Jul 10, 2008

ராதாக்கா..



நிற்க கூட நேரமின்றி காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இன்றைய உலகம் ஓடும் ஓட்டத்தை தான் வாழ்க்கை என்கின்றனர் என் நண்பர்கள்.பல நேரங்களில் அது உண்மை என்பது போல நானும் ஓடி கொண்டு தானிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில்,அதுவும் குறிப்பாக நான் தனியாக இருக்கும் நேரங்களில் ,என்னை அறியாமல் நான் என்றோ பார்த்த பல காட்சிகள் என் கண் முன்னே விரிவது போல் கண்டேன். அவ்வாறு கண்ட காட்சிகளில் பெரும்பான்மை பெற்று இன்றைய கருப்பொருளாக வந்திருப்பவர் தான் ராதாக்கா
நான் பள்ளி சென்ற காலங்களில் எங்கள் கையில் 1 ரூபாய் இருந்தாலே பெரிய விஷயம்.ஆனால் அந்த ஒரு ரூபாயிலே பத்து பேருக்கு வேண்டியதை வாங்கி மகிழும்படி செய்தவர் இந்த ராதாக்கா.உணவு இடைவேளையில், இவரை சுற்றிதான் பள்ளியே இருக்கும்.வெறும் ஐந்து காசுக்கு இவர் தந்த தேன் மிட்டாய், காரம்,ஜீவா ஜோதி இத்யாதிகளை சுவைக்காதவரே எங்கள் பள்ளியில் இல்லை என்று சொல்லலாம். சில நேரங்களில் கடன் சொல்லியும் வாங்குவதுண்டு. சில மாணவர்கள் அவரை ஏமாற்றியும் வாங்குவதுண்டு. இது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டார் ராதாக்கா.
சில மாதங்கள் முன்னால் எங்கள் பள்ளியின் வழியாய் செல்ல நேரிட்டது. ஆச்சரியம்!!!அங்கே அதே ராதாக்கா...அதே கூடை ..ஆனால் கூட்டத்தை மட்டும் காணவில்லை.சில பொருட்கள் மாறியிருந்தன. தண்ணீரும் மோரும் வைத்து விற்று கொண்டு இருந்தார்.வயாதாகி விட்டது..இருந்தாலும் வேலை செய்து கொண்டு இருந்தார்.எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை அவரிடம்.சேலையில் இருந்து செருப்பு வரை அதே ராதாக்கா.

அவரை போன்ற ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை ஒரு புள்ளியில் நின்று விடுகிறது.சில நேரங்களில் அது அவர்கள் செய்த புண்ணியம் என்று கூட சொல்ல தோன்றுகிறது.எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் ஓடி கொண்டு இருக்கும் நம்மை விட அவர் நிம்மதியை இருப்பதாகவே நாம் நினைக்கிறேன்.

3 கருத்துக்குத்து:

கயல்விழி முத்துலெட்சுமி on July 10, 2008 at 10:34 AM said...

\\அவரை போன்ற ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை ஒரு புள்ளியில் நின்று விடுகிறது.சில நேரங்களில் அது அவர்கள் செய்த புண்ணியம் என்று கூட சொல்ல தோன்றுகிறது.எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் ஓடி கொண்டு இருக்கும் நம்மை விட அவர் நிம்மதியை இருப்பதாகவே நாம் நினைக்கிறேன்.//
சிலசமயங்கள் இது சரியெனவே தோன்றுகிறது..
நல்லபதிவு.. வாழ்த்துகள்

கார்க்கி on July 10, 2008 at 10:57 AM said...
This comment has been removed by the author.
cheena (சீனா) on December 14, 2008 at 2:14 PM said...

அன்பின் கார்க்கி

அருமையான மலரும் நினைவுகள். என் பள்ளிப் பருவத்தினை நினைவுறுத்திய பதிவு. அக்காலத்தில் - பள்ளிக்கு எதிரே இருந்த கடையில் இருக்கும் அனைத்தையும் நாளுக்கு ஒன்றாக வாங்கி உண்டு மகிழ்ந்ததும் உண்டு. அடடா அக்காலம் திரும்பாதா என நினைக்கத்தூண்டும் நினைவுகள்.

கயல்விழியின் மறுமொழிக்கு ஒரு ரிப்பீட்டு

 

all rights reserved to www.karkibava.com