன பிற மசாலா பட நாயகர்களும் எங்கள் வழி இதுதான் என்று சொன்ன பிறகு ,எதற்காக இவர்கள் அந்த படத்தை பார்க்க வேண்டும்?எதற்காக அவர்களை திட்ட வேண்டும்? நான் கவனித்த வரையில் இவர்களை சாடும் அனைத்து பதிவர்களும் இத்தகைய ,குறிப்பாக,ரஜினி மற்றும் விஜயின் அனைத்து படங்களையும் பார்த்து விமர்சிக்க தவறவில்லை..
உண்மையை சொல்ல போனால் ,இவர்கள் எவ்வளவோ பரவா இல்லை..தங்கள் விருப்பத்தை தெளிவாக சொல்லிவிட்டு அதை விரும்பி வரும் ரசிகர்களுக்கு தேவையானதை தங்கள் படங்களில் வைக்கின்றனர். ஆனால், உலக தரத்தில் படம் என்று புருடா விட்டு தசாவதாரம் போன்ற படத்தை வெற்றிகரமாக ஓட செய்திருகிராரே கமல் அவர் எப்படி? உடனே நான் கமலுக்கு எதிரானவன் என் நினைக்க வேண்டாம்.அவரின் மகாநதியும் அன்பெசிவமும் தமிழ் திரையுலகில் சிறந்த படங்களின் வரிசையில் உண்டு என்று நினைப்பவன்.எனக்கு சில நேரங்களில் நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்று தோன்றும்.அப்போது தமிழின் சில படங்களையும் சில வேற்று மொழி படங்களையும் பார்ப்பேன்.சில நேரங்களில் நண்பர்களோடு திரை அரங்கம் சென்று ரஜினி,விஜய் படங்களையும் பார்ப்பேன்.என் தேவையை நான் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்வேன்.
அப்படி இல்லாமல் எதை பற்றி எழுதினாலும் அதில் ரஜினையும் விஜயையும் கிண்டல் அடித்தால் எதோ அவர் ஒரு மாமேதை என்ற ரீதியில் சிலர் எழுதுவது எனக்கு புடிக்கவில்லை.நான் எல்லா நண்பர்களையும் சொல்லவில்லை,இப்படி செய்து கொண்டிருக்கும் அன்பர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். ஒரு வலைப்பதிவில் ஒரு அன்பர் "ஒரு நல்ல படம் என்பது ரெண்டு நாளிக்காவது அவர் மனதை பாதிக்க வேண்டுமாம்"..அய்யா,உங்களுக்கு அதற்கு நேரமிருக்கிறது ,சினிமாவை பார்த்து அதற்காக கவலைப்பட நேரமிருக்கிறது..வாரம் ஆறு நாள் கச்டபட்டுவிட்டு ஒருநாள் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவது தவறா?அந்த நாளிலும் சோகமான படத்தை பார்த்துவிட்டு அடுத்த நாள் வேலையும் ஓடாமல் திட்டு வாங்க என்னால் முடியாது..அதற்க்கு நீங்கள் சொல்லும் மசாலா படங்கள்தான் சரி..படம் முடியும்வரை என்ஜாய் பண்ணிவிட்டு வெளியே வரும்போது நாம் அதை மறந்திருப்பேன்..இத்தகைய தேவை உள்ளவர்களை நீங்கள் ரசனையற்ற ஜென்மம், கீழ்த்தரமானவன் இன்ன பிற வார்த்தைகளால் அழைக்கலாம்.அதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.. பணம்,என்ற முதலையை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நாடு விட்டு நாடு சென்று வேலை செய்து கொண்டு ஐயோ இதை விட்டு விட்டோம் அது கிடைக்கவில்லை என்று போலி கவிதைகள் எழுதுபவர்களை விட நாங்கள் ஒன்னும் மட்டமானவர்கள் அல்ல..கோவபடாதிர்கள்சில விதிவிலக்குகள் உண்டு..புலம் பெயர்ந்தவர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்கள் போன்றோர் பற்றி நாம் கூறவில்லை..கணினி துறையில் இருக்கும் நண்பர்களையும்,அதில் நாங்கள் இதை எல்லாம் இழந்து விட்டான் என்று கவிப்பாடும் நண்பர்களை மட்டுமே இங்கு சாடுகிறேன்..நீங்கள் அவ்வாறு இல்லை,பணத்திற்காக தான் இங்கே இருக்கிறேன் என்று தெளிவாக சொன்னால் உங்களை மனமார பாராட்டுகிறேன்..இங்கேயே கணினி துறை வேலைகள் பெருகிவிட்டன..அங்கே போனால் ஒரு லட்சம் இங்கே முப்பதாயிரம்..மற்றபடி வேறு வித்தியாசம் இல்லை..இப்படி தங்கள் பொருளாதரத்தை உயர்த்த அனைவரும் பாடுபடுகிறோம்.அதே போல் தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் பணம் பண்ண வேண்டும் என்று இவர்கள் கூறுவது சரி என் எனக்கு படுகிறது..
உங்களால் ஒரே ஒரு மாற்று நடிகனை காண்பிக்க முடியுமா? விக்ரம், சூரியா போன்றவர்களை தயவு செய்து சொல்லிவிடாதிர்கள்..நீங்கள் சொல்ல போகும் நடிகர் ரஜினி ,விஜயை போன்று மசாலா குப்பைகளில் நடிக்க கூடாது.. நீங்கள் வெறுக்கும் ரசிகர் மன்றங்களை அங்கீகரிதிரிக்க கூடாது..இந்த இரண்டே இரண்டு நிபந்தனைகளை ஏற்க்க கூடிய ஒரே ஒரு நடிகனை காட்டுங்கள்..பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் எல்லாம் நல்ல படங்கள் தான்..அமீரின் முதல் படம் பற்றி தெரியுமா? அப்போது வந்து கொண்டுஇருந்த விஜய் படங்களுக்கும் மௌனம் பேசியதே க்கும் எந்த வித்யாசாமுமில்லை....ரெண்டு படம் ஓடாவிட்டால் இந்த வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்..
உங்களால் இவர்களின் படங்களை ரசிக்க முடியாவிட்டால் தவிர்த்து விடுங்கள்.. அசிங்கம் என்று தெரிந்து அதை தொட்டுவிட்டு முகம் சுழிப்பவன் அறிவாளி அல்ல...எங்களை பற்றி கவலை படாதிர்கள்..நாங்கள் சாணத்தை உரமாக எடுப்பவர்கள்..."மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"என்பார்கள்..இங்கே,தமிழ் மனத்தில் கூட அதிக வாக்குகள் வாங்கும் பதிவிற்கு சிறப்பு தகுதி கிடைக்கிறது..எத்தனை பேருக்கு புடிகிறதோ அதுதான் சிறந்த பதிவு என்பதாக அர்த்தம்.ஆனால் பலருக்கு புடித்த படம்,அதனால் வசூலில் வென்ற படம் உங்கள் பார்வையில் குப்பை..இருக்கட்டும் ,உங்கள் பார்வைக்கு குப்பை என்று சொல்லுங்கள் ..ஆனால் அடுத்தவனின் ரசனையை கிண்டல் செய்யாதிர்கள்..ஏனென்றால் ,இப்போது முதல் பத்தியை படியுங்கள்...

24 கருத்துக்குத்து:

கோவி.கண்ணன் on July 17, 2008 at 3:33 PM said...

உள்ளேன் ஐயா.

கார்க்கி on July 17, 2008 at 3:50 PM said...

என்ன சொல்ல வரிங்க மாணவரே?

Arivazhagan on July 17, 2008 at 7:05 PM said...

Hi Karki,

This is Chitra's Friend Ariv , First of all How are you and Where are you.

I know you are a big Vijay fan like i used to be ...;)

This Arguement of Opposites between Class and Mass will be there in every field ... Right from Software ( Like Unix and Windows OS )

What you told is right , Differernt type of audience should be there for having the films in colourful fashion. The same way to the films too ....

Iam in the class side and you are in the mass side thats the only difference.

For a normal person who likes to watch for cinema in weekend to enjoy it, Rajini and Vijay are the great showmen.

People sho does class kinda roles/films should also continue , If not we wont have any films to show as our value of cinema to even the other state person.
(If you really think your heart about the quality of Telugu films and the Image it has in your mind ... You have the answer yourself )

So Both of them should continue

People are fighting because , There are two ways to argue , one making mass inferior or saying superior points on the class. If you really check your blog , you have tried to avoid making other inferior to the most , But when you argue through words with a flow iam sure even you will be struck like others.

This is not something which you or i can end , This was/is/will/should go on.

Continue your work ... Thanks to chitra for the link ...

By the way , Iam really not able to accept Mounam pesiyadhe in the class of Bagavathy or Vaseegara .... (As you told parameters differ , but the way you compared in the blog is about the classiness and director touch ) ....

Atleast this particular comparison is nowhere comparable as far as iam concerned ...

Bye for Now

கார்க்கி on July 17, 2008 at 7:16 PM said...

Thanks for ur visit..am fine and i am in hyd..hope u too r in fine fettle..U r rite..argument continues..i just want to record my voice when evryone in tamilmanam are just opposite to me..this is not the article which was drafted and reviewed for several times..i finished this in one touch..so,there are some flaws..again saying am not trying to portray myself as refined writer or critic here..just said what i felt abt him..mounam pesiyadhe is not bagavthy but kind of movie like kushi,youth..its a commericial entertainer which has kuthu song,dreamy duets and romance of lead pairs in a cinematic view..still its one of my fav movies..do send ur comments for other posts..thanks again

கார்க்கி on July 17, 2008 at 7:24 PM said...

am not aginst class movies..but it doesn't mean i hate mass and mass heroes are shit..hero worship is evrywhere..some may have their heroes in cinema and some in politics and some in literature..when they r talking abt science they r intentionally pulling rajini and vijay for example..of course,making fun out of them..dats y am asking can u show me one person like dat in tamil cinema..u too ended ur words without showing that person..tell me re,i need to tell my other state friend..lolz..

Anonymous said...

//சொந்த மகளையே விலை பேசி விற்கும் அத்தனை தாய்களை தாய்லாந்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.//

Who says so? Chummavachum adichu vida koodathu.

Karthik on July 17, 2008 at 7:36 PM said...

//வாரம் ஆறு நாள் கச்டபட்டுவிட்டு ஒருநாள் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவது தவறா?

சினிமா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் தருகிறது என்பது நிச்சயம் உண்மை. யாரும் அடுத்தவரின் ரசனையை குறை சொல்ல வேண்டியதில்லை. ஆனால்,

ரஜினி, விஜய் படங்கள் உங்களுக்கு சந்தோஷம் தந்தால் தாரளமாக பார்க்கலாம். ஆனால் எனக்கு தலைவலியையும், கோபத்தையும்தான் தருகின்றன.

Arivazhagan on July 17, 2008 at 7:36 PM said...

Got this in mind , what is your view on this ...

Lets say the class and mass film makers Aim is fixed
It really misses at times so they will try to mix with the opposite to make them a bit more stable....

Like when kamal has given series of flops he does some comedy films , or mix some commercial items and do a film like dasavatharam.

After a series of films which didn't do well , even the mass actors will try to add some logical things classy feel to make it stable. This has many examples.

"'"After you know something about the subject anything complex in it will attract you ... "'"lets say after reading good books in tamil ... you would love "mogamull" than the books with normal handling.
A nice software with lesser use of Junk coding. A blog with healthy design and content.


Cinema is also another area like that for people who doesn't want to spoil their weekend with heavy feelings and technical details, they go to the shop which sells the books written by Vijay and Rajini.

The others will go to a shop where you can hardly see any customers , but lot of admirers who doesn't even ready to buy the book :) LOL

Karthik on July 17, 2008 at 7:51 PM said...

மாஸ், க்ளாஸ் இதெல்லாம் சும்மா. ஆனால் அவர்களை சிஎம் ஆக்குவேன் என்றால்தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.

கார்க்கி on July 17, 2008 at 7:53 PM said...

"ரஜினி, விஜய் படங்கள் உங்களுக்கு சந்தோஷம் தந்தால் தாரளமாக பார்க்கலாம். ஆனால் எனக்கு தலைவலியையும், கோபத்தையும்தான் தருகின்றன."

அப்பறம் ஏன் அதை பார்க்க வேண்டும்? எனக்கு கூடத்தான் உங்களுக்கு பதில் சொல்ல வெறுப்பா இருக்கு.

கார்க்கி on July 17, 2008 at 7:55 PM said...

//சொந்த மகளையே விலை பேசி விற்கும் அத்தனை தாய்களை தாய்லாந்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.//

Who says so? Chummavachum adichu vida koodathu.

முதலில் அந்த நாட்டை பற்றி தெரிந்து கொண்டு பின் பேச வாருங்கள்.அப்பறம்,நாங்கள் பேசி கொண்டிருப்பது சினிமாவை பற்றி..அதை பற்றி எதாவது சொல்லுங்கள்..

கார்க்கி on July 17, 2008 at 7:56 PM said...

மாஸ், க்ளாஸ் இதெல்லாம் சும்மா. ஆனால் அவர்களை சிஎம் ஆக்குவேன் என்றால்தான் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது."

அட!!! நாம் ஒன்றாகி விட்டோம்...நானும் அதை வெறுக்கிறேன்..

Arivazhagan on July 17, 2008 at 8:02 PM said...

I completely accept that i cannot tell you anybody (even a single person ) who doesn't want money , fame and mass in cinema , Even if they were there they are not here now ( example - director Rudraiyaa ).

But iam really gratefull that some people pushed themself to be in class film making even if they failed at times to their best extent and satisfied people who wants those kind of movies in tamil itself. If they even did mistakes by asking for mass at times , thats the best tamil film industry has got , what to do.


Lets finish this arguement , iam sure you will get more like this ... LOL , because Arguement of opposites always continues.

Karthik on July 17, 2008 at 8:05 PM said...

//அப்பறம் ஏன் அதை பார்க்க வேண்டும்?

உள்ளே போகும்போதே வலிப்பதில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் வலிக்கிறது.

//எனக்கு கூடத்தான் உங்களுக்கு பதில் சொல்ல வெறுப்பா இருக்கு.

Oh Really?! இனிமேல் உங்களுக்கு இந்த சிரமம் இருக்காது.

I dont give a damn if you dont publish this.

Karthik on July 17, 2008 at 8:07 PM said...

//அட!!! நாம் ஒன்றாகி விட்டோம்...

Noooooo! We are not. I am not your kind of person. Thats sure.

Bye!

கார்க்கி on July 18, 2008 at 9:56 AM said...

dont get tensed karthick..its just an argument and i said we r in the same boat atleast in this issue..again u have prooved dat u feel u r the superior and others are lesser than u..i am not supporting any mass heroes but hate this attitude..thanks for avoiding me and continue to avoid mass movies like dis..den u wont get headache...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Karthik on July 18, 2008 at 9:39 PM said...

//dont get tensed karthick..

Well, Im not.

//its just an argument and i said we r in the same boat atleast in this issue..

Then Im happy.

//again u have prooved dat u feel u r the superior and others are lesser than u..i am not supporting any mass heroes but hate this attitude..thanks for avoiding me and continue to avoid mass movies like dis..den u wont get headache...

I got completely different picture here in your comment. If you really mean your comment in my blog?

கார்க்கி on July 19, 2008 at 9:53 AM said...

yes,i meant dat...lets stop this here...b'coz as arivu said there is no ending to this...

thesun on July 21, 2008 at 7:59 PM said...

ஹே கார்க்கி, சூர்யா (சிங்கப்பூர்). நெத்தியடியா சொன்னே, மச்சி... இந்த அறிவாளிங்க இம்சை தாங்கமுடியல... சும்மா 'நானும் வலைப்பூ வச்சிருக்கேன், விமர்சனம் பண்ணுவேன்'னு ரொம்ப பண்றானுங்க... ஒரு படம் பாத்து தலைவலி வந்தா அடுத்த படத்துக்கு போகக்கூடாது... ஒவ்வொரு படமும் பாத்துட்டு வந்து குறை சொன்னா, தலயில வேற ஏதோ பிரச்சினை.... Continue your good work... Take care...

கிரி on July 22, 2008 at 12:09 AM said...

//உங்கள் பார்வைக்கு குப்பை என்று சொல்லுங்கள் ..ஆனால் அடுத்தவனின் ரசனையை கிண்டல் செய்யாதிர்கள்.//

தாறு மாறா வழி மொழிகிறேன்.

கார்க்கி on July 22, 2008 at 9:20 AM said...

நன்றி சூரியா..

கார்க்கி on July 22, 2008 at 9:31 AM said...

நன்றி கிரி... இப்போதுதான் உங்கள் வலையை பார்த்தேன். ரஜினி"க்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயமா? ..நல்ல பதிவு...தனிமனித பார்ரட்டுதல் கூடாது என்று சொல்லி கொண்டே நம் நண்பர்கள் தனிமனித தாக்குதல்களை தொடர்கின்றன.சினிமா ஹீரோக்கள் கூடாது என்று சொல்லி கொண்டே வலை ஹீரோக்களை போற்றுகின்றனர். இவர்களை பிறப்பால் சொல்லி பிரிப்பது எந்த அளவிற்கு வேட்ககேடோ ,அதே போல் ஒரு படைப்பை இவர்கள் அந்த படைப்பாளியின் மீது கொண்டுள்ள வெறுப்பால் விமர்சிப்பதும் வெட்ககேடானது.
சரியா சொல்லிட்டேனா?

கிரி on July 22, 2008 at 2:13 PM said...

//சினிமா ஹீரோக்கள் கூடாது என்று சொல்லி கொண்டே வலை ஹீரோக்களை போற்றுகின்றனர்.//

இல்லைங்க இவர்களை பொறுத்தவரை ரஜினி விஜய் அஜித் போன்றவர்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் முட்டாள்கள். சொல்கிறவர்கள் சொல்லிட்டே தான் இருப்பாங்க....அவங்க புத்திசாலிகளாகவே இருந்துட்டு போகட்டும்..ஆனால் அதற்காக மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று கூறுவதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை.

//இவர்களை பிறப்பால் சொல்லி பிரிப்பது எந்த அளவிற்கு வேட்ககேடோ ,அதே போல் ஒரு படைப்பை இவர்கள் அந்த படைப்பாளியின் மீது கொண்டுள்ள வெறுப்பால் விமர்சிப்பதும் வெட்ககேடானது.
சரியா சொல்லிட்டேனா?//

போட்டு தாக்கிட்டீங்க :-)

 

all rights reserved to www.karkibava.com