Jul 30, 2008

நான் ரசித்த பாடல்கள் 1


நா.முத்துக்குமார். நான் வெகுவாய் சிலாகிக்கும் பாடலாசிரியர்.என்னைப் பொறுத்தவரை திரை இசை பாடலாசிரியர்களில் முதலிடம் இவரக்குத்தான்.எழுத தொடங்கிய குறுகிய காலத்தில் பல சுவைகளில் இவர் படைத்திருக்கும் பாடல்கள் உலகத்தரம்.பாடல்கள் எழுதுவது எளிது.ஆனால் ஒவ்வொரு வரியும் கதையின் கருவை சுமக்கும்படி எழுதுவது அரிது.மெட்டுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் கலை முத்துக்குமாருக்கு கை வந்த கலை.இந்த "நான் ரசித்த பாடல்கள்" தொடரில் நான் ரசித்த இவரின் பாடலகளைப் பற்றி சொல்லப்போகிறேன். "கண் பேசும் வார்த்தைகள்" என்ற புத்தகத்திலிருந்து அவர் பாடலகளை பற்றி அவர் எழுதிய வார்த்தைகளோடு என் பார்வையும் கலந்து எழுதப் போகிறேன்.
முதல்முறையாக நான் முத்துக்குமாரின் வரியில் லயித்தது காதல் கொண்டேன் என்ற படத்தில் வந்த "தேவதையை கண்டேன்" என்ற பாடலைக் கேட்ட போது தான்.இந்த பாடல் கதையை உள்வாங்கி எழுதப்பட்டதா,இல்லை இந்த பாடலைப் படித்த பின் இயக்குனர் இந்த கதை எழுதினாரா என்ற குழப்பம் எனக்கு உண்டு.படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும்.

"ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது"

என்ற வரிகள் கதநாயகனின் நிலையை தெளிவாக உணர்த்தும்.காதலி கூடவே இருந்தாலும் வேறு ஒருவனின் காதலியானதை கண்ட ஒருவனது மன வலியை காட்சிகளை விட இந்த இரு வரிகள் இயல்பாய் உணர்த்தியது.

"காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது"

என்ற‌ வ‌ரிக‌ள் ப‌ட‌த்தின் காட்சிக‌ளை விட‌ வீரிய‌மான‌வை.

நாய‌க‌ன் நாய‌கியிட‌ம் எதை எதிர்ப்பார்க்கிறான் என்ப‌தை ப‌ல காட்சிக‌ள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் சொன்ன‌தை விட‌ பின்வ‌ரும் வ‌ரிக‌ள் மிக‌ எளிதாய் இய‌ல்பாய் சொல்கின்ற‌ன‌.

"விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி

வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்

ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்"

அடுத்த‌ முறை இந்த‌ பாட‌லை கேட்கும் போது க‌தையை மெல்ல‌ அசைப்போடுங்க‌ள்.இதோ,இந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ள்

தேவ‌தையை க‌ண்டேன்

காத‌லில் விழுந்தேன்

என் உயிருட‌ன் க‌லந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள்

மூச்சினில் க‌ல‌ந்தாள்

என் முக‌வ‌ரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி என் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது

தீக்குள்ளே விர‌ல் வைத்தேன்

த‌னித்தீவில் க‌டை வைத்தேன்

‌ண‌ல் வீடு க‌ட்டி வைத்தேன்

‌ர‌ண‌ம் ௧

தோழியே ஒரு நேர‌த்தில்

தோளிலே நீ சாய்கையில்

பாவியாய் ம‌ன‌ம் பாழாய்ப்போகும்

சோழியாய் என்னை சுழ‌ற்றினாய்

சூழ்நிலை திசை மாற்றினாய்

கான‌லாய் ஒரு காத‌ல் கொண்டேன்

‌ண்ணைக் குருடாக்கினாய்!

காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது

உன்னிட‌ம் கோப‌ம் இங்கு நான் கொண்டால்

எங்கு போவ‌து என்ன‌ ஆவ‌து

என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வ‌து.

‌ர‌ண‌ம் ௨

விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி
வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்
ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்

அழியாமலே ஒரு ஞாபகம்

அலைபாயுதே என்ன காரணம்?

அருகாமையில் உன் வாசம் வீசினால்

சுவாசம் சூடேறிடும்

கல்லறை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலைப் போய்தான் சேராது!

எத்தனை காதல் எத்தனை ஆசை

தடுமாறுதே தடம் மாறுதே

ஒரு ஊமைக்கனவு உடைந்து போகுதே!!

உங்களுக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுங்கள் நண்பர்களே !!!!

11 கருத்துக்குத்து:

Thamizhmaangani on July 30, 2008 at 8:06 PM said...

ஆஹா, நல்லாவே ரசிச்சு இருக்குறீங்கப்பா!!:)

ப்ரசன்னா on July 30, 2008 at 8:22 PM said...

இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இதே போல் இந்த திரைப்படத்தில் வரும் "தொட்டு தொட்டு போகும் தென்றல்" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்

கார்க்கி on July 30, 2008 at 8:26 PM said...

//ஆஹா, நல்லாவே ரசிச்சு இருக்குறீங்கப்பா!!:)//


வேற என்ன வேலை?

கார்க்கி on July 30, 2008 at 8:28 PM said...

// இந்த திரைப்படத்தில் வரும் "தொட்டு தொட்டு போகும் தென்றல்" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்//

அதுவும் நம்மாளுதான்..வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே

மயிலாடுதுறை சிவா on July 30, 2008 at 8:52 PM said...

பதிவிற்கு நன்றி

நானும் நா முத்துகுமார் ரசிகன். நீங்கள் நன்றாக விரிவாக சொல்லி உள்ளீர்கள்!

நா முத்துகுமார் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று உங்களுக்கு தெரியுமா?

பாராட்டுகள்!

மயிலாடுதுறை சிவா...

கார்க்கி on July 30, 2008 at 9:00 PM said...

//நானும் நா முத்துகுமார் ரசிகன். நீங்கள் நன்றாக விரிவாக சொல்லி உள்ளீர்கள்!

நா முத்துகுமார் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர் என்று உங்களுக்கு தெரியுமா?//

வந்ததற்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..அவர் திரைப்பட பாடல்கள் பற்றிய ஆய்விற்காகத்தான் முனைவர் பட்டம் பெற்றார்.

Harime on August 14, 2008 at 11:14 AM said...

Hi Karki,

This is Arul Here, Y do u say A Man With No Identity, Karki the name itself bears you a special identity, it shows you are a kind of person lacking Self Comfort.Believe me no one is without identity.

கார்க்கி on August 14, 2008 at 12:16 PM said...

//This is Arul Here, Y do u say A Man With No Identity, Karki the name itself bears you a special identity, it shows you are a kind of person lacking Self Comfort.Believe me no one is without identity.//

thanks for coming and comment arul..i would like to say i dont have any identity,but want to have one on my own..not from my parents or anything else..i want to create my own identity

KA.... said...

Na.Muthukumar brilliant lyricist. If im not mistaken he was awarded as best lyriscist award from tamil nadu government rite? His dialogues in Kreedam was also good.

Good choice for ur segment Karki. Waiting to read more of ur comments on his songs.

KA...

தமிழ்ப்பறவை on November 3, 2008 at 3:25 PM said...

பதிவு முழுக்க அருமை எனில் பாராட்ட வரிகளை மட்டும் எப்படி எடுக்க...?
இது போல் வாரம் ஒரு பதிவு (வீக் மிடில்) போடுங்கள் கார்க்கி...

கார்க்கி on November 3, 2008 at 4:22 PM said...

//தமிழ்ப்பறவை said...
பதிவு முழுக்க அருமை எனில் பாராட்ட வரிகளை மட்டும் எப்படி எடுக்க...?
இது போல் வாரம் ஒரு பதிவு (வீக் மிடில்) //

நிச்சயம் நண்பரே... தொடர் ஆதரவிற்கு நன்றி

 

all rights reserved to www.karkibava.com