Jul 10, 2008

மெல்லினமே...மெல்லினமே...


திரைப்பாடல்களின் மெட்டில் நான் சில பாடல்களை எழுதி இருக்கிறேன்.ஷாஜகான் படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்..

என்னுயிரே என்னுயிரே என் உயிரை உன்னிடம் தந்தேன்
அதை கொடுத்த பின்னும் என் மனசுக்குள்ளே அட ஏதோ உறுத்த கண்டேன்
இது எதுவும் புரியவும் இல்லை இது எதனால் தெரியவும் இல்லை
உன்னை காணும் நேரம் மட்டும் என் இதயம துடிப்பதே இல்லை ஓஹோ..ஹே

விழிகள் மோதி உடையும் ஒரு இதயம் என்னிடம் கண்டேன்
அதை முழுதாய் பார்த்து கொள்ள உந்தன் கையில் தந்தேன்
அந்த கண்ணின் மீது புருவம் அது மூன்றே நாளான மதியோ
அந்த புருவத்தில் நானும் வீழ இது காதல் செய்த சதியோ
காதலின் பெயரிலே வன்முறை செய்கின்றாள்
கண்களால் கண்களால் அணுகுண்டை வீசுகின்றால்
காயம் எதுவும் இல்லை என்ன மாயம புரியவும் இல்லை
உன்னை காணும் நேரம் மட்டும் எந்த இதயம் துடிப்பதே இல்லை..ஓஹோ..ஹே

4 கருத்துக்குத்து:

ஒளியவன் on July 11, 2008 at 10:18 AM said...

உங்கள் பாடலும் அருமை மெல்லினமே மெட்டிற்கு. நானும் இதே மெட்டுக்கு சமீபத்தில் எழுதியது நியாபகம் வந்தது. இதுதான் அது
http://oliyavan-baskar.blogspot.com/2008/06/blog-post_08.html

கார்க்கி on July 14, 2008 at 10:31 AM said...

அருமை...எனது வார்த்தைகள் திரைப்பாடல்களில் வழக்கமாய் வரும் வார்த்தைகள் தான்.உங்கள் வரிகள் புதுமையாய் இருக்கிறது.சில இடங்களில் மெட்டோடு இசைந்து செல்ல மறுப்பதாய் எனக்கு தோன்றுகிறது.வாழ்த்துகள்

yuva said...

innum neraya paadal tunegalukku neenga eluthina paadalgalai kanomei??

KA.... said...

Yuva is right. Engga Karki vera paadalgal?

 

all rights reserved to www.karkibava.com