Jul 30, 2008

நான் ரசித்த பாடல்கள் 1

11 கருத்துக்குத்து

நா.முத்துக்குமார். நான் வெகுவாய் சிலாகிக்கும் பாடலாசிரியர்.என்னைப் பொறுத்தவரை திரை இசை பாடலாசிரியர்களில் முதலிடம் இவரக்குத்தான்.எழுத தொடங்கிய குறுகிய காலத்தில் பல சுவைகளில் இவர் படைத்திருக்கும் பாடல்கள் உலகத்தரம்.பாடல்கள் எழுதுவது எளிது.ஆனால் ஒவ்வொரு வரியும் கதையின் கருவை சுமக்கும்படி எழுதுவது அரிது.மெட்டுக்குள் மூழ்கி முத்தெடுக்கும் கலை முத்துக்குமாருக்கு கை வந்த கலை.இந்த "நான் ரசித்த பாடல்கள்" தொடரில் நான் ரசித்த இவரின் பாடலகளைப் பற்றி சொல்லப்போகிறேன். "கண் பேசும் வார்த்தைகள்" என்ற புத்தகத்திலிருந்து அவர் பாடலகளை பற்றி அவர் எழுதிய வார்த்தைகளோடு என் பார்வையும் கலந்து எழுதப் போகிறேன்.
முதல்முறையாக நான் முத்துக்குமாரின் வரியில் லயித்தது காதல் கொண்டேன் என்ற படத்தில் வந்த "தேவதையை கண்டேன்" என்ற பாடலைக் கேட்ட போது தான்.இந்த பாடல் கதையை உள்வாங்கி எழுதப்பட்டதா,இல்லை இந்த பாடலைப் படித்த பின் இயக்குனர் இந்த கதை எழுதினாரா என்ற குழப்பம் எனக்கு உண்டு.படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும்.

"ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது"

என்ற வரிகள் கதநாயகனின் நிலையை தெளிவாக உணர்த்தும்.காதலி கூடவே இருந்தாலும் வேறு ஒருவனின் காதலியானதை கண்ட ஒருவனது மன வலியை காட்சிகளை விட இந்த இரு வரிகள் இயல்பாய் உணர்த்தியது.

"காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது"

என்ற‌ வ‌ரிக‌ள் ப‌ட‌த்தின் காட்சிக‌ளை விட‌ வீரிய‌மான‌வை.

நாய‌க‌ன் நாய‌கியிட‌ம் எதை எதிர்ப்பார்க்கிறான் என்ப‌தை ப‌ல காட்சிக‌ள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் சொன்ன‌தை விட‌ பின்வ‌ரும் வ‌ரிக‌ள் மிக‌ எளிதாய் இய‌ல்பாய் சொல்கின்ற‌ன‌.

"விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி

வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்

ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்"

அடுத்த‌ முறை இந்த‌ பாட‌லை கேட்கும் போது க‌தையை மெல்ல‌ அசைப்போடுங்க‌ள்.இதோ,இந்த‌ பாட‌ல் வ‌ரிக‌ள்

தேவ‌தையை க‌ண்டேன்

காத‌லில் விழுந்தேன்

என் உயிருட‌ன் க‌லந்து விட்டாள்

நெஞ்சுக்குள் நுழைந்தாள்

மூச்சினில் க‌ல‌ந்தாள்

என் முக‌வ‌ரி மாற்றி வைத்தாள்

ஒரு வண்ணத்து பூச்சி என் வழி தேடி வந்தது

அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது

தீக்குள்ளே விர‌ல் வைத்தேன்

த‌னித்தீவில் க‌டை வைத்தேன்

‌ண‌ல் வீடு க‌ட்டி வைத்தேன்

‌ர‌ண‌ம் ௧

தோழியே ஒரு நேர‌த்தில்

தோளிலே நீ சாய்கையில்

பாவியாய் ம‌ன‌ம் பாழாய்ப்போகும்

சோழியாய் என்னை சுழ‌ற்றினாய்

சூழ்நிலை திசை மாற்றினாய்

கான‌லாய் ஒரு காத‌ல் கொண்டேன்

‌ண்ணைக் குருடாக்கினாய்!

காற்றிலே கிழியும் இலைக‌ளுக்கெல்லாம்

காற்றிட‌ம் கோப‌ம் கிடையாது

உன்னிட‌ம் கோப‌ம் இங்கு நான் கொண்டால்

எங்கு போவ‌து என்ன‌ ஆவ‌து

என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வ‌து.

‌ர‌ண‌ம் ௨

விழியோர‌மாய் ஒரு நீர்த்துளி
வ‌ழியுதே என் காத‌லி‍ அத‌ன்
ஆழ‌ங்க‌ள் நீ உண‌ர்ந்தால் போதும்

அழியாமலே ஒரு ஞாபகம்

அலைபாயுதே என்ன காரணம்?

அருகாமையில் உன் வாசம் வீசினால்

சுவாசம் சூடேறிடும்

கல்லறை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலைப் போய்தான் சேராது!

எத்தனை காதல் எத்தனை ஆசை

தடுமாறுதே தடம் மாறுதே

ஒரு ஊமைக்கனவு உடைந்து போகுதே!!

உங்களுக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுங்கள் நண்பர்களே !!!!

Jul 29, 2008

கோல்கொண்டா கோட்டை -ஒரு பயணம்

10 கருத்துக்குத்து


சென்ற வாரம் கோல்கொண்டா கோட்டைக்கு சென்றேன்.உண்மையில் பல ஆச்ச்ரியங்களை கொண்டது இந்த கோட்டை.முகப்பிலே உள்ள "curtain wall" என்ற சுவர் கோட்டையின் கதவை எதிரிகளின் தாக்குதகளில் இருந்து காக்கும் வண்ணம் எழுப்பபட்டிருந்தது. கையால் வரையப்பட்டிருந்தாலும் இந்த பலகை தெளிவான பாதையை காட்டியது.தினம் ஆயிரம் சுற்றுலா பயனிகள் வரும் இந்த கோட்டைக்கு அவ்வளவுதான் நிதி ஒதுக்கபட்டது போலும்.இந்த கோட்டையின் மிக பெரிய ஆச்சரியம் இதுதான். "clapping hall" என்று அழைக்கபடும் இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் நின்று கைத்தட்டினால் அது 24 முறை எதிரொலிக்கிற‌து.ந‌ம் கைகளில் இருந்து செல்லும் ஒலி அலைகள் இந்த கூரையின் 24 முகங்களில் பட்டு எதிரொலிக்கிறது.அதுவும் இந்த எதிரொலி நீங்கள் அந்த இடத்தில் நின்றால் மட்டுமே கேட்கிரது.உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கு கூட கேட்பதில்லை.இதை எல்லம் விட,நாம் தட்டும் பலமான கைத்தட்டல் கோட்டையின் மிக உயரமான புள்ளியில் (சுமார் 450 அடி)தெளிவாக கேட்கிற‌து. அந்த காலத்தில், கோட்டைக்கு வருபவர்களை பற்றி உய்ரத்தில் இருக்கும் அரசவையில் இருக்கும் மந்திரிகளிடம் தெரிவிக்க இதை பயன் படுத்தி இருக்கிறார்கள்.நம்ப முடிகிறதா? அது மட்டுமில்லாமல் இது போன்ற பல கூரைகள் அரண்மனை முழுவதும் காணப்படுகிற‌து.நான்கு மூளைகளில் நான்கு பேர் நின்று கொண்டு சுவறில் எழுப்பும் மெல்லிய ஒலி மீதி மூவருக்கும் தெளிவாக கேட்கிற‌து.இது பாரசீக கட்டட கலையின் அதிசயம்.அதை பற்றி கேள்விபட்டு அந்நாட்டு கலைஞரின் உதவியோடு கட்டபட்டிருக்கிற‌து.


இன்னமும் சிதையாத தடுப்பு சுவர்.
என் கண்ணில் சிக்கிய‌ அழகிய மரம்.காலத்தால் அழியா கோட்டையைத்தான் நம்மால் கட்ட முடியாது என்று நம் மக்கள் மக்காத பிளாஸ்டிக் குவளைகளை கோட்டையில் போட்டு தங்கள் வரவை அழியாத வகையில் பதிவு செய்கின்றனர்.


இது ஓசோன் மண்டல ஓட்டை இல்லை.கோட்டையில் உள்ள அரண்மனையின் கூரையில் விழுந்த ஓட்டை."கோட்டையில் ஓட்டை" என்று வாரப்பத்திரிக்கைகள் ஒரு கட்டுரை எழுதலாம்.
இன்னும் பல படங்களும் செய்திகளும் இருக்கிற‌து.அதை தனியே ஒரு வலைபூவில் போடலாம் என்று எண்ணம்.உங்கள் கருத்துக்களை சொல்ல மறக்காதீர்கள் நண்பர்களே !!!

Jul 25, 2008

குசேலன்-ஒரு வேண்டுகோள்

5 கருத்துக்குத்து
இதோ..குசேலன் தயாராகி விட்டது.ஏற்கனவே அதைப் பற்றிய விவாதங்களும் தொடங்கிவிட்டன.முன்னோட்டத்தின் தெளிவான வீடியோவும் நண்பர் ஒருவர் தனது வலைபூவில் தந்து விட்டார்.பாடல்களும் வெளியாகிவிட்டன..சரி,என்ன சொல்ல வருகிறேன் என்கிறீர்களா?
இது தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல போகும் படமல்ல..உலகத்தரம் போன்ற எந்த முத்திரையும் இதற்கு இல்லை.வழக்கமாக ரஜினி படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் குசேலனிலும் இருக்கும் என் நம்பலாம்.ரஜினியை ரஜினியாகவே காண்பிக்க போகும் இந்த படத்தில் அவரின் திரையுலக செல்வாக்கை விவரிப்பது எளிதான செயலே.சந்திரமுகி,சிவாஜி படங்கள் வெளியான அன்று நடந்த கொண்டாட்டங்களில்( சிலருக்கு கூத்து)ஒரு பங்கை காட்டினாலே போதும்.ஆக,இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்து வைக்க போகும் படம் என்றுதான் இயக்குனர் சொல்லி வருகிறார். அதனால் நீங்கள் வேறு எதாவது எதிபார்த்து செல்வதாக இருந்தால் அதை விட சிறுபிள்ளைத்தனமான செயல் வேறு இருக்க முடியாது.
நான் சொல்ல வருவது என்னவென்றால் ,"வலையுலக நண்பர்களே!!! மேற்சொன்ன விடயங்களில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தயவு செய்து இந்த படத்தை பார்க்காதீர்கள்..அதனால் உங்களுக்கு தலை வலியும் எரிச்சலும்,பண விரயமும்,கால விரயமும் ஏற்படும்.எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் உண்டு.அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அப்படி எல்லாம் இல்லை,சூடான இடுகைகள் பகுதியில் உங்கள் பதிவும் வர வேண்டும்,அதற்காகத்தான் நீங்கள் (திட்டி) விமர்சனம் எழுத போவதாக இருந்தால் அதை ஒரு அடைப்பு குறிக்குள் சொல்லிவிடுவது நலம்."
இப்படிக்கு,
உங்கள் நலம் விரும்பி கார்க்கி..

Jul 17, 2008

தமிழ் மண அன்பர்களுக்கு...

24 கருத்துக்குத்து
கலைகளும்,ரசனைகளும்,கலாச்சாரங்களும் ஒவ்வொரு நாட்டிற்கும் இணத்திருக்கும் மாறுபடும். பூச்சிகளை வறுத்து சாப்பிடுவதை என்னால் பார்க்க கூட இயலாது.சொந்த மகளையே விலை பேசி விற்கும் அத்தனை தாய்களை தாய்லாந்தை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. மேற்கிந்திய மக்களின் தலை முடியை ஸ்டைல் என்று எத்தனை பேர் ஒத்து கொள்வார்கள்?
இவை ஏன்,ஒரு வீட்டுலேயே எவருக்கும் ஒரே வித விருப்பங்கள் இருப்பது இல்லை. எதிரெதிர் திசையில் இருவர் நிற்கும் போது ஒருவர்க்கு வலப்பக்கம் இருக்கும் பொருள் மற்றவருக்கு இடப்பக்கம் தானிருக்கும்.
சும்மா நானும் மொக்கை போட ட்ரை பண்ணேன்...சில பதிவர்கள் தங்களை தாங்களாகவே பெருசா நினச்சுகிட்டு தனக்கு புடிக்கலனா அது மட்டம்,குப்பை என்று சகட்டு மேனிக்கு திட்டுவதை வாடிக்கையாக இருக்கின்றனர். குறிப்பாக சினிமா விமர்சனத்தில் இத்தகைய போக்கு நிறைய இருக்கு..உங்கள் விமர்சனம் எதுவாக இருந்தாலும் காசு கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆனால்,என் கேள்வி எல்லாம் ரஜினியும் விஜயும் இன்ன பிற மசாலா பட நாயகர்களும் எங்கள் வழி இதுதான் என்று சொன்ன பிறகு ,எதற்காக இவர்கள் அந்த படத்தை பார்க்க வேண்டும்?எதற்காக அவர்களை திட்ட வேண்டும்? நான் கவனித்த வரையில் இவர்களை சாடும் அனைத்து பதிவர்களும் இத்தகைய ,குறிப்பாக,ரஜினி மற்றும் விஜயின் அனைத்து படங்களையும் பார்த்து விமர்சிக்க தவறவில்லை..
உண்மையை சொல்ல போனால் ,இவர்கள் எவ்வளவோ பரவா இல்லை..தங்கள் விருப்பத்தை தெளிவாக சொல்லிவிட்டு அதை விரும்பி வரும் ரசிகர்களுக்கு தேவையானதை தங்கள் படங்களில் வைக்கின்றனர். ஆனால், உலக தரத்தில் படம் என்று புருடா விட்டு தசாவதாரம் போன்ற படத்தை வெற்றிகரமாக ஓட செய்திருகிராரே கமல் அவர் எப்படி? உடனே நான் கமலுக்கு எதிரானவன் என் நினைக்க வேண்டாம்.அவரின் மகாநதியும் அன்பெசிவமும் தமிழ் திரையுலகில் சிறந்த படங்களின் வரிசையில் உண்டு என்று நினைப்பவன்.எனக்கு சில நேரங்களில் நல்ல படங்கள் பார்க்க வேண்டும் என்று தோன்றும்.அப்போது தமிழின் சில படங்களையும் சில வேற்று மொழி படங்களையும் பார்ப்பேன்.சில நேரங்களில் நண்பர்களோடு திரை அரங்கம் சென்று ரஜினி,விஜய் படங்களையும் பார்ப்பேன்.என் தேவையை நான் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தேர்வு செய்வேன்.
அப்படி இல்லாமல் எதை பற்றி எழுதினாலும் அதில் ரஜினையும் விஜயையும் கிண்டல் அடித்தால் எதோ அவர் ஒரு மாமேதை என்ற ரீதியில் சிலர் எழுதுவது எனக்கு புடிக்கவில்லை.நான் எல்லா நண்பர்களையும் சொல்லவில்லை,இப்படி செய்து கொண்டிருக்கும் அன்பர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். ஒரு வலைப்பதிவில் ஒரு அன்பர் "ஒரு நல்ல படம் என்பது ரெண்டு நாளிக்காவது அவர் மனதை பாதிக்க வேண்டுமாம்"..அய்யா,உங்களுக்கு அதற்கு நேரமிருக்கிறது ,சினிமாவை பார்த்து அதற்காக கவலைப்பட நேரமிருக்கிறது..வாரம் ஆறு நாள் கச்டபட்டுவிட்டு ஒருநாள் நான் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவது தவறா?அந்த நாளிலும் சோகமான படத்தை பார்த்துவிட்டு அடுத்த நாள் வேலையும் ஓடாமல் திட்டு வாங்க என்னால் முடியாது..அதற்க்கு நீங்கள் சொல்லும் மசாலா படங்கள்தான் சரி..படம் முடியும்வரை என்ஜாய் பண்ணிவிட்டு வெளியே வரும்போது நாம் அதை மறந்திருப்பேன்..இத்தகைய தேவை உள்ளவர்களை நீங்கள் ரசனையற்ற ஜென்மம், கீழ்த்தரமானவன் இன்ன பிற வார்த்தைகளால் அழைக்கலாம்.அதை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.. பணம்,என்ற முதலையை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நாடு விட்டு நாடு சென்று வேலை செய்து கொண்டு ஐயோ இதை விட்டு விட்டோம் அது கிடைக்கவில்லை என்று போலி கவிதைகள் எழுதுபவர்களை விட நாங்கள் ஒன்னும் மட்டமானவர்கள் அல்ல..கோவபடாதிர்கள்சில விதிவிலக்குகள் உண்டு..புலம் பெயர்ந்தவர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்கள் போன்றோர் பற்றி நாம் கூறவில்லை..கணினி துறையில் இருக்கும் நண்பர்களையும்,அதில் நாங்கள் இதை எல்லாம் இழந்து விட்டான் என்று கவிப்பாடும் நண்பர்களை மட்டுமே இங்கு சாடுகிறேன்..நீங்கள் அவ்வாறு இல்லை,பணத்திற்காக தான் இங்கே இருக்கிறேன் என்று தெளிவாக சொன்னால் உங்களை மனமார பாராட்டுகிறேன்..இங்கேயே கணினி துறை வேலைகள் பெருகிவிட்டன..அங்கே போனால் ஒரு லட்சம் இங்கே முப்பதாயிரம்..மற்றபடி வேறு வித்தியாசம் இல்லை..இப்படி தங்கள் பொருளாதரத்தை உயர்த்த அனைவரும் பாடுபடுகிறோம்.அதே போல் தன்னை வைத்து படம் எடுப்பவர்கள் பணம் பண்ண வேண்டும் என்று இவர்கள் கூறுவது சரி என் எனக்கு படுகிறது..
உங்களால் ஒரே ஒரு மாற்று நடிகனை காண்பிக்க முடியுமா? விக்ரம், சூரியா போன்றவர்களை தயவு செய்து சொல்லிவிடாதிர்கள்..நீங்கள் சொல்ல போகும் நடிகர் ரஜினி ,விஜயை போன்று மசாலா குப்பைகளில் நடிக்க கூடாது.. நீங்கள் வெறுக்கும் ரசிகர் மன்றங்களை அங்கீகரிதிரிக்க கூடாது..இந்த இரண்டே இரண்டு நிபந்தனைகளை ஏற்க்க கூடிய ஒரே ஒரு நடிகனை காட்டுங்கள்..பருத்தி வீரன்,சுப்ரமணியபுரம் எல்லாம் நல்ல படங்கள் தான்..அமீரின் முதல் படம் பற்றி தெரியுமா? அப்போது வந்து கொண்டுஇருந்த விஜய் படங்களுக்கும் மௌனம் பேசியதே க்கும் எந்த வித்யாசாமுமில்லை....ரெண்டு படம் ஓடாவிட்டால் இந்த வழிக்கு வந்துதான் ஆக வேண்டும்..
உங்களால் இவர்களின் படங்களை ரசிக்க முடியாவிட்டால் தவிர்த்து விடுங்கள்.. அசிங்கம் என்று தெரிந்து அதை தொட்டுவிட்டு முகம் சுழிப்பவன் அறிவாளி அல்ல...எங்களை பற்றி கவலை படாதிர்கள்..நாங்கள் சாணத்தை உரமாக எடுப்பவர்கள்..."மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"என்பார்கள்..இங்கே,தமிழ் மனத்தில் கூட அதிக வாக்குகள் வாங்கும் பதிவிற்கு சிறப்பு தகுதி கிடைக்கிறது..எத்தனை பேருக்கு புடிகிறதோ அதுதான் சிறந்த பதிவு என்பதாக அர்த்தம்.ஆனால் பலருக்கு புடித்த படம்,அதனால் வசூலில் வென்ற படம் உங்கள் பார்வையில் குப்பை..இருக்கட்டும் ,உங்கள் பார்வைக்கு குப்பை என்று சொல்லுங்கள் ..ஆனால் அடுத்தவனின் ரசனையை கிண்டல் செய்யாதிர்கள்..ஏனென்றால் ,இப்போது முதல் பத்தியை படியுங்கள்...

Jul 11, 2008

காதலை காதலிக்கின்றேன்...

5 கருத்துக்குத்து
மறக்கத்தான் தோணவில்லை
அவள் மடியில் சாய்ந்திருந்த நொடியை..
நினைக்கத்தான் முடியவில்லை
அவள் பிரிந்த அந்த நொடியை...
இடியாய் ஒலிக்கும் அவள் பிரிவு
மின்னல் ஒளியாய் வரும் அவள் நினைவு..
எதிர்காலம் இல்லாதவனாய் இருக்கின்றேன்
இருந்தும்
இன்னும் நெஞ்சில் காதல் வளர்க்கின்றேன்,
என்னைப் போல் ஒருத்தி
காதல் காடு தேடி வருவாள் என்று...
யாருமில்லா அறைக்குள் நான் புலம்பும் ஓசை
நான் மட்டும் கேட்கின்றேன்...
நாளைய விடியிலலாவது
காடு தேடி ஒருத்தி வருவாளா என்று....!!!!

Jul 10, 2008

மெல்லினமே...மெல்லினமே...

4 கருத்துக்குத்து
திரைப்பாடல்களின் மெட்டில் நான் சில பாடல்களை எழுதி இருக்கிறேன்.ஷாஜகான் படத்தில் வரும் மெல்லினமே என்ற பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல்..

என்னுயிரே என்னுயிரே என் உயிரை உன்னிடம் தந்தேன்
அதை கொடுத்த பின்னும் என் மனசுக்குள்ளே அட ஏதோ உறுத்த கண்டேன்
இது எதுவும் புரியவும் இல்லை இது எதனால் தெரியவும் இல்லை
உன்னை காணும் நேரம் மட்டும் என் இதயம துடிப்பதே இல்லை ஓஹோ..ஹே

விழிகள் மோதி உடையும் ஒரு இதயம் என்னிடம் கண்டேன்
அதை முழுதாய் பார்த்து கொள்ள உந்தன் கையில் தந்தேன்
அந்த கண்ணின் மீது புருவம் அது மூன்றே நாளான மதியோ
அந்த புருவத்தில் நானும் வீழ இது காதல் செய்த சதியோ
காதலின் பெயரிலே வன்முறை செய்கின்றாள்
கண்களால் கண்களால் அணுகுண்டை வீசுகின்றால்
காயம் எதுவும் இல்லை என்ன மாயம புரியவும் இல்லை
உன்னை காணும் நேரம் மட்டும் எந்த இதயம் துடிப்பதே இல்லை..ஓஹோ..ஹே

ராதாக்கா..

3 கருத்துக்குத்து


நிற்க கூட நேரமின்றி காலத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இன்றைய உலகம் ஓடும் ஓட்டத்தை தான் வாழ்க்கை என்கின்றனர் என் நண்பர்கள்.பல நேரங்களில் அது உண்மை என்பது போல நானும் ஓடி கொண்டு தானிருக்கிறேன். ஆனால் சில நேரங்களில்,அதுவும் குறிப்பாக நான் தனியாக இருக்கும் நேரங்களில் ,என்னை அறியாமல் நான் என்றோ பார்த்த பல காட்சிகள் என் கண் முன்னே விரிவது போல் கண்டேன். அவ்வாறு கண்ட காட்சிகளில் பெரும்பான்மை பெற்று இன்றைய கருப்பொருளாக வந்திருப்பவர் தான் ராதாக்கா
நான் பள்ளி சென்ற காலங்களில் எங்கள் கையில் 1 ரூபாய் இருந்தாலே பெரிய விஷயம்.ஆனால் அந்த ஒரு ரூபாயிலே பத்து பேருக்கு வேண்டியதை வாங்கி மகிழும்படி செய்தவர் இந்த ராதாக்கா.உணவு இடைவேளையில், இவரை சுற்றிதான் பள்ளியே இருக்கும்.வெறும் ஐந்து காசுக்கு இவர் தந்த தேன் மிட்டாய், காரம்,ஜீவா ஜோதி இத்யாதிகளை சுவைக்காதவரே எங்கள் பள்ளியில் இல்லை என்று சொல்லலாம். சில நேரங்களில் கடன் சொல்லியும் வாங்குவதுண்டு. சில மாணவர்கள் அவரை ஏமாற்றியும் வாங்குவதுண்டு. இது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டார் ராதாக்கா.
சில மாதங்கள் முன்னால் எங்கள் பள்ளியின் வழியாய் செல்ல நேரிட்டது. ஆச்சரியம்!!!அங்கே அதே ராதாக்கா...அதே கூடை ..ஆனால் கூட்டத்தை மட்டும் காணவில்லை.சில பொருட்கள் மாறியிருந்தன. தண்ணீரும் மோரும் வைத்து விற்று கொண்டு இருந்தார்.வயாதாகி விட்டது..இருந்தாலும் வேலை செய்து கொண்டு இருந்தார்.எந்த ஒரு மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை அவரிடம்.சேலையில் இருந்து செருப்பு வரை அதே ராதாக்கா.

அவரை போன்ற ஒரு சிலருக்கு மட்டும் வாழ்க்கை ஒரு புள்ளியில் நின்று விடுகிறது.சில நேரங்களில் அது அவர்கள் செய்த புண்ணியம் என்று கூட சொல்ல தோன்றுகிறது.எதை தேடுகிறோம் என்றே தெரியாமல் ஓடி கொண்டு இருக்கும் நம்மை விட அவர் நிம்மதியை இருப்பதாகவே நாம் நினைக்கிறேன்.

Jul 7, 2008

குத்து பாடலும் வைரமுத்துவும்..

1 கருத்துக்குத்து

சமீப காலமாக அல்ல,எப்போதுமே குத்து பாடல்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்று. இலந்த பழத்தில்(அதற்கு முன்னேயும் இருக்க கூடும்,எனக்கு தெரியவில்லை) ஆரம்பித்து மொழ மொழ வரைக்கும் நீளும் இந்த பட்டியலில் அனைத்து நடிகர்களின் பாடல்களும் அடங்கும்.நடிகர்கள் மட்டும் அல்ல,இசை அமைப்பாளர்கள்,பாடல் ஆசிரியர்கள் என இதை தொடதவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதில் தவறு இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக வைரமுத்து மற்றும் சிலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்,குத்து பாட்டு ஊறுகாய் போன்றதாம்,அதனால் ஒரு படத்திற்கு ஒரு பாடல் மட்டுமே வைக்க வேண்டுமாம்.நல்ல வேலை கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே அதை வைக்க வேண்டும் சொல்லாமல் விட்டதற்காக நன்றி சொல்லலாம்.பாடல் என்ற ஒன்றே கதைக்கு தேவை இல்லாத ஒன்று என்பது என் கருத்து.ஒரு சில விதிவிலக்கல்கள் இருக்கலாம். இளமை காலங்களில் பல குத்து பாடல் எழுதிய இவர்,வயதான பின் இவர் விரும்புவதையே சினிமா உலகம் செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் ஆகும்? இன்றும்,சூப்பர் ஸ்டாரின் அறிமுக பாடல் எழுதும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காத கவிப்பேரரசு அதை ஒரு நல்ல மெல்லிசை பாடலாக வைக்கும் படி அறிவுரை வழங்கலாமே.அப்படி அவர் அதை தவிர்க்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விடலாமே..
வெள்ளி இரவானால் புப்,டிஸ்கோ என்று தேடும் இன்றைய இளைஞர்கள் அங்கே "பூங்கதவே" என்று ஆடினால் நன்றாக இருக்கும் என்கிறாரா கவிஞர்? யாக்கை திரி என்ற பாடலில் தமிழின் அழகை அத்துனை சிறப்பாக எழுதிய வைரமுத்து , பத்து ஆண்டுக்கு முன் எழுதிய சில பாடல்களை இங்கே குறிப்பிட என்னால் முடியவில்லை. தன் துறையில் சிகரம் தொட்ட பல படைப்பாளிகள் இந்த தவறை செய்கிறார்கள்.அவர்கள் இருந்த காலத்தில் தங்களுக்கு பிடிக்காதவற்றை செய்த இவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கும் போது தனக்கு அடுத்த சந்ததியை பார்த்து இதை செய்யாதே என்று சொல்வது அறிவுரையாக எனக்கு தெரியவில்லை.
இரட்டை அர்த்த வார்த்தைகள் தான் குத்துபாடலகள் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்று அவர்கள் சொல்லியதாக எங்கோ படித்த ஞாபகம்.நல்ல மேல்லிசைகளில் வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டுகளை அறியாதவர்கள் இருக்க முடியாது.என்னை பொருத்த வரை யாக்கை திரியும் குத்து பாடல்தான்.ஆனால் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட பாடல் அது.வேட்டையாடு விளய்யடு என்ற படத்தில் வரும் நெருப்பே என்ற பாடலும் முழுவதும் தமிழ் வார்த்தைகளையே கொண்ட குத்து பாடல் தான்..அதற்காக பாடல்கள் முழுவதும் தமிழ் மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.ஆனால் அப்படி தான் எழுதுவேன் இல்லை என்றால் வாய்ப்பே வேண்டாம் என்ற பெண் கவிஞர் தாமரை எடுத்த முடிவை கூட எடுக்காத இந்த கவிப்பேரரசு பிற பாடல் ஆசிரியர்களை எந்த பூக்கை எந்த விட வேண்டும்.பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போடும் அதே இளைஞர்கள் தான் தங்கள் ஐ பாட் இல் உங்களது காலத்தால் அழியா பல பாடல்களை கேட்டு கொண்டிருக்கிறார்கள்.எந்த ரசிகர்களால் நீங்கள் இந்த புகழை அடைந்தீர்களோ அவர்களது ரசிப்பு தன்மையே சந்தேகிக்கும் உங்களது இந்த கருத்து என்னை மிகவும் கவலை கொள்ள செய்திருக்கிறது. எந்த வகை பாடல் ஆனாலும் அதன் வெற்றி நியாயமானதாகவே இருக்கும் என்று நினைப்பவன் நான் .ஒரு வேலை அது எனக்கு பிடிக்காமல் போனாலும் ,பிறரின் விருப்பத்திற்கு மதிப்பளித்து என் விருப்ப பாடலை கேட்பேனே தவிர எனக்கு பிடிக்காத பாடலை பழி சொல்வது தவறு என நினைக்கின்றேன். எந்த ஒரு மாற்றமும் தன்னில் இருந்து தொடங்க வேண்டும் என்ற காந்தியின் வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது.வெறும் டண்டனக்க என்ற தாளமும் வேகமும் ,ஒரு நடிகையின் கவர்ச்சியும் மட்டுமே ஒரு பாடல் வெற்றிக்கு போதாது என்பதற்கு ஆயிரம் எடுத்து காட்டுக்கள் தரலாம்.சமிபத்திய வெற்றி குத்தான நாக்க முக்க இது வரை யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான இசை அமைப்புக்காக இந்த வெற்றியை பெற்றுள்ளது.

"இசை ஒரு கடல்.நமக்கு வேண்டுயது எல்லாமே அதில் உண்டு.நம் வேலை,தேடி எடுத்து கொள்ள வேண்டியது." வைரமுத்துவின் வைர வரிகளையே அவருக்கு பதிலாக்கி முடிக்கிறேன்.

Jul 4, 2008

இயக்குனர் மகேந்திரனிடம் சில கேள்விகள்

4 கருத்துக்குத்து
சமீபத்தில் வண்ணத்துபூச்சி என்ற திரைப்படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவில் பேசிய மஹேந்திரன் இன்றைய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..டூயட் எனப்படும் காதல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டுமாம். சிறந்த படைப்பாளி என்று சிலரை நாம் நினைத்து கொண்டு இருக்கும் போது அவர்களது சில கருத்துக்கள் நம்மை சந்தேகிக்க வைத்து விடும். அவர் படங்கள் எடுத்த போது அவருக்கு தோன்றாத இது போன்ற சில விஷயங்கள் இப்போது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அப்படி என்றால் டூயட் பாடல்களோடு அவர் எடுத்த சில காவியங்கள் உண்மையிலே சிறந்த படங்கள் இல்லையா? முள்ளும் மலரும் என்ற அற்புதமான படத்தில் நித்தம் நித்தம் நெல்லி சோறு என்ற குத்து பாடல் வைத்த மகேந்திரனக்கு இப்போது பாடல்கள் மேலே வெறுப்பு வர காரணம் என்ன?சரி, காலப்போக்கில் இதை புரிந்து கொண்ட இயக்குனர் இந்த நற்செயலை தனது சாசனம் படத்தில் இருந்தவாது தொடங்கி இருக்கலாமே.வித்யாசாகர் இசைமைத்த பல நல்ல பாடல்களுக்காகவே அவரது படத்தை ஆவலுடன் சில ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அப்போதும் வரவில்லை இந்த நல்ல விஷயம் இயக்குனரின் கவனத்திற்கு.பின் அவரது மகன் சச்சின் என்ற படம் எடுத்த போதும் அவருக்கு தோன்ற வில்லை ..இப்போது ,அதுவும் ஒரு படத்தின் ஒலி நாட வெளியீட்டு விழாவின் போது இந்த கருத்தை சொல்லி இருக்கிறார் மஹேந்திரன்.அவரது நியாயம் எனக்கு புரியவில்லை.உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்..

தசாவதாரம்

2 கருத்துக்குத்து

இணையத்தில் கண்ட ஒரு விமர்சனத்தின் ஒரு பகுதி தான் இந்த கதை.

மேல்நாட்டு மன்னன் ஒருவனை ஏமாற்றி உலகத்திலேயே அழகான உடை தைத்துத் தருகிறேன் என்று சொல்லி நிறையப் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டானாம் ஒரு தையல் தொழிலாளி. அளவெடுக்கிறேன் என்று அலப்பறை வேறு. இந்த உடை உண்மை பேசுபவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று " பிட்டை" பரப்பிவிட்டான். நகர்வல நாளும் வந்தது. உடைமாட்டிவிடுகிறேன் என்று சும்மாக்காச்சும் பாவனை காட்டினான். நிர்வாண மன்னனைக் கண்டு அலங்கார உடுப்பு உலகத்திலேயே யாருக்கும் கிடையாது என்று இன்னொரு " பிட்".மன்னனுக்கு தனது நிர்வாணத்தைக் கண்டு நாணம். இருந்தாலும் எங்கே தான் பொய் சொன்னதால் தான் தனக்கு இந்த உடை தெரிவதில்லை என்று கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் "ஆஹா அற்புதம்" என்று வெமகுமதியளித்தான்.
குறிப்பாக ராணியிடம் சொன்ன பொய்கள். ராணியின் பாராட்டோ உண்மை போலவே இருந்தது. ரெம்ப நல்லா இருக்கு என்றால் பலருக்கும் பொதுப்படையாக இருக்குதே என்று சந்தேகம் வரும். இந்த 5 தங்க பொத்தான்களும் காலரின் சரிகைக்கு ஏற்றவாறு இருக்கின்றது என்று ராணி சொன்னால் பொய்போலவா இருக்கிறது. ராணிக்கும் தன் பொய்கள் குறித்துப் பயம். பின்னே அரசனுக்கு தினம் ஒருத்தி என்பதால் ராணி காயமுடியுமா ? தான் உத்தமன் இல்லை என்றாலும் தன் மனைவி பத்தினிதான் என்று நம்பும் பிற கணவன்களைப் போலவே ராணியின் சொல் நம்பி மகிழ்ச்சியுடன் நகர்வலம் சென்றான். மந்திரிகளும் , அடிப்பொடிகளும் உடைகளைப் புகழ்ந்த விதம் கவித கவித. அருவி மாரிக் கொட்டுச்சு. ஆனால் இந்தக் கூத்தையெல்லாம் பார்த்த சிறுவன் " ஐயே! ராஜா அம்மணமா வர்ராறு என்று போட்டு உடைத்துவிட்டான்.
வெட்கப்பட்ட ராஸா வீட்டுக்குள் ஓடினாராம். தசாவதாரம் படமும் உலகப்புகழ் பெற்ற உடை போலத்தான் இருக்கிறது. இருக்கிறது. கருணாநிதி முதல் மனோரமா வரை இப்படித்தான் புகழ்ந்து தள்ளினார்கள். அனேகமாகக் கருணாநிதி "கண்ணம்மாவை" ஒப்பிட்டுப் புகழ்ந்திருப்பாரோ என்ற ஐயமும் நிலவுகிறது.

உண்மைதான்.கமல் என்ற மகா கலைஞன் இது போன்ற படங்களை உலக தரம் என்கிற போது நமக்கு அவர் திறமை மீது சந்தேகம் வருவது இயல்பு தான்.அது வியாபார யுத்தி என்ற போதும் இது போன்ற செயல்களை அவர் தவிர்ப்பது நல்லது என்றே எனக்கு தோன்றுகிறது. இது தான் உலக தரம் என்றால் அவரது மஹாநதி மற்றும் அன்பே சிவம் படங்களை என்ன என்று சொல்வது?

தந்தை

3 கருத்துக்குத்து
அரும்பான ஆசைகள்
அரங்கேற்றம் ஆவதற்குள்
அவசரமாய் புறப்பட்டாய்
அணைந்துவிட்ட மேழுகனோம்
அப்பா நீயோ!!அமரன் ஆனாய் ..

சிரித்து கொண்டும்
சிரிக்க வைத்தும் -நீர்
வாழ்ந்த நாட்கள் எங்கள்
சிந்தை எங்கிலும்
வாழ்வதால் இன்று
தந்தையே நீ தெய்வமானாய்.

சுஜாதாவிற்கு நன்றி..

6 கருத்துக்குத்து
நண்பர்களே,
வாசிக்க மட்டுமே பழகிய என்னை எழுதும் அளவிற்கு ஏற்றி விட்டது சுஜாதா அவர்களின் எழுத்துக்கள் தான்.தன்னம்பிக்கை என்ற பெயரில் எத்தனயோ புத்தகங்கள்!!!ஆனால் அந்த பெயர் மட்டும் இல்லாமல் அவ்வேலையை செய்தன சுஜாதாவின் எழுத்துக்கள்.
இதோ ,என் முதல் பதிவை அவருக்கு அர்ப்பணித்து என் பயணத்தை துவங்குகின்றேன்.

கார்க்கி
 

all rights reserved to www.karkibava.com