Jul 11, 2008

காதலை காதலிக்கின்றேன்...


மறக்கத்தான் தோணவில்லை
அவள் மடியில் சாய்ந்திருந்த நொடியை..
நினைக்கத்தான் முடியவில்லை
அவள் பிரிந்த அந்த நொடியை...
இடியாய் ஒலிக்கும் அவள் பிரிவு
மின்னல் ஒளியாய் வரும் அவள் நினைவு..
எதிர்காலம் இல்லாதவனாய் இருக்கின்றேன்
இருந்தும்
இன்னும் நெஞ்சில் காதல் வளர்க்கின்றேன்,
என்னைப் போல் ஒருத்தி
காதல் காடு தேடி வருவாள் என்று...
யாருமில்லா அறைக்குள் நான் புலம்பும் ஓசை
நான் மட்டும் கேட்கின்றேன்...
நாளைய விடியிலலாவது
காடு தேடி ஒருத்தி வருவாளா என்று....!!!!

5 கருத்துக்குத்து:

இவன் on July 11, 2008 at 1:36 PM said...

வருவாள் வருவள் கவலைப்படாதீங்க

ananth on July 12, 2008 at 12:58 PM said...

வருவாள்...கவலைப்படாதீங்க...கார்க்கி

ananth on July 12, 2008 at 1:00 PM said...

வருவாள்...கவலைப்படாதீங்க...கார்க்கி

கார்க்கி on July 14, 2008 at 10:28 AM said...

பார்ப்போம்...ஒருவரின் முடிவுக்காக காத்திருக்கலாம் ஆனால் காத்திருப்பதையே முடிவாக கொள்ள கூடாது அல்லவா...

Ka..... said...

Varuvangal...kathuerungal..

 

all rights reserved to www.karkibava.com