Dec 31, 2008

ஸ்டார்ட் மீஸிக்

55 கருத்துக்குத்து

   ஒரு படத்தின் பாடல்களை கேட்ட உடனே எல்லோரும் சொல்வது ரெண்டு பாட்டு தேறும் அல்லது மூனு பாட்டு ஓக்கே. படத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக இருந்தது எல்லாம் ராசா காலம். இது போல Complete album என்பது வருடத்தில் ஒன்று வந்தாலே பெரிய விஷயம்.

  இந்த வருடம் அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம். ஹாரீஸின் சொந்த சரக்கா என்றெல்லாம் பார்க்காமால் பாடல்களை எடை போட்டால் ஏழு பாடல்களும் ஹிட். இசை வெளியான அன்றே அனல் மேலே பனித்துளி பாடல் என்னைக் கவர்ந்து அது குறித்து நன் எழுதிய பதிவு இங்கே.அதன் பின்னூட்டத்தில் பரிசல் முன் தினம் பார்த்தேனே குறித்து சிலாகித்தார். ஒரு சில தினங்களிலே அய்யனார் அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைப் பற்றி எழுதினார். தமிழ்மணத்தின் ஆக இளையப் பதிவரான கார்த்திக் ஏத்தி ஏத்தி பாடலின் வீடியோவையே போட்டு தன் விருப்பப் பாடலை பதிவு செய்தார். வெட்டிப்பயலின் ஐபோடில் அஞ்சல தான் எப்போதும் வாசம் செய்கிறாளாம். அடியே கொல்லுதேவைப் பற்றி பலர் பதிவிட்டுருக்கிறார்கள்.

  இது போல ஒரு Complete album சமீபத்தில் எனக்கு தெரிந்து வெகு சில மட்டுமே. யுவனின் காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெய்ன்போ காலனி. ஏ.ஆர்.ரகுமான் மணிரத்னம் ஜோடியின் சிலப் படங்கள், வித்யாசாகரின் ரன். ஆனால் இவையெல்லாவற்றையும் விட வாரணம் ஆயிரம் ஒரு படி மேலே என்பது மட்டும் உண்மை.

    ஆனால் ராசாவின் படங்களை எடுத்துக் கொண்டால் எத்தணைப் படங்கள் சொல்லலாம்? பட்டியலிடலாம் எனத் துவங்கினேன். உண்மைத்தமிழன் ரேஞ்சுக்கு போகிறது. எனவே எனக்குப் பிடித்த ஒரு படத்தை மட்டும் சொல்கிறேன். நிழல்கள்.மடை திறந்து, பூங்கதவே, பொன்மாலைப் பொழுது என ராசாவின் அட்டகாசம் சற்று அதிகமாகவே இருக்கும்.

  அதேப் போல சிலப் படங்களில் எல்லா விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கும். உதாரணம் திருமலை. தாம்தக்க பாடலில் சற்று கர்னாடக சங்கீதத்தின் சாயல் இருக்கும். மிருதங்கம், வீணை என்று அமர்க்களப்படித்தி இருப்பார் வித்யாசாகர். அழகூரில் பூத்தவளே அருமையான மெலடி. நீயா பேசியது சோகப் பாடல். வாடியம்மா ஜக்கம்மா சென்னை கானா. திம்சுகட்டை டிபிக்கல் தமிழ் சினிமா குத்துப் பாட்டு.

    பிறக்க போகும் புது வருடம் விஜய் ஆன்டனியின் வருடம் என்று தோண்றுகிறது எனக்கு. நல்ல இயக்குனர்கள் மற்றும் முன்னனி நடிகர்கள் வாய்ப்பளிக்கும்போது பிரகாசிப்பார். வழக்கம் போல் யுவன், ஹாரிஸ் கலக்குவார்கள். அதுமட்டுமில்லாமல் ச‌னவரி மாதம் சொல்ல சொல்ல இனிக்கும்படி ஒரு நற்செய்தி பதிவர்களுக்கு காத்திருக்கிறது. காத்திருங்கள்.

Dec 30, 2008

மாற்றம் வருமா ஒபாமா சொன்னது போல்?

53 கருத்துக்குத்து

   பிறக்கப் போகும் புது வருடத்திலாவது இந்த வார்த்தைகளை கேட்போமா?

குசும்பன்: கார்க்கி, இந்த ஃபோட்டோல நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க.

அப்துல்லா: கார்க்கி, எனக்கு ஒரு உதவி வேணும். செய்வியா?

வெண்பூ: இல்ல கார்க்கி. எனக்கு பிரியாணி வேண்டாம். நான் டயட்டுல இருக்கேன்.

அதிஷா: தெரியும் கார்க்கி. ஆனா ஒரு முக்கியமான் வேலை இருக்கு. அதனால்தான் பதிவர் சந்திப்புக்கு வர முடியாது.

முரளிகண்ணன்: அப்படி ஒரு படம் வந்துச்சா? எப்போ கார்க்கி?

தாமிரா: இந்த வருஷமாவது கல்யாணம் பண்னிக்கோ கார்க்கி

பரிசல்: உனக்கெல்லாம் அறிவே இல்லையா? கண்ட நேரத்துல ஃபோன் பண்ணிக்கிட்டு..

லக்கி: ஆமாம் கார்க்கி. தலைவர் இந்த விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார். நீ சொல்றதுதான் சரிதான்.

கோவியார்: ஹாய் கார்க்கி. ஆமாம் ரெண்டு நாள் பதிவு போடறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

விஜய் ஆனந்த்: கார்க்கி, இந்தப் பதிவு நிஜமா சூப்பர். எல்லா வரிகளும் கலக்கல். இது மாதிரி நிறைய எழுதுங்க. அப்புறம்....

உ.தமிழன்: படம் அருமை.

டோண்டூ : சமீபத்தில் போன வாரம்தான் படிச்சேன்.

அருண்,பிரகாஷ்: இனிமேல் இங்க கும்மியடிக்க மாட்டோம்.

கும்க்கி: என் முதல் பதிவு எழுதுவதில் ரொம்ப சந்தோஷம்.

ராப்: ஜே.கே.ஆர் பத்தி இனிமேல பேசவே மாட்டேன்.

ரமேஷ் வைத்யா: ஆமாப்பா. எனக்கு இன்னைக்கு 52வது பிறந்த நாள்.

நர்சிம் : இந்த வேகாத சென்னை வெயில்ல டக் இன் வேற பண்னனுமா. டீஷர்ட் போட்டுக்கலாம்.

சஞ்சய் : எத்தன காலம் தான் இந்த வீணாப் போன கதர் சட்டைகளுக்கு சப்போர்ட் பண்றது?

அய்யனார்: என் எழுத்து அனைவருக்கும் புரிய வேண்டும்.அது போலத்தான் இனிமேல் எழுதுவேன்.

  இந்த ஆண்டு என் உறுதி மொழி:

     ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுத்து மறுநாளே மீறிவிடுவதால் இனி எந்த ஆண்டும் உறுதிமொழி எடுப்பத்தில்லை என்ற உறுதிமொழி எடுக்கிறேன். (எப்படியும் இந்த முறை வழக்கம்போல ஒரு நாளில் மீற மாட்டேன். அடுத்த ஆண்டு வரை நிச்ச்யம் நீடிக்கும்)

Dec 29, 2008

பிரபல பதிவரை பேட்டி எடுத்த புட்டிக்கதைகள் ஹீரோ

25 கருத்துக்குத்து

    சென்னைக்கும் ஹைதைக்கும் அடிக்கடி தரைவழி மார்க்கமாகவும், வான் வழி மார்க்கமாகவும் சென்று வரும் பிர'பல' பதிவருடன் நம் புட்டிக்கதைகள் ஏழுமலை கண்ட சிறப்பு பேட்டி.

1) மனைவி சொல்லே மந்திரம் என்ற வாசகத்தில் உங்களுக்கு ஏன் உடன்பாடில்லை அன்பரே?

     யாருங்க சொன்னது மனைவி சொல்லே மந்திரம்னு?நீங்களே சொல்லுங்க, எந்த மொழி மந்திரத்திலாவது "போடா, பொறுக்கி, நாய #$%^&**&^%$#@!@#$%^&**^%$#@! போன்ற வார்த்தைகள் உண்டா? மனைவி சொல்ற‌தெல்லாம் மந்திரம் இல்லைங்க. தந்திரம்

2) "எதற்காக என்னைப் போன்றவர்கள் மனைவிக்கு பயப்பட வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பேசியிருக்கிறீர்களே?

     ஆமாங்க. நானும் தெரியாமத்தான் கேட்கறேன். துணி துவைப்பது, சாமான் கழுவறது, வீடு பெருக்கறதுனு இருக்கிற‌ எல்லா வேலைகளையும் கரெக்டா செஞ்சிடும் என்னை மாதிரியான ஆண்கள் இன்னும் எதற்காக மனைவிக்கு பயப்படனும் சொல்லுங்க.

3) பெண்கள் காந்தம் மாதிரி. கிட்டப் போனாலே ஆண்கள் ஒட்டிக் கொள்வார்கள்னு "வெட்கபடாம" ஒருத்தர் சொல்லியிருக்காரே. அதப் பத்தி என்ன நினைக்கறீங்க?

     தவறு.Absolutely Wrong. காந்தத்திற்கு பாஸிட்டிவ் சைட் என்று ஒன்று இருக்கிறதே.

4) இங்கே இருக்கும் அனைத்து ஆண்களும் இப்படித்தான் இருப்பதாக நினைக்கறீங்களா?

   என் நண்பன் ஒருவன் திருமணம் செய்யனும்னு முடிவு செஞ்சான். அவனுக்காக "மனைவி தேவை" விளம்பரம் கொடுத்தேன். மறுநாள் ஆயிரம் ஃபோன் கால். என் மனைவிய எடுத்துக்கோங்கனு. ஆண் வர்க்கத்திற்காக போராட யாருமே இல்லை என்பதுதான் இதற்கு காரணம்.I am there.I will fight for justice.

5) ஆயிரம் தான் நீங்க மனைவிகளை கிண்டம் செய்தாலும் உங்களுக்கே தங்கமணி ***** என்ற பட்டம் தானே கிடைச்சு இருக்கு?

     புரட்சி தளபதி, சின்னத் தளபதி மாதிரிங்க அது. என்ன அழிக்கனும்னு நினைக்கிற சிலர்தான் அப்படி சொல்றாங்க. உண்மையா என் ரசிகர்கள் என்னை குருவேன்னு தான் சொல்றாங்க.  

6) பெண்கள் கட்டாயம் படிக்க வேண்டும்னு எழுதி இருக்கிங்களே? என்ன படிக்கனும்னு சொல்ல வர்றீங்க?

B.Com. அப்பவாது calmஆ இருக்காங்களானு பார்ப்போம்

7) சமீபத்தில் நீங்கள் சொன்னதாக‌ சொல்லி வாசகர் ஒருவர் அவரது தங்கமணியை தூக்கிக் கொண்டு போனாராமே?

    அது ஒரு சோக கதைங்க. நம்ம கவலைகளையும் சோகங்களையும் நாம் தான் சுமக்க வேண்டும் என்று சொன்னதை அவர் தவறாக புரிந்துக் கொண்டார்.

*************************************************    மனைவிப் பேச்சுக்கு பதிலே பேசாத தா*** அவர்கள் நம்மிடம் எல்லாக் கேள்விக்கும் விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றியும் ஒரு நைன்ட்டியும்.

அடுத்து, வலையுலகை வாழ வைப்பதற்காகவே செல்லிட பேசி வைத்திருக்கும் “ரொம்ப நல்லவன்” என்று பேரெடுத்த பதிவருடன் நேர்காணல். அதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது ஏழுமலை.

Dec 28, 2008

இந்த அக்காவும் பதிவர்தான்

11 கருத்துக்குத்து

உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

160 பின்னூட்டங்கள் பெற்ற இந்தக் கவிதையை எழுதியவரை இங்கே க்ளிக்கி படியுங்கள்.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்

Dec 27, 2008

ஆறாம் விரல்

24 கருத்துக்குத்து

    அரிச்சந்திரன் கோவிலைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது அந்தக் கூட்டம். கையில் தீச்சட்டியுடன் முன்னே நடந்துக் கொண்டிருந்தான் மதன். வாழ்க்கையில் அவனுக்கு வழிகாட்டியாக இருந்த அவன் தந்தை இவனுக்குப் பின்னால். மதனுக்கு எப்போதும் துணையாய் இருந்தவருக்கே அன்று நாலு பேரின் உதவி தேவையாயிருந்தது.   

     சம்பிராதாயங்களும் ஆயத்தங்களும் முடிந்து தீ மூட்ட வேண்டிய நேரம். கொஞ்சம் கைக்கருகில் வந்தாலும் தீப்பந்தம் மதனின் கண்ணீரால் அணைந்து விடுவது போல் இருந்தது. யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக மதனின் கையைப் பிடித்து தீ வைத்தார். படுத்திருந்தவர் மதனுக்கு மட்டும் எழுந்து காட்சி கொடுத்து வழக்கமாய் அவர் சொல்லும் வசனத்தை சொன்னார். "கொள்ளி வைக்க கூட நீ தேவையில்லடா. அதான் நானே எனக்கு வச்சுக்கிறேன்".

    மதனுக்கு எல்லாமே அவன் தந்தைதான்.சினிமாவில் வருவதைப் போல இருவரும் அமர்ந்து நண்பர்கள் போல உரையாடியதில்லை. அவரின் ஒவ்வொரு செயலும் மதனுக்கு பாடமாய் இருந்தது. ஒரு நல்ல கணவனாக, தந்தையாக வாழ்ந்தவரிடம் மதனுக்கு ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது. அவரின் புகைப் பழக்கம். முடிந்த வரையில் வீட்டில் புகைக்காமல் இருந்தாலும் சில நேரங்களில் மதனிடம் பிடிபட்டு விடுவார். கேள்விகளால் துளைக்கும் மதனுக்கு ஒற்றைச் சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். புகைப்பவர்கள் தனக்குத் தானேக் கொள்ளி வைத்துக் கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் என்பான் மதன். ஆமாம். நீ உன்னைப் பார்த்துக் கொண்டால் போதும். வழக்கமாய் கொள்ளி வைப்பதற்காகவாது மகன் வேண்டுமென்பார்கள். அந்த கஷ்டம் கூட உனக்கு நான் வைக்க மாட்டேன் என்பார் சிரித்துக் கொண்டே.

  அவரிடம் இருந்த ஒரே ஒரு தீயப் பழக்கம் அவரின் உயிரையே பறித்து விட்டது என்பதை மதனால் நம்ப முடியவில்லை. முடங்கிப் போன அவன் தேற சில மாதங்கள் ஆனது. அவன் தந்தையின் விருப்பபடி திரைத்துறையில் சேர வேண்டும் என நினைத்தான். முதல் படியாக ஒரு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

  இயக்குனரிடம் அறிமுகப்படுத்தப் பட்டான். எல்லாம் எதிர்பார்த்தப்படியே நடந்தது. படப்பிடிப்பு நாளன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு ஒரு விளம்பரம் எடுக்க வேண்டியதாயிற்று. அதற்கும் மதனையே போடலாம் என முடிவெடுத்த இயக்குனர், மதனிடம் "தம்பி சிகரெட் பிடிங்க பார்க்கலாம்" என்றார்.

தடுமாறிய மதன் புகைப்பதில்லை என்றான்.

அட.. சும்மா ரெண்டு பஃப் ஸ்டைலா இழுத்து விடுங்க. புகை நல்லா வரணும்.

அதற்குள் யாரோ ஒருவர் பற்ற வைக்கப்பட்ட சிகரெட்டுடன் வந்தார். மதனின் கையில் திணிக்கப்பட்டது. செய்வதறியாத மதன் அதை தூக்கிப் போட்டுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

    இரண்டு நாட்கள் க‌ழித்து இயக்குனரை சென்று பார்த்தான். நடந்ததைக் கூறினான். அவன் தோளை அழுத்திய இயக்குனர் எடுக்கப்பட்ட விளம்பரத்தை போட்டார். புகையின் பாதிப்பை அழுத்தமாய் காட்டும் அந்த விளம்பரத்தின் முதல் காட்சியில் இளைஞன் ஒருவன் வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

Dec 26, 2008

காக்டெய்ல்

48 கருத்துக்குத்து

    சிங்கையில் பணிபுரிந்த போது "சூப்பர்ஸ்டார்" என்று ஒரு பாட்டுப் போட்டி நடை பெற்றது. ஆர்கெஸ்ட்ராவும், ஜோடிப் பாடல் என்றால் கூட பாடுவதற்கு பாடகியோ/பாடகரையும் போட்டியாளர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். திறந்த வெளியில் அனைவரின் முன் பாட வேண்டும். என் நண்பர்கள் சிலர் என்னை உசுப்பேற்றி விட நானும் பங்கேற்று முதல் ஆளாக சங்கீத ஜாதி முல்லையென்று கத்தினேன். மேட்டர் அதுவல்ல. அதற்கு முந்தைய நாள் நண்பன் ஒருவன் சொன்னான், பெண் பாடகி அவ‌னுடன் பாடுவதாக இருந்தால் அவன் பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்குயில் கூவும் ரயில் பாடலை பாடப் போகிறானாம்.

*************************************************    ஹைதையில் நான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு திடிரென என் மீது பாசம் அதிகமாகி விட்டது. பாதாளத்திற்கு சென்று விட்டு ரியல் எஸ்டேட் ஒரு காரணம் என்றாலும், அவ்வபோது நாலும் மூனும் எவ்வளவு என‌ தவித்த அவருக்கு ஏழு என்று சொல்லி நான் செய்யும் சின்ன சின்ன உதவிகளும் ஒரு காரணம். ஒரு நாள் காலையிலே அவர்கள் வீட்டில் வெஜிடபிள் பிரியாணியாம். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள். என்னை வெண்பூ என நினைத்துக் கொண்டு ஒரு குண்டாவில் கொண்டு வந்தார்கள். அதுக் கூட எனக்கு பயத்தை தரவில்லை, அதில் தெரிந்த பச்சை மிளகாயைப் பார்த்த போதே எனக்கு பயம் வந்து விட்டது. கொடுத்தது மட்டுமில்லாமல் பக்கத்திலே நின்று சாப்பிடு என்றார். பச்சடி இல்லையா என்றேன். எடுத்து வந்தப் பின்புதான் எனக்கு மயக்கம் வந்தது. அதிலும் துண்டு துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய். அவர்கள் அன்பில் அது இனித்தது என்று எழுத ஆசைதான். ஏனோ முடியல.

*************************************************

   சென்னை யூனிட் ட்ரெயின் டிக்கெட் எடுப்பதற்கு Smart Card சேவை வெகு நாட்களாக பழக்கத்தில் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக  இருக்கிறது. சனிக்கிழமை காலை பூங்கா ரயில் நிலையத்தில் நான் ஏறும் போதெல்லாம் பெரிய கூட்டம் இருக்கும். நான் நேராக சென்று ஸ்மார்ட் கார்டினால் டிக்கெட் எடுத்தால் படித்த மாதிரி தெரிபவர்களே ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இந்த வாரம் ஒருவன் 4 ரூபாய் டிக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு அவன் Smart card  மூலம் எடுத்துக் கொடுக்கிறான். மக்களும் அவனிடத்தில் வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். ரயில்வே நிர்வாகம் கண்டுக் கொள்ளவேயில்லை.

*************************************************   தமிழ்குறிஞ்சி என்ற இணையத்தளம் சினிமா,அரசியல், இலக்கியம்,வர்த்தகம் என பலதரப்பட்ட சேவைகள் வழங்கி வருகிறது. பதிவுகள் என்ற பிரிவில் என் புட்டிகதைகள் பதிவை என் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். மற்றும் பூர்ணிமாசரண் எனக்கு பட்டாம்பூச்சி(The coolest blog) விருது கொடுத்திருக்கிறார்கள். இருவருக்கும் என் நன்றிகள்.

*************************************************   வலையுலகில் நான் படிக்கும் ஒரே தொடர்கதை நர்சிம்மின் மாறவர்மன். தொடர்கதை என்றாலே பலரும் படிக்காமல் போவதற்கு காரணம் அதை தொடர்ந்து படிக்காவிட்டால் விளங்காது என்பதுதான். உண்மைதான். ஆனால் மாறவர்மனில் எனக்கு பிடித்தது வர்ணனைகள் தான். கதையை விடுங்கள். ஏதாவது ஒரு அத்தியாயத்தை மட்டும் படித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும். அவரின் வர்ணனைகளுக்காகவே அடுத்த பகுதியை நேரம் கிடைக்கும் போது படிப்பீர்கள். கலக்குங்க தல.

Dec 25, 2008

தடை தாண்டும் காற்று

39 கருத்துக்குத்து

கதவுகள் அடைக்கப்படும்போது
சாளரங்கள் திறந்திருக்கும்.
அவைகளும் மூடப்படும்போது
இன்னொரு கதவு திறக்கும்.
எப்போது எந்தக் கதவு திறக்கும்
காற்றுக்குத்தான் தெரியும்.
கதவுகளை இழுத்துப் பூட்டலாம்.
காற்று அதையும் மீறிப்போகும்
மூடிய கதவுகளையும் தாண்டி...

Dec 23, 2008

புட்டிக்கதைகள்

32 கருத்துக்குத்து

    ஏழுவுக்கு ஒரு ஆசை. தண்ணியடித்து விட்டு ஸ்டெடியாக ஹாஸ்டலுக்கு நடந்தே செல்ல வேண்டுமென்று. எவ்வளவோ சொல்லியும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. துணைக்கு ரெண்டு ஜூனியர்சுடன் கிளம்பப் போனவ்னை வழிமறித்து நாங்களே அழைத்து சென்றோம். அன்று பார்த்து பியரை ராவாக வேறு அடித்து விட்டான்.

   பாரை விட்டு வெளியே வந்தோம். ஹாஸ்டலுக்கு போக வேண்டியப் பாதைக்கு சரியாக எதிர் திசையில் நடந்தான். சரி, காத்து அந்தப் பக்கம் அடிக்குது போலிருக்கு என்று நாங்களும் நடந்தோம். எதிரில் வந்த ஒரு முதியவர் ஏழுவை மடக்கி தம்பி அடையாறுக்கு எப்படிப்பா போனும் என்றார்?

அதான் பைக் வச்சிருக்கிங்க இல்ல? அதிலே போக வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் ஏழு.

ஏழுவுக்கு தாடி வளரவே இல்லை என்ற மனக்குறை உண்டு. வழியில் ஒரு சலூன் கடையைப் பார்த்ததும் உள்ளே நுழைந்தான். ஸ்டைலாக ஷேவிங் என்றான். அவர் சிரித்து விட, வெட்கத்துடன் வெளியே வந்துவிட்டான்.

மச்சி, உனக்கு ஷேவ் பண்ற செலவே கிடையாது. அதனால் அது shaving இல்லடா, saving என்றான் ஆறு. ஏழுவுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதும் இவன் தான்.

டேய்.உள்ள ஹேர் டைனு எழுதியிருக்கான். அப்படின்னா என்னடா? முடி எப்படி சாகும் என்றான் ஏழு.

லூசு. Dyeன்னா கலர் அடிக்கிறது. Die ன்னா தான் சாவது.

எனக்கு புரிஞ்சிடுச்சு. Dyeன்னா மண்டைல போடறது. Dieன்னா மண்டையே போடறது. சரியா? என்றான் தெளிவாக.

இவன் அடிக்கும் கூத்தையெல்லாம் பார்த்த வெளி மாநிலத்தை சேர்ந்த ஒருவன் ஏழுவிடம் வந்து Can i say something? என்றான்.

அவ்வளவுதான். ஏழுவுக்கு கோவம் வந்துவிட்டது. மச்சி என்ன பார்த்து ‘கேணை ஏதாவது சொல்லுன்னு’ சொல்றான் மச்சி என்றான்.

பின் அவனை ஒரு வழியாய் அங்கிருந்து ஹாஸ்டலை நோக்கி தூக்கிக் கொண்டு போனோம்.

இவன் ஏன்டா இப்படி செய்றான் என்றார் ஒரு புது வரவு.

இது பரவாயில்ல மச்சி. ஒரு தடவ ரயில்வே ஸ்டேஷனுக்கு போனப்ப, ப்ளாட்ஃபார்ம் டிக்கட் வாங்க சொன்னேன். அதுக்கு இவன் கேட்கறான் "ஏன் மச்சி.காசுதான் இருக்கில்ல. பால்கனி வாங்கலாமா?"

ரைட் விடுன்னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு நானே போய் டிக்கட் வாங்கிட்டு வந்தேன். அப்போ ஒரு பெண் குரல் சொல்லுச்சு ”Charminar express will arrive shortly on platform number 10”. அதுக்கு இவன் கேட்கறான்

ஏன் மச்சி. Shortஆ வந்தா பயணிகள் எண்ணிக்கை குறையுமே. மீதிப் பேர் எல்லாம் எதுல வருவாங்க?

அப்புறம் எங்க ஃப்ரெண்ட் வந்த கோச் கடைசிப் பெட்டின்னு சொன்னதால் ரொம்ப தூரம் நடந்தோம். பாதி தூரத்துல நடக்க முடியாம இந்த லூசு சொல்றான் இனிமேல் கடைசிப் பெட்டியே எந்த வண்டியிலயும் இருக்கக் கூடாதாம்.

அது எப்படிடா ?எப்படியும் ஒரு கடைசிப் பெட்டி இருக்கனுமில்ல?

அப்படின்னா அத கொன்டு வந்து நடுவுல வைங்கனு சொல்றான்.

--ரவுசு தொடரும்

உயிரோசையில் வந்த என் சிறுகதை

48 கருத்துக்குத்து

    இது எல்லாம் பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள். எனக்கு பெரிய விஷயம்தான். உயிர்மை பதிப்பகத்தின் வார இதழான உயிரோசையில் "நான் நான் தான்" என்ற சிறுகதை வந்திருக்கிறது. நம் படைப்புகளை அனுப்பலாம் என்ற செய்தியைப் பார்த்ததும் என் 130 குப்பைகளையும் தேடினேன்.  எனக்கே எதுவும் திருப்தி இல்லாத போது எப்படி அனுப்புவது? கடைசியில் தேறிய ஒன்றுதான் இந்த சிறுகதை. நகைச்சுவை, மொக்கை சார்ந்த பதிவு ஏதாவது வந்திருந்தால் எனக்கு இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. எனக்கும் கொஞ்சம் எழுத வருகிறது என்பதற்கான் முதல் அங்கீகாரமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

      இது போல் என் படைப்புகள் இதழ்களில் வர வேண்டுமென முதன்முதலில் வாழ்த்திய சகா பரிசலுக்கும், உயிரோசையில் முதலில் படித்து பின்னூட்டமிட்ட அனுஜன்யாவிற்கும், உயிரோசையை எனக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீமதிக்கும், என் அண்ணன் அபிக்கும் மற்றும் என்னையும் படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

 உயிரோசை

 என் சிறுகதைகள்

Dec 21, 2008

...போடா

45 கருத்துக்குத்து

சப்தமில்லாமல்
படித்துக்கொள்ள
ஆயிரமாயிரம்
கவிதைகள்
நம் காதலில்...
சப்தமிட்டு
அழுகின்ற
மௌனங்கள்
நம் பிரிவில்....
*
என் கண்ணீரையும்
கவிதையாக்கக்
கற்றுக்கொண்டேன்
நம் பிரிவிற்கு
பிறகு....
*
திடீரென நினைவிற்கு வந்து
பேனா தேடும் முன்
மறந்து போகும்
கவிதைகளாய் அல்லாமல்
உன் நினைவுகள்
ஊமைக்காயங்களாய்
மனதினுள் ஆறாமல்......
*
அம்மாவைத் தேடி
அழும்
குழந்தைப்போல் உன்னைத்தேடி
அழும் மனதிற்கு
எப்படி சொல்வது
நம் பிரிவை......??
*
கண்கலங்காமல்
பார்த்துக்கொண்டாய்
காதலிக்கும்
காலம் வரை
இன்று
கலங்கிய கண்களோடு
மட்டுமே நான்......
*
என் வாழ்க்கையின்
அழகான பக்கங்களை
நீதான் நிரப்பினாய்
ஆனால்
புத்தகத்தையே
இன்று கிழித்தாய்
முறையா.......??
*
நீ தந்த
ரோஜா செடிக்கு
நம் பிரிவை
சொன்னது யார்
வெறும் முட்செடியாய்
இன்று.....
*
நீ தந்த
முத்தங்களை
நீயே எடுத்துக்கொள்
பருக்களாக
இல்லாமல்
அவை
இன்று
வடுக்களாக......
*
உனக்காக
நான்
எழுதிய கவிதைகள்
என்னைப் பார்த்து
ஏளனம் செய்கின்றன
அதற்காகவேணும்........
*
பசித்திருக்கிறேன்
தவி(னி)த்திருக்கிறேன்
விழித்திருக்கிறேன்
வேண்டாமே
இந்த பிரிவு......
*
நாம்
பிரிந்து விட்டோம்
நம்
காதல் குழந்தையை
என்ன செய்ய..??
*
காதலுக்குக்
காரணம்
தேவையில்லை என்றாய்
பிரிவுக்குமா.....??
*
உன்
காதல் கடிதங்களின்
வாசம் கூட மாறாமல்
என்னிடம்
நேசம் மாறிய நெஞ்சுடன்
நீ.......!!
*
பொம்மையைத்
தொலைத்துவிட்டு
அழும்
குழந்தையாய்
காதலைத்
தொலைத்துவிட்டு நான்.......

  இவரின் இன்னும் பலக் கவிதைகளை படிக்க இங்கே க்ளிக்குங்கள். இவரின் சமீபத்திய கவிதை உயிரோசையில் கூட வந்திருக்கிறது.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌

   அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

Dec 20, 2008

பேய் பார்த்திருக்கிங்களா?

34 கருத்துக்குத்து

    வழக்கமாய் தெய்வங்கள் நிறைந்து காணும் அந்த பெருமாள் கோவில் வெள்ளிக்கிழமை ஆனால் மட்டும் தேவதைகளால் நிரம்பிப் காணப்படும். அப்படி ஒரு தினத்தில் மதனும் கோவிலுக்கு வந்திருந்தான். வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது.

  ட்யூஷன் முடிந்து நேராக வந்ததால் கையில் சில புத்தகங்கள் வைத்திருந்தான். படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது என்பதற்காக கோபுரத்தை நோக்கி  திரும்பிய அவனை ஒரு குடை இடித்தது. கூண்டுக்குள் மட்டுமே கிளியைப் பார்த்த அவனுக்கு குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளியைப் பார்த்ததால்,அது என்ன சொல்வார்கள் ஆங்ங், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் உதடு பிரிந்தபோது உள்ளே இருந்த பற்களை பார்த்தான். "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன‌ வைரப்பற்களை வைத்திருக்கிறாள்". மைன்ட் வாய்ஸ் முடிந்த போதுதான் அவள் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது.

  ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.

    தேவதைகள் பேச மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது தப்பென்று தெரிந்துக் கொண்டான்.

    புக்ஸைக் வாங்கிக் கொண்டு கோபுரத்தை நோக்கி நகர்ந்தது அந்தச் சிலை. அவளுக்கு முன் வேகமாய் ஓடி நல்ல இடமாக பார்த்து நின்றுகொண்டான். அவன்ருகில் ஒரு பெரியவர் வர, ஆள் வராங்க என்று டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது  போல் நகர்த்தினான். அம்மன் என்று பக்தரைத் தேடி வந்திருக்கிறது? நேராக தன் தோழிகளுடன் சென்று விட்டாள். கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.

  நண்பனின் ஆளைப் பார்க்க கோவிலுக்கு வந்தவனுக்கு அருள் புரிந்த பெருமாளை (அவரில்லைங்க) சேவித்து விட்டு சந்தோஷமாய் வந்தான். அடுத்த வாரம் வந்தால் புடித்து விடலாம் என நினைத்தவனுக்கு உடனே அருள் புரிந்தார் பெருமாள். கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது.

புக்ஸ் வேணாமா? நிஜமா உங்களதுதானே?

ஆமாங்க. சாமி கும்பிட போயிட்டேன்.

உங்களுக்காக வெய்ட் பண்றேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போயிட்டாங்க.

மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு.

எங்க வீடுன்னு சொல்லுங்க. என்கிட்ட பைக் இருக்கு என்றான்.

சிறிது நேரத் தயக்கதுக்குப் பின், ஹவுஸிங் போர்ட் என்றாள்.

    இங்கேயே இருங்க, இதோ பைக் எடுத்துட்டு வர்றேன் என்றவன் ஓடினான். போன மாதம் தான் அந்த பல்சரை வாங்கித் தந்தார் அவன் அப்பா. "லவ் யூ டேட்" என்று வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டு வண்டியைக் கிளப்பினான். மதனின் நண்பர்கள் வயிற்றெரிச்சல் புகையாய் வந்தது.

    தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது. வண்டியில் அவள் கைப்பட்டதும் மதனுக்கு லேசாய் சிலிர்த்தது. இதை கவனித்த அவள் புன்னகைக்க மதனின் கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கியது.புன்னகை தொடர்வதை கவனித்தான்.

     பேசிக்கொண்டே பயணித்தார்கள். உங்களுக்கு தாவனி ரொம்ப நல்லாயிருக்குங்க. மெல்ல ஆரம்பித்தான் மதன். அப்புறம் என்ன என்ப‌து போல அவளும் ம் சொல்ல, பட்டியல் இட்டான். பாரதிராஜா படத்து வெள்ளை தேவதைகள் அவனை சுற்றி வர, அனைத்தும் வெள்ளையிலே இருக்கும்படி வர்ணித்தான்.அவள் சத்தமின்றி சிரிப்பதை எல்லாம் ரியர் வியூ மிரரில் நோட்டமிடத் தவறவில்லை அவன்.

  ஹவுசிங் போர்டு. ஊருக்கு ஒதுக்கு புறமான ஏரியா. போகிற வழியில் விளக்குகள் எல்லாம் உண்டு என்றாலும் சாலையில் இருந்து சில மீட்டர் தூரத்திலே இடுகாடு. எப்படி தனியாக போவாள் என்று யோசித்தான். சரியாக இடுகாட்டின் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் பதிலுக்கு காத்திராமல் இடுகாட்டை நோக்கி நடந்தாள் அவள்.

     இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன். சில வினாடிகளில் சுதாரித்தவன் ஒரு பெண்ணே தனியா போகும்போது நமக்கென்ன என்றபடி நகத்தை கடிக்கலானான். எங்கே போயிருப்பாள்? என்ன அவசரமோ என்றபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும். ஒரு பக்கம் கும்மிருட்டு. அவள் சென்ற திசையை நோக்கிப் பார்வையை மீண்டும் திருப்பியவன் அலறியடித்துக் கொண்டு வண்டியிலிருந்து சரிந்தான்.

    அங்கே.. அவள்.. வெள்ளை சேலை.. வெள்ளை ரவிக்கை... வெள்ளை வளையல் என அனைத்தும் வெள்ளையாய். ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை. இவன் கேட்டது போலவே அவள் வந்தும் மதனால் பார்க்க முடியவில்லை. அவள் சிரித்த முதல் சிரிப்பின் எதிரொலி அடுத்த சிரிப்போடு மோதும் போது மதனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது.காரணமே இல்லாமல் அவளின் மெல்லிய புன்னகை ஒரு கணம் அவன் முன் நிழலாடி சென்றது. மதனை நோக்கி வர ஆரம்பித்தாள். அவள் நடக்கிறாளா இல்லை பறக்கிறாளா எனத் தெரியாத படி அவளின் வெள்ளை நிறச் சேலை தரையில் தவழ்ந்தது.

   கீழே கிடந்த பல்சரை தூக்கினான். அவனே நேராக நிற்க முடியாத போது 150 கிலோ பைக்கை எப்படி தூக்குவது? ஓடலாம் என்றால் கால் ஆனியடித்தது போல் அங்கேயே நின்றது. இதற்குள் அவள் மதனை நெருங்கிவிட்டாள். மீண்டும் அதே போல் ஒரு சிரிப்பு. ஏதோ சொல்ல அவள் எத்தனித்த போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டான்.

“.......”

   மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து கேட்டான் "என்ன சொன்னிங்க?"

அவள் மீண்டும் சிரித்து விட்டு சொன்னாள்

 நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்

(அவள் சொன்னதை படிக்க மேற்கோள் குறிக்குள் இருப்பதை செலக்ட் செய்யவும்.)

டிஸ்கி: கதை பிடித்ததா? உடனே மேலே போய் தமிழ்மண ஓட்டு போடுங்க. இல்லைன்னா இதுப் போல இன்னும் பலக் கொடுமைகள் தொடரக்கூடும்.

Dec 19, 2008

வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு

30 கருத்துக்குத்து

மு.கு:  வழக்கமான விஜய் படத்தின் பாடல்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் தொடருங்கள்.

     பாடல்கள் வெளிவந்த முதல் நாள் ஒரு ஆர்வத்தில் இணையத்தில் இருந்து தரவிறக்கி கேட்டாலும் அன்று மாலையே ஒரிஜினல் சி.டி வாங்கியாச்சு. மொத்தம் 8 பாடல்கள். எனது விருப்பப் பாடல்களின் வரிசையில் சொல்கிறேன்

1)வாடா மாப்ளே( திப்பு,ரீட்டா, வடிவேலு):

      வழக்கமாக விஜய் படத்தில் கடைசி பாடல் வேகமான குத்துப் பாடலாகத்தான் இருக்கும். இது கொஞ்சம் ஸ்லோ என்றாலும் பட்டையை கிளப்புது. ஆங்காங்கே சுறாங்கனி பாடலின் வாசம் அடிக்கிறது. இசை சேனல்களில் அடிக்கடி பார்க்கலாம். வெகு நாட்களுக்கு பின் திப்பு. ஆனாலும் அதே பாணியில். பாடல் கேட்கும் போதெல்லாம் என் கால்கள் தானாக ஆடுகின்றன.

 2) ஜல்சா(பாபா சேகல்,ரீட்டா)

    தெலுங்கு ஜல்சாவில் எனக்கு பிடித்த பாடல். விஜய்க்கு கிடைத்தால் ஆடித் தீர்ப்பார் என்று அப்போதே நினைத்தேன். இதற்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தால் ரசிகர்களுக்கு அன்லிமிட்டட் மீல்ஸ்தான். ரசிகர்களை சூடேற்ற 'Lets rock the floor ilaya thalapthy' என்பது போன்ற வரிகளும் உண்டு. முதல் பாடல் பக்கா லோக்கல் என்றால் இது டோட்டலி ஆப்போஸிட். இதன் ரீமிக்ஸும் உண்டு. கார் வைத்திருப்பவர்கள் அடிக்கடி கேட்பார்கள்.

3) டாடி மம்மி (மம்தா மோகன்தாஸ்,நவீன்)

   இன்னோரு ட்ரேட் மார்க் தேவிபிரசாத்தின் பாடல். நடிகை மம்தாவின் குரல் பல‌ருக்கு பிடிக்கலாம், சிலருக்கு எரிச்சலை தரலாம். பாடலின் ரிதம்தான் கடைசி வரைக்கும் காப்பாற்றுகிறது. முதல் நாள் தொலைக்காட்சிகளில் இந்த பாடல் தான் அடிக்கடி ஒளிபரப்புவார்கள் என நினைக்கிறேன். டைம் பாஸ் பாடல்.

4) நீ கோபபட்டால் (சாகர்)

    படத்தில் இருக்கும் ஒரே மெலடி. கிட்டாரை அடிக்கடி உபயோகிக்கும் இந்த தலைமுறை ஆட்களில் ஒருவர் தேவி. ஆங்காங்கே ஒலிக்கும் கிட்டார் அருமை. ஒவ்வொரு முறை "நீ என்னை மறந்தால்" என்ற வரிக்குப் பின் வெவ்வேறு இசைக் கருவிகள் மீட்டுவது பழைய முறைதான் என்றாலும் கேட்க சுகமாக இருக்கிறது. சாகரின் குரல் ஓக்கே. பாடல் பா.விஜயாமே. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். 'நீ முத்தம் ஒன்று தந்தால்' பாடல் மாதிரி வேண்டுமென்று பிரபுதேவா கேட்டிருப்பார் என நினைக்கிறேன். அபப்டியென்றால் ஸாரி பிரபுதேவா.

5) ராமா ராமா (அமல் ராஜ், கோவை சரளா)

      வில்லு வில்லு வில்லு வர்றான் வில்லு

     நில்லு நில்லு தில்லிருந்தா எதிர நில்லு

   ஒப்பனிங் சாங். அப்படியே ஆடுங்கடா பாடல். பீட்டில் மட்டுமல்ல பாடலை கம்போஸிங் செய்த முறையிலும். அதிரடி ஆரம்பம், பொறுமையாய் ஆரம்பிக்கும் சரணம், பின் வழக்கம் போல டும்ட்ட டக்கட டும்ட டக்கட.. தியேட்டரில் ரசிகர்களுக்கு சாமி வருவதற்கு அனைத்து வசதிகளும் செய்திருக்கிறார்கள். விஜய் எதிர்காலத்தில் கட்சி ஆரம்பித்தால் கபிலன் தான் கொ.ப.செ.

" பேரும் புகழும் கொன்டவங்க ஊருக்குள்ள ரொம்ப பேரு    பேரிலயே புகழ கொண்ட என்னப் போல வேற யாரு ஆண்டவன் தான் என்னை பார்த்து என்ன வேணும்னு கேட்டா

அகதியான் மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்".."

   வேறு ஏதாவ்து சொல்லனுமா? முதல் நாள் படத்துக்கு போனால் 15 நிமிஷம் லேட்டாப் போங்க. எப்படியும் ஒன்ஸ்மோர் உறுதி.

6) தீம்தனக்க (தேவி,திவ்யா)

  இருக்கும் அனைத்து வெஸ்டர்ன் இசைக் கருவிகளையும் உபயோகித்திருக்கிறார். கேட்க கேட்க நல்லாயிருக்கு. சினேகனின் வரிகள். ஒரே படத்தில் இரண்டு பாடல்கள் ஒரே மாதிரி இருப்பதால் அவ்வளவாக கவரவில்லை.

    ஏழாவது ஜல்ஸாவின் ரீமிக்ஸ். எட்டாவ‌து ஒரு நிமிட பாடல்.சும்மா லுல்லுலாயிக்கு. போக்கிரி பாடல்கள் உங்களை மகிழ்வித்திருந்தால் இதுவும் நிச்ச‌யம் உங்களுக்கு புடிக்கும். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், போக்கிரி அளவுக்கு வரவில்லை என்றே நினைக்கிறேன். பாடல்களில் போக்கிரி சாயல் அடிப்பதால் படத்திலும் இருக்குமா?

Dec 17, 2008

உடன்பிறப்புக்கு ஒரு கடிதம்

38 கருத்துக்குத்து

அன்பு அண்ணனுக்கு,

   எப்படி தொடங்குவது? சொல்ல முடியாத விதயங்களை கடிதம் மூலம் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி எதுவும் உன்னிடம் சொல்லாமல் விட்டதில்லை. நேரிடையாக சொல்லாவிட்டாலும் எப்படியாவது உன்னை வந்து சேர்ந்திருக்கிறது. சேர்த்திருக்கிறேன். அப்படி சொல்லாமல் போனவை கடிதம் மூலமும் சொல்ல இயலாதவைகளாக இருக்கும்.

  அலுவலக பார்ட்டியில் சற்று அதிக 'உற்சாகத்துடன்' கலந்துக் கொண்டுவிட்டு தவிர்க்க முடியாத நிலையில்  நண்பனுடன் வீட்டுக்கு வந்தேன். அமைதியாய் உள்ளே அழைத்து, வந்திருந்த உறவினர்களுக்குத் தெரியாமல் படுக்க வைத்தாய். காலையில் பயத்துடனே எழுந்த என்னை ஒருப் பார்வை பார்த்தாய்.அந்தப் பார்வையில் வழிந்த சின்னதோர் மன்னித்தலை மறக்கவா முடியும்?

  காலத்தின் கட்டாயத்தால் பல வருடங்களாகவே நீயோ நானோ ஒருவர் கடல் கடந்துதான் இருக்கிறோம். உனக்கும் எனக்கும் இடையே திட்டு திட்டாய் ரகசியங்கள் வளர்ந்தது அப்போதுதான் என்றாலும் இந்தப் பிரிவுதான் எனக்கு பலப் பொறுப்புகளைக் தந்திருக்கிறது. நேற்றைய வார்த்தைகளால் என்னை உச்சரித்துப் பார்த்தால் காது கொடுத்து கேட்கும்படியில்லை. உனதோ அல்லது நம் அப்பாவின் அகராதியிலிருந்து சில வார்த்தைகள் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்த்தால் வெறும் பாலவனமாகத்தான் தெரிகிறது நான் கடந்து வந்தப் பாதை. ஆங்காங்கே பச்சை நிறம் தெரிகிறது என்றால் உன்னோடு இருந்த இடமாகத்தான் இருக்க வேண்டும்.

   இதுதான் பாடம் என்று ஆசிரியர் சொல்லும்போது புரிவதில்லை பலருக்கு. அதை அனுபவிக்கும்போதோ எதிர்கொள்ளும் போதோ அட!! அவர் சொன்னது இதைத்தானே என்கிறோம். உன்னிடம் நான் கற்ற அனைத்தும் இவ்வகையே. நான் நானாக இருக்க நீயும் ஒரு காரணமல்லவா?

"திறக்காத காடுகளின் ஒரு முனையில் தொடங்கும் காற்றைப் போல நம் பிறவி.தொடர்ச்சியான அறிமுகங்க‌ளில் இசையாகிறோம்".

      இதயம் வருடம் இளையராஜாவின் இசையைப் போல் ஆகிவிட்ட உனக்கு பிறந்த நாள் பாடல் பாடுகிறேன்.  எங்கேயோ கேட்டது போல் இருப்பதாக நினைக்காதே. அது உன் ராகமாகத்தான் இருக்கும்.

நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் அபி.

 

முக்கிய குறிப்பு: இன்று பிறந்த நாள் கொண்டாடும் வலையுலக நகைச்சுவை மன்னன், நையாண்டி அரசன், குசும்பு கோவேந்தன், ஜாலி ஜானகிராமன், குசும்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.. இவர் இன்று போல என்றும் வாழ்ந்து பலரையும் கலாய்த்து சாபம் வாங்க வேண்டுமென வரம் தருகிறேன்.

Dec 16, 2008

இப்படியும் சில் ஊருண்டு..

34 கருத்துக்குத்து

அன்பின் கார்க்கி..,
ரேஷன் கடை மாதாந்திர ஆய்விற்க்காக சென்ற முலுக்கலபள்ளி என்ற ஊரில் கெரசின் வாங்க காத்திருந்த அப்பாவும் மகனும் அவ்ர்தம் ஊரும்.....
இரு பெரும் பொருளாதார மேதைகளின் சாதனையால் ஒரு செகண்டிற்க்கும் குறைவான நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்த உங்களுடன் என்னால் செல்பேசிட முடிந்தது..மலை கிராமத்திலும் ஏர் செல் கவரேஜ் வசதி. நாட்டினுடைய வளர்ச்சி சதவீதம் இவர்களை போன்ற ஏழை விவசாயிகளுக்கு என்ன செய்தது...அல்லது நாம்தான் என்ன செய்ய போகிறோம்...?
பதிவாக போட முடியுமெனில்  நன்றி.
கும்க்கி
தகவல் தந்த நம் நண்பர் கும்க்கிக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிருங்கள். ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாற்ற‌ம் நிகழ வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

புட்டிக்கதைகள்

59 கருத்துக்குத்து

    புட்டிகதைகளின் நாயகன் ஏழுமலையைப் பற்றி தெரியாதவர்கள் இங்கே அவனை சந்தித்து விட்டு வாருங்கள்.  

*************************************************

    ஒரு வழியாக ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு அனுமதி வாங்கிக் கொண்டான். இரண்டு ஃபுல் எம்சியும் ஒரு டஜன் பியர்களும் அடிப்பதற்கு வெறும் எட்டு பேர் மட்டுமே இருந்தோம். வரவேண்டியவர்களில் மூவர் வராதது ஏழுவுக்கு அதீத சந்தோஷத்தை கொடுத்தது.

   சைட் டிஷ்களும்,சாப்பிட சப்பாத்திகளும் நிரம்பி வழிந்தன. சியர்ஸ் சொல்லி முதல் சிப் மட்டுமே அடித்திருந்தோம். முதல் சிப்பிலே ஹீரோ ஆட ஆரம்பித்தார். பர்த்டே பேபிக்கு ஏழுமலையின் லீலைகள் தெரியாது. சப்பாதியை ஒரு கடி கடித்த பேபி சொன்னார்

"மச்சி சப்பாத்தி சாஃப்ட்டா(soft) இருக்குடா. எங்க வாங்கின?"

"சாப்ட்டா எப்படிடா இருக்கும்? காலியாயுடுமே" என்றான் ஏழு.

"இல்ல. தின்னா(Thin) இருக்குன்னு சொன்னேன்"

"தின்னா மட்டும் எப்படிடா இருக்கும்"?.

ங்கொய்யால உனக்கு சப்பாத்தி கிடையாது 

மெஸ்சில் இருந்து கொண்டு வந்த‌ உப்புமாவே போதும்.

சும்மா சொன்னேன்டா. கோச்சிக்காத.

 அதுக்கில்லடா. உப்புமா வாரத்துல ஒரு நாள்தான் போடறாங்க. அதான் உப்புமா சாப்பிட்டாவாது என் உடம்பு "உப்பு-மான்னு” பார்க்கிறேன்

    இப்போது பேபியின் முகத்தில் சின்ன கோவத்தை பார்க்க முடிந்தது. உஷாரான ஏழுமலை பேச்சை மாற்றினான்.

    மச்சி, பியரும் உயிரும் ஒன்னுடா. இந்த பாட்டில்ல பியர் இருக்கிற வரைக்கும் இதுக்கு ரேட்டே வேற. அதுவே பியரை குடிச்சிட்டா, காலி பாட்டில். அதே மாதிரி உடம்புக்குள்ள உயிர் இருக்கிற வரைக்கும் தான் மவுசு. உயிர் போச்சுன்னா, அவ்ளோதான். இதத்தான் பெரியவங்க சொன்னாங்க

"இந்த பியரும் உயிரும் ஒன்னு
அறியாதவன் மண்டைல மண்னு".

  இதற்குள் நான் இரண்டாவது ரவுண்டை முடித்து மூன்றாம் ரவுண்டுக்கு போவதைப் பார்த்து ஏழு கோபமாக தனது இரண்டாவது சிப்பை இழுத்தான். ஏழுமலைக்கு 'சிப்' தான் ரவுண்டே.மீண்டும் தத்துவங்கள் பொழியத் தொடங்கினான்.

    மச்சி, மனுஷன் இந்த சரக்கு பாட்டல் மாதிரிதான் இருக்கணும். இப்போ நான் குவார்ட்டர்(?)அடிச்சதுக்கே தலை சுத்துது. ஆனா இந்த பாட்டில்குள்ள‌ ஃபுல் சரக்கு ராவா இருந்தாலும் ஆடாம இருக்குப் பார்த்தியா!! அந்த மாதிரி அடக்கமா இருக்கனும்.

   ஃபுல் க்ளாசையும் அடித்துவிட்டான். இதுவரை இவ்வளவு அடிச்சதில்லை. தன் காதலியை நினைத்து புலம்பத் தொடங்கினான் ஏழு.

 இன்னும் ஞாபகமிருக்கு மச்சி. கண்ணுக்குள்ளே இருக்கா.. என் தேவதை.. எவ்ளோ ட்ரை பண்ணியும் முடியல.. முழு போதையிலும் மனசு முழுக்க நிறஞ்சு இருக்கா.. விப்ரோல இருந்து போயிட்டா.. செல் நம்பர் மாத்திட்டா.. வழக்கமா கால் பண்ணி குரல மட்டும் கேட்பேன்.. அவ ஹலோ ஹலோன்னு சொல்ல மாட்ட.. ஒரு ஹலோக்கு பதில இல்லைன்னாலே நான் தான்னு தெரியும்..அட்வைஸ் பண்ணுவா..  நல்லயிருக்காளாம் மச்சி.. இப்போ என்ன செஞ்சிட்டு இருப்பா?.. என்ன பத்தி நினைப்பாளா? வழக்கம்போல ஒரு முட்டு சந்துல விழுந்து கிடப்பானே.. பாவம்.. கால் பண்ணுவாளா?  அழனும் போல இருக்கு... ஒரு வேளை என்னை கல்யானம் பண்ணியிருந்தா அவளுக்கு ஸ்டேட்ஸ் யூ.எஸ். போற வாய்ப்பில்லாம போயிருக்கலாம்.. ஆனா.. என்ன ஆனா.. போயிட்டாளே..எனக்கு யூ.எஸ்.போக விசா கொடுப்பாங்களா? கொடுத்தாலும் அவ புருஷன் கூட இருப்பாளே.. அடுத்தவன் காதலிய கல்யாணம் பண்ணவன விட்டுடறாங்க..என்னை மட்டும் அடுத்தவன் மனைவிய இன்னுமா காதலிக்கறன்னு கேட்கறாங்க.. தேவதைகள சாபம் ஒன்னும் பண்ணாது.. அதனால் சொல்றேன்.. என்ன தனியா அழ வச்சதுக்கு அனுபவிப்படி.. உள்ள போற தண்ணியெல்லாம் கண்ணு வழியா வெளில வர வச்சதுக்கு நல்ல அனுபவிப்ப... நல்லயிரு.. போங்கடா.. போய் காதலிச்சு செத்து போங்க.. பொண்ணு பின்னாடி சுத்தி சீரழிஞ்சு போங்க...

    சரியாக 38 மணி நேரம் கழித்து எழுந்த ஏழுமலை மறக்காமல் கேட்டான் மச்சி ஃபுல் அடிச்சிருப்பேனா?

 

Dec 15, 2008

காக்டெய்ல் (ஹிட்ஸ் ஸ்பெஷல்)

51 கருத்துக்குத்து

   ஹிட்ஸ் என்றதும் எனக்கு பதிவர் அறிவிழி என்பவர்தான் நினைவுக்கு வருகிறார். கடந்த செப்டம்பர் மாத‌ம் எழுத தொடங்கினார் இவர். அதற்குள் 95000 ஹிட்ஸ் என்று அவரது தளத்தில் உள்ள கவுன்டர் காட்டுகிறது. அவர் இந்த ரேஞ்சில் போனால் நாளையே லட்சத்தை தொட்டுவிடுவார் என்பதால் இப்போதே பாராட்டை சொல்லிவிடுகிறேன். :))

*************************************************

     சாருவின் ஹிட்ஸைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அக்டோபர் 20ஆம் தேதி எழுதிய இந்தப் பதிவின்படி அவரது ஹிட்ஸ் 513595.அப்போது அவரது தளத்தில் ஒரு நாளைக்கு 10,000 பேர் படிக்கும் தளம் என சொல்லி யிருந்தார். Google analytics ஆதாரம் என்றும் சொல்லியிருந்தார். அப்படியென்றால் இரண்டு மாதத்தில் ஆறு லட்சம் ஹிட்ஸ் கூடி 11லட்சம் ஆகியிருக்க வேண்டும். இன்று அவரது ஹிட்ஸ் 7,10,000. ஒரு நாளைக்கு 10,000 பேர் படிக்கும் தளம் என்றிருந்ததை பல ஆயிரம் என மாற்றி விட்டார். முதலில் சொன்னது உண்மையென்றால் சாருவின் கிராஃப் தாறுமாறாக கீழேப் போய் கொண்டிருக்கிறது. முதலில் சொன்னது பொய் என்றால் நாம் சொல்ல வேண்டியது " சாரு கொடி பறக்குதடா".

*************************************************

    ஹிட்ஸை பற்றி பேசிவிட்டு லக்கியைப் பற்றி சொல்லாமல் விட முடியுமா? எந்த நேரமும் 10 லட்சத்தை தொட்டு விடக் கூடிய தூரத்தில் இருக்கிறார். சந்தேகத்திற்கு இடமின்றி 10 லட்சத்தை தொடப் போகும் முதல் தமிழ் பதிவர் இவர்தான். இட்லிவடை தொட்டு இருந்தாலும் அது ஒரு பதிவரின் சாதனையாகாது. ஹேட்ஸ் ஆஃப் லக்கி. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்.

*************************************************

  நான் பார்த்தவரை பதிவர்கள் அதிகம் பயன்படுத்துவது Histats.com என்ற ஹிட் கவுன்டர்தான். இது ஏற்கனவே ஒரு முறை பிரச்சனை வந்து பாதி நாள் ஹிட்ஸை கணக்கெடுக்காமல் போனது. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. நேற்று மீண்டும் ஒரு பிரச்சினை. 75000 ஹிட்ஸை கடந்து விட்டோம் என நினைத்த எனக்கு ஒரு அதிர்ச்சி. 66,545 என்று காட்டியது. பரிசலின் வலைக்கு சென்று பார்த்தால் அங்கேயும் குறைவாக காட்டியது. கொஞ்ச நேரம் எதுவுமே காட்டாமல் போனது. பதிவர்கள் இரண்டு வெவ்வேறு Hit counters  வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை. அதிஷாவின் தளத்தில் இது போல் இரண்டு கவுண்டர்கள் உண்டு. ஒரே சமயத்தில் ஒன்றில் 10Users online என்று காட்டும். மற்றொன்று 19users என்று காட்டும். என்ன செய்யலாம் என தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

************************************************

    எல்லோரையும் போலவே எனக்கும் தமிழ்மண நட்சத்திரம் ஆக வேண்டும் என்று ஆசை உண்டு. ஆனால் உண்மையாகவே நட்சத்திர அந்தஸ்து நமக்கு அதிக வாசகர்களை தருகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. சமீபகாலமாக நடச்த்திர பதிவர் எழுதி சூடான இடுகை என் கண்களில் படவே இல்லை. மேலும் சமீபத்தில் எழுத ஆரம்பித்த பலருக்கு நட்சத்திரம் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பலரும் நல்ல முறையில் அதை பயன்படுத்தினாலும் ஒரு சிலர் நோக்கியாவின் புதிய செல்லிட பேசியைப் பற்றி மட்டுமே பதிவிட்டு அந்த வாரம் முழுவதும் ஓட்டி விட்டார்கள். நட்சத்திரங்கள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? தமிழ்மணம் கொடுத்திருக்கும் விளக்கம் தெளிவாக இல்லை. புதிதாய் பலரும் நல்ல விதத்தில் எழுதிக் கொன்டிருக்கும்போது ஏற்கனவே இருந்தவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்கப்படுவதைப் பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகிகளின் சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நடக்கிறதா என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மூத்தப் பதிவர்கள் விளக்குவார்களா?

Dec 14, 2008

இதெல்லாம் ஒரு பொழப்பா?

50 கருத்துக்குத்து

    பரிசல் அவியலில் பாடல்கள் காப்பி அடிப்பதைப் பற்றி நாங்கள் பேசியதை குறிப்பிட்டிருந்தார்.எனக்கு இதில் பெரிய ஆர்வம். சிலப் பாடல்களை ராஜா தெரியாமலே இருமுறை போட்டதும் உண்டு. வேறு மொழியிலிருந்து அடிப்பதை விடுங்கள். தமிழிலே இது போன்று பலப் பாடல்கள் திருடப்பட்டுள்ளன.

1) தூங்காதே தம்பி தூங்காதேவில் வரும் "என்ன வேணும் தின்னுங்கடா டோய்" மெட்டும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் "வாழ வைக்கும் காதலுக்கு ஜே" மெட்டும் பல்லவியில் ஒன்றே.

2) அர்ஜுனர் வில்லு பாடலில் வரும் "தனியொரு மனிதனின் படை/ அதில் எழுவது விடுதலை விடை" என்ற வரியைக் கேட்கும் போது என் உதடுகள் முனுமுனுப்பது "அழகிய தமிழ் மகள் இவள்"

3) என்ன விலை அழகே என்ற அற்புதமான பாட்டின் மூலம் "தங்கப் பதக்கத்தின் மேலே..". ஆனால் இதைக் காப்பி என சொல்ல முடியாது.

4) தேவாவை எனக்கு ரொம்ப புடிக்கும். யார் யாரோ Fusion செய்கிறார்கள். தேவா செய்ததற்கு ஈடாக எவரும் செய்ததில்லை. குஷி படத்தில் வரும் மாக்கோரீனா பாடலின் பல்லவி ஒரு ஆங்கில ஆல்பத்தின் அப்பட்டமான காப்பி. ஆனால் சரணம் எங்கே இருந்து எடுத்தார் தெரியுமா? எம்.ஜி.ஆரின் உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்..

மாக்கோரீனா சரணம்:

தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தின் நீர் குடிப்போம்..
விண்வெளியில் பசிதான் எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்..

  இதை பாடுங்கள்.

  மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்..   ஒரு மாசு மருவற்ற தலைவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்

5) சமீபத்தில் வந்த ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் ஒரு பாட்டு "இன்னுமொரு வானம் இன்னுமொரு பூமி வேண்டுமடி உன்னைக் காதலிக்க". நிறைய பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லாத ஒரு மொக்கைப் பாட்டு. இதன் மூலம். "செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே" என்ற பாடல். என்ன படம் எனத் தெரியவில்லை. ஹரிஹரன் பாடிய தேவாவின் பாடல்.

6) தாமிரபரணி என்ற படத்தில் ஒரு பாட்டு. இது சொல்லி விட்டே செய்தார்களா இல்லையா என்பது தெரியாது. "கருப்பாக இருக்காளே" என்ற பாடல், பக்தி பாடலான "கற்பூர நாயகியே கனகவல்லி" என்ற மெட்டில அட்சரம் பிச‌காமல் இருக்கும்.

7) தமிழகத்தையே கலக்கிய வாள மீனுக்கும் பாட்டு கூட ஒரு பழைய பாடலின் அப்பட்டமான காப்பி. குட்டி பதிமினி சின்ன பெண்ணாக பாடிய ஒரு கருப்பு வெள்ளை பாடலின் காப்பி. வரிகள் நினைவலில்லை.

8) ஹாரிஸ் ஜெயராஜின் கிட்டதட்ட அனைத்துப் பாடல்களும் எங்கேயோ கேட்டதுண்டு என்றே நினைக்க வைக்கும். அஞ்சல பாடலில் வரும் "ஒன்னுக்குள்ள ஒன்னா என் நெஞ்சுக்குள்ள நின்னா. கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா" என்ற வரி பழைய பாடலில் இருந்து சுட்டதுதான். கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடுவேன்.

9) இந்த‌ ப‌ட‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் தெரிய‌வில்லை. "பொன்மான‌ தேடி நானும் பூவோடு வந்தேன்". இப்போது இதைப் பாடுங்க‌ள். "பாட்டுக்கு பாட்டெடுத்து நானும் பாடுவ‌தை கேட்டாயோ"

10) டீ.ஆரின் என் ஆசை மைதிலியேவும் சொன்னால்தான் காதலா சொல்லேன்டா வடிவேலாவும் ஒரே மெட்டு. இது ரீமிக்ஸ் இல்லை.

டிஸ்கி: தலைப்பு எனக்கு நானே சொல்லிக் கொன்டது. வேறு வேலையில்லாமல் இந்த ஆராய்ச்சி தேவைதானா?

Dec 13, 2008

ஷோகேஸ் மனைவிகள்.!

18 கருத்துக்குத்து

     கல்யாணம் ஆகாதவங்கல்லாம் இங்கே கிட்டே வாங்கோ, (ஆனவங்க தூரப்போயிடுங்க, அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன். அப்பாலிக்கா அழக்கூடாது) ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டியிருக்கிறது. நாம எல்லோரும் எங்கேயாச்சும் வெளியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறோம். ஷாப்பிங் காம்ப்ளெஸ்களில், பஸ் நிலையங்களில், ரயில்வே ஸ்டேஷன்களில், சிலர் ஏர்ப்போர்ட்களில் என பல இடங்களில் நாம் ஒரு அழகான காட்சியை சில சமயங்களில் காண நேர்கிறது.

     அது, ஒரு அழகான இளைஞன் நின்று கொண்டிருப்பான் (பெரும்பாலும் அவனுக்கு மீசை இருக்காது). அவனருகே ஒரு அழகான இளம்பெண் நின்றுகொண்டிருப்பாள். (உங்களுக்கு சேலை பிடிக்குமென்றால் இளநீலத்தில் முந்தானை அலைபாயும் சேலையணிந்திருப்பாள். உங்களுக்கு மாடர்ன் ட்ரெஸ் ஓகே என்றால் அநியாயத்துக்கு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் அணிந்திருப்பாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் டீ ஷ‌ர்ட்டுக்கு ப‌திலாக‌ டாப்ஸும் அந்த‌ டாப்ஸுக்கும் ஜீன்ஸுக்கும் ந‌டுவே கேப்ஸும் இருக்கும்.)

    இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இடையே ஒரு பெண் குழ‌ந்தை நின்று கொண்டிருக்கும் .அது அழகான மிடியில் கடத்திக்கொண்டுபோய் கொஞ்சிக்கொண்டிருக்கலாம் போன்று அநியாய‌த்துக்கு அழ‌காக‌ இருக்கும். அவ‌ர்க‌ளைப் பார்த்த‌துமே அவ‌ர்க‌ள் ஜோடி என்ப‌தும் அந்த‌க்குழ‌ந்தை அவ‌ர்க‌ளோட‌துதான் என்பதும் புரிந்து போகும். இப்போதான் க‌ல்யாண‌ம் ஆன‌மாதிரியிருக்காங்க‌.. ஆனா குழ‌ந்தையைப்பாரேன்.. என்று வாயில் ஈ நுழைவ‌து தெரியாம‌ல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பீர்க‌ள். உள்ம‌ன‌தில் உங்க‌ளுக்கு நாமும் க‌ல்யாண‌‌ம் செய்துகொண்டு, இதுபோல‌.. என்று காட்சிக‌ளும் க‌ற்ப‌னைக‌ளும் எழும்.

ஸாரி..

     அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடுங்க‌ள், நீங்க‌ள் ஏமாந்து போக‌க்கூடும். பெரும்பாலும் அவ‌ர்க‌ள் விதிவில‌க்கில் வ‌ரும் ஷோகேஸ் ஜோடிக‌ள். நிஜ‌ம் எப்ப‌டி இருக்கிற‌தென்று உங்க‌ளுக்கு தெரிய‌வேண்டுமென்றால் நிறை கேஸ் ஸ்ட‌டி ப‌ண்ற‌ பொறுமையும், நேர‌மும் உங்க‌ளுக்கு வேண்டும். உட‌ன‌டியாக‌ தெரிந்துகொள்ள‌ வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் 'ப‌ரிச‌ல்கார‌ன்' வீட்டுக்கு போக‌லாம்.

அல்ல‌து பெட்ட‌ர் ஆப்ஷ‌ன்.. என் வீட்டுக்கு வ‌ர‌லாம்!

*************************************************

 பி.கு: சாதா தாமிராவை தங்கமணி தாமிரா என மாற்றிய பதிவு இது. அவரின் மாஸ்டர் பீஸ் இதுவென்று சொல்ல மாட்டேன். ஆனால் மிகவும் ரசித்த பதிவு இது. இவரை இங்கே படியுங்கள்.

Dec 12, 2008

திரையுலக & வலையுலக சூப்பர்ஸ்டார்களின் பிறந்த நாள்

107 கருத்துக்குத்து

வலையுலக சுனாமி

ஜே.கே.ஆர் பினாமி

வீர தீர கலைவாணி

கும்மி சங்க மகாராணி

ப்ரெஞ்சு நாட்டு யுவராணி

கருத்து காமாட்சி ராப் அவர்களுக்கு

   பிறந்த நாள் வரப்போகிறது. எத்ற்கும் மீ த ஃப்ர்ஸ்ட்டு என்னும் அவருக்கு முதல் வாழ்த்தும் பரிசும் எனதாக இருக்க வேண்டும். இதோ!!! அவரை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பரிசை தயார் செய்திருக்கிறேன். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இது ராப்புக்கு பிறந்த நாள் பரிசு என்றபோதும் வலையுலக மக்களுக்கே ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி. இங்கே க்ளிக்கி அதைக் கண்டு களியுங்கள்.

*********************************************

    இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள். நான் ஒரு அக்மார்க் ரஜினி ரசிகன். ஆயிரம் விமர்சன‌ங்கள் எழுந்தாலும் திரையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னன். தலைவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்ல்லிக் கொள்ள விரும்புகிறேன். தலைவரோட ஆல் டைம் ஃபேவரிட் காட்சிகள் சில. 

Dec 10, 2008

காக்டெய்ல் (பெண்கள் ஸ்பெஷல்)

82 கருத்துக்குத்து

மு.கு: சில நாட்களுக்கு முன் காக்டெய்ல்(கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்) என போட்டதால் என்னை ஒரு ஆணாதிக்கவாதி என சில 'சமூக விரோதிகள்' புரளி கிளப்பினர்.அது உண்மையில்லை என நிரூபிக்கவே இந்தப் பதிவு

**********************************************

போன வியாழக்கிழமை மாலை சார்மினர் எக்ஸ்பிரஸூக்காக காத்திருந்தேன். ஒரு 20 வயது பெண் என்னை பார்த்து அவர் தோழியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் என்னையே பார்த்துக் கொனண்டிருந்ததால் என்னால் அவர்களை சரியாக பார்க்க முடியவில்லை. வண்டி வந்ததும் ஒட்டியிருந்த சார்ட்டில் மாற்றப்பட்ட என் புதிய பெர்த் நம்பரைக் குறித்துக் கொண்டு ஏறினேன். அதிசயம் அவர்களும் என் கோச்தான். சார்ட்டில் என் பெயரை பார்த்துவிட்டு என்னிடம் வந்து " நீங்க கார்க்கிதானே?" என்றார்கள். ஆமாம். நீங்க? என்றேன். அவர்கள் ப்ளாக் படிப்பது மட்டும் உண்டாம். எழுதுவதோ கமெண்ட் போடுவதோ இல்லையாம். என் பதிவுகள் அனைத்தயும் படிப்பதாக கூறினார்கள். என் படங்கள்தான் வலையில் உள்ளதே. பின் ஏன் தயங்கினீர்கள் என்று நான் கேட்டதுக்கு அவர்கள் சொன்ன பதிலை சொன்னால் நீங்க நம்பவா போறிங்க? படத்தில் இருப்பதை விட நேரில் ஸ்மார்ட்டாக இருக்கிறேனாம். நல்ல வேளை வலையுலக சகோதரிகள் போல என்னை அண்ணா என்று சொல்லாமல் ஃப்ரெண்ட்ஸ் என்றார்கள்.

*************************************************

    பெண்கள் ஆண்களை விட நல்ல உனவு சாப்பிடகிறார்களாம். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த சர்வேபடி ஆண்கள் பிஸ்ஸாவும் ஃப்ரோசன் கறிகளும் விரும்புகிறார்கள். பெண்கள் பழங்களும் காய்கறிகளும் அதிகம் விரும்புகிறார்களாம். ஹிஹிஹி.இந்தியாவில் எடுத்தால் தெரியும் சங்கதி.

     இன்னொரு சர்வே என்ன சொல்கிறதென்றால் பெண்கள் ஆண்களை விட Communicationல் பயங்கர ஸ்ட்ராங்காம். ஒரு நாளைக்கு ஆண்கள் வெறும் 7000 வார்த்தைகள்தான் பேசுகிறார்களாம். ஆனால் பெண்கள் 20,000 வார்த்தைகள். எண்ணிக்கையை மட்டும்தான் சொல்கிறது இந்த சர்வே.வீண் வம்பை வாங்குவதற்கு மட்டும்தான் அந்த 20000 உபயோகப்படும் என்பது அந்த சர்வே சொல்லாமல் விட்ட உண்மை.

*************************************************

    எனக்கு தெரிந்த பெண் ஒருவர் கூறினார், ஆங்கில கலாச்சரப்படி பெண்தான் உயர்ந்தவளாம். பென்ணுக்குள் தான் ஆண் அடக்கமாம். எப்ப‌டி என்றேன். Woman என்று எழுதினால் பெண்ணுக்குள் ஆண் அடக்கம்தானே? சரிதான். அதனால்தான் Girlsஐ மட்டும் விரும்புவதாக சொன்னேன்.

*************************************************

    உலகின் சிறந்த 5 பெண் ஓட்டுனர்கள் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் பிரபலமாக இருந்தது. ப‌லரும் பார்த்திருப்பீர்கள் எனினும் மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்கு.

5th

w_drive_5

4th

w_drive_4

3rd

w_drive_3

2nd

w_drive_2

1st

w_drive_1

டிஸ்கி: ஆயிரம்தான் சொல்லுங்க. பெண்கள் தான் பெஸ்ட். பென்கள் நம் கண்கள்.

Dec 9, 2008

புட்டிக்கதைகள்

39 கருத்துக்குத்து

    ஏழுமலைக்கு தண்ணியடிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஆசை. அது ஒரு நல்ல விஷயம் என்பதால் அடிக்கடி அதை செய்வான். மீண்டும் அடிக்கும்போது ஏன்டா மச்சி என்றால், மறுபடி அடிச்சாதானே மறுபடியும் நிறுத்த முடியும்? நல்லத எத்தன தடவ வேணும்னாலும் செய்யலாம் மச்சி என்பான்.

    அப்படி ஒரு நாள் மகாலட்சுமி பாருக்கு சென்றோம். வழக்கம்போல அரை பீர்(மினி பியர்) வாங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் ஏழுமலை பியரை ராவாக அடிக்க கற்றுக் கொண்டான். அரை பீரை முக்கால்வாசி அடித்த போதே முழு போதை ஏறி பார்ப்பவை எல்லாம் இரண்டாக தெரிந்த‌து மட்டுமில்லாமல் மூன்று முறை வாந்தியும் எடுத்து, நாலு பேர் முன்னாடி எங்க அஞ்சு பேரையும் அசிங்கபடுத்தியதற்கு ஆறுமுகத்திடம் வாங்கிக் கட்டிக் கொண்டான் ஏழுமலை.(யப்பா போதும்.நான் கணக்குல வீக் கூட இல்ல,டே ங்க)

     எல்லோரும் வெளியே வந்தபோது ஏழுமலைக்கு மட்டும்தான் போதையேறி இருந்தது. எனக்கெல்லாம் வெறியேறி இருந்தது. பேசாமல் நடந்தோம். ஏழுமலையே ஆரம்பித்தான். "மச்சி இப்பதான் லைட்டா ஏற ஆரம்பிச்சிருக்கு.இன்னொரு பாருக்கு போலாமா?". ஆறுமுகத்தின் கண்ணில் கொலைவெறி தெரிந்தது. (சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை போலும்) கோபத்தில் அவன் சட்டையை பிடித்தவன் ஒரு உலுக்கு உலுக்கினான். சட்டையை விட்டபோது பொத்தென விழுந்தான் ஏழுமலை. அந்த ஒல்லியான் தேகத்துக்குள் எங்கே ஒளிந்திருந்தது எனத் தெரியவில்லை. ரத்தம் கொட்டியது.

    ஏழுமலையை தூக்குவதில் சிரமம் ஏதுமில்லை என்பதால் ஆட்டோவுக்கெல்லாம் காத்திராமல் ஆஸ்பிட்டலுக்கு ஓடினோம். கட்டுப் போட்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். ஆறுமுகம் மட்டும் மருந்து வாங்கிவர ஃபார்மஸி சென்றிருந்தான். ஒருவர் பதட்டமாக வந்து நர்ஸிடம் ஏதோக் கேட்டுக் கொண்டிருந்தார்.நர்சும் சத்தமாக " ICU ல இருக்கிறவங்கள எல்லாம் பார்க்க முடியாது" என்றார். நர்சு சுமாரக இருந்ததை கவனித்த ஏழு சொன்னான், "பார்க்க முடியாதுன்னா அப்புறம் எதுக்கு ICU சொல்றீங்க. I cant see you சொல்லுங்க" என்றான். சிம்புவைக் கண்ட நயந்தாராவைப் போல வெறுப்புடன் சென்றார் அந்த நர்சு. நாங்கள் எல்லாம் கோவம் மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

   அடுத்த முறை அந்த நர்சு எங்களைக் கடந்த போது ஏழுமலையை முறைத்துக் கொண்டே சென்று கதவில் முட்டிக் கொண்டார். தோள்பட்டையில் நல்ல இடி. ஒரு மாதிரி வளைந்து நெளிந்து, மீண்டும் எங்களை முறைத்துக் கொண்டே சென்றார். எதிரில் வந்த ஆறுமுகம் "என்னடா அப்படி போது. நீ ஏதாவது வம்பு செஞ்சியா" என்று ஏழுவை மிரட்டினான். நம்ம ஹீரோ அசால்ட்டாக சொன்னார் " ஒன்னுமில்லை மச்சி. அவள நம்ம கார்க்கி மடக்கிட்டான். அதான் அப்படி நடக்குது"

   இதற்கு மேலும் அங்கே இருந்தால் எங்களுக்கும் கட்டுப் போடப்படும் என்பதால் எஸ்கேப் ஆனோம். காலையில் எழுந்த‌தும் போதை குறையாத ஏழுமலை நேராக பாத்ரூம் சென்றான். வழக்கம்போல் மப்பு இறங்க, தொட்டியில் அனைவரும் குளிப்பதற்காக இருந்த தண்ணியில் தலையை மட்டும் கவிழ்த்துக் கொண்டான். கொஞ்ச நேரம் கழித்து தலையை எடுத்தவன் சொன்னான் "இனிமேல இந்த கருமத்த அடிக்கவே கூடாது மச்சி".

பி.கு: அவன் கருமம் என்று சொன்னது மினி பியரின் முக்கால்வாசி.

Dec 8, 2008

டப் டிப் டொக் டங் டமால் $%&$^@#$%

86 கருத்துக்குத்து

    சிறு வயதில் இருந்தே வாழ்க்கயை அது போக்கில் எதிர்கொள்வது என் பழக்கமாக இருக்கிறது. பெரிதாய் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதால் ஏமாற்றங்களும் குறைவு என்பது என் நியாயம். நான் எட்டாவது படிக்கும் போது ஆசிரியர் ஒருவர் ஒவ்வொருவருடைய வாழ்க்கை லட்சியம் பற்றிக் கேட்டார். ஒருவன் டாக்டர் ஆவது என்றான். எஞ்ஜினீயர், ஆசிரியர்,வக்கீல என ஆளுக்கு ஒன்று சொன்னர்கள். என முறை வந்தபோது அப்படி ஏதும் இல்லை என்றேன். மொத்த வகுப்பும் விநோதமாய் பார்த்தது. பலரது Aim அப்போதுதான் உதயமானது என்பதையும் மறந்து வித்தியாசமாய் பார்த்தார்கள் என் நண்பர்கள்.

   குறிக்கோள் இல்லாத வாழ்க்கைக்கு பல உவமைகள் சொன்னார் ஆசிரியர். டாக்டர் ஆவதுதான் குறிக்கோள் என்றால் டாக்டர் ஆன பின் என்ன என்று என் கேள்வியைக் கேட்டேன். எதிர்கால் டாக்டருக்கு பதில் தெரியாததால் ஆசிரியரே பதில் சொன்னார். அப்போது வேறு ஒரு குறிக்கோள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

   அவர் மாணவர்களை அடிக்க மாட்டார் என்பதால் நானும் என் விவாதத்தை தொடர்ந்தேன்.

   கால்பந்தாட்டத்தை உதாரணமாக சொன்னார். கோல் என்ற Aim  இல்லாமல் விளையாடினால் சுவாரஸ்யம் இருக்காது. இரண்டு அணியினரும் கோல் என்ற Aimஐ நோக்கி போவதுதான் ஆட்டம். அதுதான் சுவாரஸ்யம் என்றார்.

   இது போல விளையாடும்போது ஏதாவ்து ஒரு அணி நிச்சயம் தோற்கும். அதனால் வாழ்வே சூன்யாமானதை போல அவர்கள் உணர்வார்கள். அது கூடாது என்பதாலே வேண்டாம் என நினைப்பதாக நானும் பதில் சொன்னேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை வாழ்வதற்குதான். எதையும் சாதிப்பதற்காக அல்ல என்பவன் நான்.

  "சாலையின் இருபக்கமும் வாகனங்கள் எதிரெதிரே வந்தால் எப்படி போக முடியும்? அவர்கள் விருப்பப்படி போனால் யாரும் போக முடியாதல்லவா" என்றார்.

  “உண்மைதான் சார். அதற்கு தேவை விதிமுறைகளோ சட்டமோ தானே. குறிக்கோள் எதற்கு? ஓரிடத்திர்கு போய் சேர வேண்டும் என்ற பயணத்தை விட இலக்கில்லாமால் நம் விருப்பப்படி போகும் பயணம் தானே சுகம்” என்றேன்

   ஆசிரியர் என்பதால் அவரால் பதில் சொல்ல முடியாமல் போன இடத்தில் வாதத்தை முடித்துக் கொண்டார். மறுநாள் ஏதாவது ஒரு Aim எனக்கு நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் உத்தரவிட்டார். அதோடு அந்த பீரியட் முடிந்து விட்டது.

  மறுநாள் மறக்காமல் வந்தவுடன் என்னை எழுப்பினார். (தூங்கிட்டு இருந்தியானு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்)

"என்னடா.. யோசிச்சியா?”

  அதை மறந்தேப் போன எனக்கு சட்டென்று மூளையின் மூலையில் பல்பு எரிந்தது. ஆம் என்பது போல தலையாட்டினேன்.

  சொல்லு.  என்ன உன் Aim?

  வாழ்க்கையில் எந்த Aimமும் இல்லாமல் வாழனும். அதான் சார் என் Aim.

  டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^

Dec 7, 2008

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு

63 கருத்துக்குத்து

   வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.
மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி...
"
பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

    பிரியாணி பிரியர், வலையுலக வைரம், சிறுகதை சக்கரவர்த்தி, தங்கமணிகள் பின்னேற்ற கழகத்தின் மூத்த' தலைவர்களில் ஒருவரான இவரின் பதிவுக்கு விழுந்த பல சுவையான பின்னூட்டங்களை இங்கே க்ளிக்கி படியுங்கள்.

*************************************************

ஹிஹிஹி. அதேதான். இத புதுசா படிக்கறவங்களுக்காக‌  

 அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன்.

Dec 5, 2008

டீ.ஆரும் சிலப் பதிவர்களும்

72 கருத்துக்குத்து

      போன மாதம் டீ.ஆரும் சிலப் பதிவர்களும் என்ற பதிவில் சில கவுஜைகள் எழுதினேன். அதிலிருந்து பலர் கவரோடும் கேஷோடும் அவர்களைப் பற்றியும் கவுஜை எழுத கேட்டனர். உங்களைப் பற்றியும் கவுஜை வர உடனே கவரோடு புதுகை.அப்துல்லாவை சந்திக்கவும். இவ்வாறு சேரும் தொகைகளை நான் ஜே.கே.ஆர் மன்றத்துக்கு வழங்குவதால் நேரிடையாக அதன் பொருளாளர் அப்துல்லா அண்ணே அவர்களிடம் கொடுக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்.

*************************************************

நர்சிம்

பெறுந்தொகை கொடுத்த செல்லுல போடறது வேறசிம்
குறுந்தொகை பாட்டு எடுத்து போடறது நம்ம நர்சிம்

யாதும் ஊரேன்னு சொன்னா எல்லாமே நம்ம ஊரு
யாவரும் கேளிர் என்பது இவர் வலையோட பேரு
படிச்சதில் பிடிச்சதுன்னு சுட்டி கொடுத்தாரு சாரு
அண்ணன் எங்க போனாலும் கூடவே வரும் காரு..

*************************************************

முரளிகண்ணன்:

வாழப் பிடிக்காதவங்க சாப்பிடறது அரளி விதை
வாழு வாழவிடு என்பதுதான் நம்ம முரளி கதை

இவர் நடமாடும் சினிமா என்சைக்ளோபிடியா
அதுக்கு ஒரு டாக்டர் பட்டம் இந்தா பிடியா

*************************************************

கார்த்திக்:

கடையோட பேரு வானவில் வீதி
இவர் துடிப்பான  மாணவர் ஜாதி

தம்பி படிக்கிறது லயோலா காலேஜ்
தொடர்ந்து எழுதினா பலருக்கு டேமேஜ்

இவர் சொந்த ஊருதான் கோவை
சென்னையல தான் இவரோட பாவை

*************************************************

ரமேஷ் வைத்யா:

கவிதைகளை கசக்கி பிழிவார்
ஃபிகருன்னா ஜொள்ளு வழிவார்

ஆளு பார்க்காதான் ஒல்லி
இவரு நிஜமாகவே கில்லி
கவிதைல தமிழக ஷெல்லி
இவருக்கு பொண்ணே வில்லி

பேரு மட்டும்தான் கிழஞ்செழியன்
எண்னங்களில் தல இளஞ்செழியன்

*************************************************

ஹிஹிஹி.. அப்படியே கேப்புல தல என் பிறந்த நாளுக்கு என்னைப் பத்தி எழுதியதை மறுபடி போட்டுக்கிறேன்.

வந்துட்டேன்டா டீ.ஆரு‍
என்னை எதிர்க்க இங்க யாரு?
சொல்லப் போறேன்டா வாழ்த்த
நம்ம சகா கார்க்கிய பார்த்து..

நம்ம தம்பி பேரு கார்க்கி
ஏரியால பட்ட பேரு பொறுக்கி
ஐரோப்பால இருக்கு துருக்கி
ரைமிங்கா முடிக்கனும் நறுக்கி..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

முதல்ல பார்த்தப்போ இவன் வயசு பதினாலு
ஆனா அப்பவே இவரு ரொம்ப பெரிய ஆளு..
சின்ன வயசுல  என்ன விட ரொம்ப வாலு
புல்ல போட்டா போதும் மாடு த‌ரும்  பாலு..

பத்து வயசுல சொன்னாரு முதல் கவிதை
அது அவரு போட்ட காதலுக்கான விதை
இன்னைக்கு அவரு எழுதாம விட்டது எத?
அடுத்த முதல்வருதான் சொல்றாரு இத..

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

"பகல்ல வெள்ளையடிக்கிறான்
நைட்ல‌ கொள்ளையடிக்கிறான்
கேட்டா பல்லுடைக்கிறான்.. "

இத எழுதனப்ப இவர் வயசு பத்து
அப்பவே சொன்னேன் இவர் முத்து
கவிதையுலகத்துக்கு பெரிய சொத்து
ஒத்துக்காதவங்க கொஞ்சம் ஒத்து...

ஹேய் ட‌ண்ட‌ண‌க்கா டண‌க்கு ட‌க்கா...

*************************************************

மு.கு: டீ.ஆரின் பெருமை ஊரறிய உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மண பட்டயில் குத்துங்கோ. (என்னடா பின்குறிப்பு போட்டு மு.கு னு போடறான் யோசிக்கறீங்களா? அது முக்கிய குறிப்புங்கோ)

Dec 4, 2008

இந்த வார விகடனும் நானும்

80 கருத்துக்குத்து

     இந்த வாரம் ஆனந்த விகடனை மேய்ந்த போது ஏனோ தெரியவில்லை பல பழைய விதயங்கள் நினைவுக்கு வந்து தொலைத்தன.

1) ஆறாம் பக்கத்தில் ஏ.பி.பரதன் சொன்னதாக இருந்த தகவல் " இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறது". இவரேதான் சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதாவுடன் மீண்டும் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்றார். பாவம் தோழர்கள்.

2) அவர்தான் அரசியல்வாதி.பதினாறாவது பக்கத்தில் ஜீ.வி.பிரகாஷின் பேட்டி. அதில் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக "அதோ அந்தப் பறவை போல" என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறாராம். இவரிடம் இதே விகடன் ரீமிக்ஸ் பற்றி கருத்துக் கேட்டபோது அது ஒரு பாவச் செயல் போல சொல்லியிருந்தார். பொல்லாதவன் படத்தில் வந்த எங்கேயும் பாடலைக் கூட இவர் கம்போஸ் செய்யவில்லை. யோகி பி தான் செய்திருந்ததாக சொல்லியிருந்தார். இப்போ என்ன ஆச்சு ஜீ.வி?

   இதேப் போல் போன வாரம் ஹாரிஸ் ஜெயராஜ் ரீமிக்ஸ் பற்றி சொன்னபோது அது ஒரு கீழ்த்தரமான செயல் என்று சொன்னார். இவரு மற்ற மொழி பாடல்களை சுட்டு போடுவது உயர்ந்த செயலாம். உரிமை வாங்கி ரீமிக்ஸ் செய்வது கீழ்த்தரமான செயலாம். என்னங்க செய்யலாம் இவங்கள?

3)  நாற்பத்தி ஆறாவது பக்கத்தில் நடிகை சிந்து மேனனின் பேட்டி.இவர் கடல்பூக்கள்,யூத்,சமுத்திரம் மற்றும் பல படங்களில் நடித்தவர். சமுத்திரம் படம் வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது இவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம். அவர் சொல்ல வருவது அவருக்கு இப்போது வயது 20தானாம். ங்கொய்யால.

4) ஐம்பத்தி நாலாவது பக்கத்தில் வேலு பிரபாகரனின் பேட்டி. ஒரு காலத்தில் ரஜினி ஒரு நடிகனே அல்ல என்றவர் இன்று இப்படி சொல்கிறார் "பகுத்தறிவு பிரச்சாரம் செய்த நான் வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்றபோது, நண்பர் ரஜினி செய்த உதவி செய்தார். சூப்பர் ஸ்டார் செய்த உதவி வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது.” 150 படங்கள் நடித்து நடிகன் என்று கூட இவரிடம் பேர் வாங்க முடியாத ரஜினி இவருக்கு உதவி செய்தபின் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார். எல்லா சொத்தையும் விட்டு நடுத்தெருவுக்கு வரும்படி நடந்த இவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவராம். போங்கண்ணே போய் உங்க புள்ளக்குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க.

  5) நம்ம கேப்டன் வாராவாரம் ஊர்வலம் போகிறார். இந்த வாரம் விழுப்புரமருகே ஒரு பள்ளிக்கூடம். அங்கே போய் அவர் சொன்னது ,சேலம் மாவட்டத்துல பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் தண்ணியடித்துக் கொண்டிருந்தார்களாம். தலைவா, நீங்கப் போய் நின்னப்ப கூட பள்ளி நடந்துக் கொண்டிருந்தது. அதுக்காக அவங்க செஞ்சது நியாயம்னு சொல்ல வரல. நீங்க மாலை 5 மணிக்கு மேல போயிருக்கலாமே?

   6) இந்த வார இதழில் எனக்கு மிகவும் பிடித்தது ஆனந்தின் பேட்டி. செஸ் காய்களில் உங்களுக்கு பிடித்தது எது என்ற கேள்விக்கு அவரின் பதில். " சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்துக் கொண்டே இருப்பார். பிஷப் ராஜாவைக் காப்பாற்ற வியூகங்களை வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால் சிப்பாய் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிர்கொடுப்பார். நான் என்னை சிப்பாயாக நினைத்துக் கொள்வதாலே என் ராஜாவைக் காப்பாற்ற முடிந்தது. ராஜாவாக வேண்டுமானால் முதலில் சிப்பாயாக வேண்டும்" நீங்க எப்பவும் ராஜாதாங்க‌

Dec 2, 2008

சூப்பர் ஸ்டாருடன் லக்கிலுக் மற்றும் வலையுலக நண்பர்கள்

61 கருத்துக்குத்து

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு.

*****************************      

 குசேலன் சறுக்கியதால், எல்லா முனைகளிலிருந்தும் ஏவுகனைகள் வருவதால் அடுத்து என்ன செய்யலாம் என சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக வலையுலகில் செய்தி கசிந்து விட்டதால் எல்லா பதிவர்களும் தத்தம் கதைகளோடு சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள்.

லக்கிலுக் : மெர்சில் ஆவாத தலீவா.என்கிட்ட டமாரு கொமாருனு ஒரு கேரக்டர் கீது..அதுக்கு நீங்கதான் கரீக்ட்.சரின்னு சொல்லுங்க விகடன் மூவிஸ் வழங்கும் சூப்பர் ஸ்டார் இன்&ஆஸ் "டமாரு கொமாரு" (மயிலாப்பூர் தமிழன்) அப்பிடினு நீயூஸ் வுட்டுலாமா?

  அதான்டா இதான்டா டமாரு கொமாரு நாந்தான்டா..
  மயிலாப்பூர் ஏரியாவுல அனைவருக்கும் காவல்டா..
  டாஸ்மாக்கில் படுத்துக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  துண்டு பீடி பிடிச்சுக்குவேண்டா (ஹோய் ஹோய்)
  குவார்ட்டர் வாங்கி தந்த ஆள மறப்பதில்லடா..
  ஆனா வாட்டர் பாக்கெட் வாங்க மறந்துபுட்டேன்டா

அப்படி ஒரு என்ட்ரி சாங்கோட வந்தீங்கண்ணா அடுத்த சி.எம் நீதாம்ப்பா

அய்யனார்: எங்கேயாவது யாரிடமாவது நேசத்தின் சிறகுகள் இருக்கலாம்.  எப்போதுமே பொய்க்காத, சலிக்காத, வெறுக்காத,தன்முனைப்பில்லாத,இதுவரை கிட்டியிராத,சாத்தியப்படுமென தோன்றாத அன்பென்ற கதகதப்பான ஒன்று இருந்துவிடக்கூடும் என்கிற உந்துதல்கள் இன்றைய நாளை வாழ்ந்துவிட போதுமானதாய் இருக்கிறது. இதுதான் அய்யா என் க‌தையின் க‌ரு.உங்க‌ளை அப்ப‌டியே முள்ளும் ம‌ல‌ரும் காலத்து ரஜினியாக காட்டும்....

லக்கி : என்ன சொல்றப்பா நீ?ஒழுங்கா தமிள்ல சொல்லு.. மராத்தி டிராமக்கு கதை சொல்ற? குசேலனும் இப்பிதான் நென்ச்சோம்.. வோனாம் த‌லீவா.. நீ டமாரு கொமாருதான்.

சத்தி : (மெதுவாக) ரெண்டு பேரும் வேணாம் சார்..இவங்க பழய ஆளுங்க..புதுசா யாரவது டிரை பண்ணலாம்.

பரிசல்காரன் : வணக்கம் சார்.அந்த திண்டல்மலை முருகன் ஆசியோடு படத்த ஆரம்பிக்கலாம் சார்.கதை என்னனா, உங்களுக்கு, நாட்ட திருத்துற வேலய விட்டுடுனும்னு வில்லன் ஒரு லெட்டர் எழுதறாரு. நீங்களும் அதை ஏத்துக்குற மாதிரி பதில் லெட்டர் எழுதுறீங்க..அப்போ இன்டெர்வெல். அதுக்கு அப்புறம் அந்த லெட்டர மாத்தி அவரு அசர நேரமா பார்த்து பூந்து வெளயாடுறீங்க..அப்பப்போ மத்த நாட்டு நடப்ப பத்தி நான் எழுதி தர வசனத்த பேசுறீங்க.. இது பன்ச் டயலாக் இல்ல,அவியல் டயலாக் சார்..

ஏ!! லெட்டர் போடு லெட்டர் போடு
தாத்தாவுக்கும் லெட்டர் போடு
தங்கமணிக்கும் லெட்டர் போடு
லதானந் அங்கிளுக்கு லெட்டர் போடு
கயல்விழி ஆன்டிக்கி லெட்டர் போடு

அப்படியே போட்டு தாக்கினிங்கனா அவ்ளோதாண்ணா

ரஜினி : கொஞ்சம் ஓரமா நில்லுப்பா..அப்புறம் பார்க்கலாம்.அடுத்து..

ச்சின்னப்பையன் : தலைவா.. நான் கத சொல்ல வரல.. நீங்க வெற்றிபெற ஐடியாவோடு வந்திருக்கேன். எங்க தல ஜே.கே.ஆரோடு ஒரு படம் நடிங்க. அப்புறம் பாருங்க உங்க லெவல்ல.

புதுசாய் வருபவர்: நீங்க எந்தக் கதைல நடிச்சாலும், யாரு கூட நடிச்சாலும் சொந்தமா முடிவெடுங்க.லதா மேடத்தோட பேச்ச கேட்ட டர்ருதான். தங்கமணிய ஓரங்கட்டினா வெற்றி நமக்குதான்.

ர‌ஜினி : யாருப்பா நீ? தெளிவா பேசுற‌..

புதுசாய் வருபவர்:  என் பேரு சொல்ல‌ மாட்டேன்.தாமிரானு சொல்லுவாங்க. த‌ங்க‌ம‌ணிக‌ள‌ திருத்த‌ முடியாதுனு ஒரு ப‌ட‌ம் எடுங்க‌.க‌ல்யான‌ம் ஆன‌ எல்லோரும் ப‌த்து த‌ட‌வ‌ பார்ப்பாங்க‌.கண்டிப்பா ஹிட்டுதான்..

ப்ளீச்சிங் ப‌வுட‌ர் : த‌லைவா!!!!!!!!!!!!!!!! நீ எப்ப‌டி ந‌டிச்சாலும் ப‌ட‌ம் ஹிட்டுதான்..இவ‌ங்க‌ள‌ ந‌ம்பாதிங்க‌...வேணும்னா கிரிய‌ கேளுங்க‌..

கிரி: ஆமாம் த‌லைவா.. நாளைக்கே ஆளுக்கொரு மொக்க‌ ப‌திவு இதை ப‌த்தி எழுதி சூடாக்கிடுவானுங்க‌..

ம‌ங்க‌ளூர் சிவா: ரிப்பீட்டேய்...

ர‌ஜினி :என்ன‌ப்பா? திருப்பி ச‌ந்திர‌முகி 2 எடுக்க‌லாம்னு சொல்றீயா?

ம‌ங்க‌ளூர் சிவா: இது எங்க‌ பாஷை

ர‌ஜினி:  அட‌ப்பாவி..இது நான் சொன்ன‌துடா

நிஜமா நல்லவன் : எனக்கொரு ஐடியா தலைவா. இதுதான் நீங்க நடிக்க போற கடைசிப் படம்னு டைட்டில்ல போட்டுடுவோம்.படம் முடியும் போது அனைவருக்கும் நன்றி சொல்லிடுங்க... உங்க கடைசி படம்னு எல்லோரும் பார்ப்பாங்க..படம் ஓடினதுக்கப்புறம் அது டைரக்டர் எழுதிக் கொடுத்தது அத நம்பினா நீ உருப்புட மாட்டனு அறிக்கை விட்டுட்டு அடுத்த படம் ஆரம்பிச்சிடலாம்.

ர‌ஜினி: நல்லவனாடா நீ!!!!!!

உண்மைத்தமிழன் : உங்களுக்காக ஒரு குறும்படம் எடுக்க சொல்லி முருகன் என்னை அனுப்பி இருக்கிறார். கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும்.நம் குறும்படம் ஆறு மணி நேரம் ஓடும் என்பதால் மூன்று இடைவெளிகள் விடலாம். படத்தின் பெயர் உண்மைகன்னடன்/தமிழன்/மராத்தி 5698741259635871.. இதற்கு வரிவிலக்கு நிச்சயம் உண்டு.கதை இதுதான்

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.
காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

ர‌ஜினி: ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.க‌ண்ண‌ன் : கால‌ம் மாறும்.உங்க‌ள் செல்வாக்கு உய‌ரும்.எந்த‌ விதியும் கால‌த்தில் அட‌க்க‌ம்.

ர‌ஜினி : ச‌ரியா சொன்னீங்க‌.க‌தைய‌ சொல்லுங்க‌.

கோவி.க‌ண்ண‌ன் : உங்க‌ ப‌ட‌த்த‌ வ‌ச்சு நாலு பேர் கிண்ட‌ல் செஞ்ச‌ மாதிரிதான் என்னையும் செஞ்சாங்க‌. நான் க‌வ‌ல‌ப‌ட‌ல‌யே.. போட்டிக்கு நானும் ஒரு க‌மென்ட் அனுப்பி ந‌டுவ‌ரோட‌ பாராட்டையும் வாங்கிட்டேன்.அதே மாதிரி குசேல‌ன‌ கிண்ட‌ல் ப‌ன்னி ஒரு ட‌ய‌லாக் எழுதி விவேக்க‌ பேச‌ வ‌ச்சுடுவோம்.

"காய்கறியெல்லாம் பார்த்தா இருக்கும் பச்ச பசேலனு
பார்த்தவங்க பச்சையா திட்டின படம்தான் குசேலன்"

"பதினேழு முறை படையெடுத்து ஜெயிச்சவன் கஜினி
பன்னாட பீ.வாசுவ நம்பி தோத்தவன் இந்த ரஜினி"

குசும்பன் : அடிதடி,பழி வாங்குவது, அரசியல் பேசறது எல்லாம் இல்லாம ஒரு மொக்க படம் எடுப்போம். படம் ஃபுல்லா நீங்க எல்லாரையும் கலாய்ச்சிட்டே இருக்கீங்க.குசேலன் ஏன் ஓடலனா பார்க்கறவங்கள படம் கட்டி போட்டுடுச்சு அதான் ஓடலனு சொல்றீங்க. சிவாஜி ஏன் ஒடுச்சுனா படம் பார்க்க எல்லரும் படத்த துரத்துனாங்க அதான் ஒடுச்சுனு சொல்றீங்க.

  " மொக்க போடுறா மொக்க போடுறா ரத்தம் வர மொக்க போடுறா    சொக்கா போடாம மொக்க போடுடா" னு பல்லேலக்கா மெட்டில் போட்டோம்னா கர்னாடக காவிரி மாதிரி கலெக்ஷன் பொங்குமில்ல...

     சற்று முன் கிடைத்த தகவல்படி சூப்பர்ஸ்டார் தற்போது இமயமலையில் உள்ளார்.கதை சொல்ல விரும்பும் மீதிப் பதிவர்கள் பின்னூட்டத்தில் கதையை சொன்னால் அவரிடம் சொல்லப்படும்.அந்தக் கதையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க பால்ராஜ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார்.வெற்றி பெறுவோருக்கு பாலபாரதியின் "அவன்,அவள்,அது" புத்தகம் ஆசிப் அண்ணாச்சியின் கைகளால் பரிசளிக்கப்படும்.

புட்டிக்கதைகள்

26 கருத்துக்குத்து

   ஒரு முறை ஏழுமலை பிறந்த நாளன்று டப்பா கஞ்சி குடிக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை என்பது ஒரு புறமிருக்க நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் பட்ஜெட்டுக்குள் முடிக்க பெசன்ட் நகரை நோக்கி கிள‌ம்பினோம். அடிக்கப் போவது டப்பா கஞ்சி என்றாலும் பிறந்து நாளல்லவா, பளிச்சென்று சட்டை அணிந்து வந்தான். போகும்போதே எவ்வளவு அடிக்கனும் என்பதிலே குறியாய் இருந்தான் ஏழுமலை.

   கடற்கரையில் ஓரமாய் சில குடிசைகள் தென்பட்டன. சரியாய் ஒரு குடிசைக்கு அழைத்து சென்றான் நடராஜ். 12 வயது சிறுவன் ஒருவன், எத்தனை பேர் எவ்வளவு வேண்டும் என்ற கணக்கை வாங்கிக் கொண்டு சென்றி சிறிது நேரத்தில் ஒரு ப்ளாஸ்டிக் குடமும் சில டம்ளர்களும் எடுத்து வந்தான். பர்த்டே 'கேடிக்கு' முதல் க்ளாஸ் கொடுக்க சொன்னோம். அந்த சிறுவன் புரிந்துக் கொண்டு அவனிடம் க்ளாஸை கொடுத்துவிட்டு "சட்டை சூப்பர்ண்ணா" என்றான் டிப்சுக்காக. ஏழுமலை புரியாமல் என்னைப் பார்க்க "அது ஒன்னுமில்லை மச்சி. ஏஸி பார்ல சரக்கோட Compliment  தருவாங்க இல்ல. அதான் இது" என்றேன்.

   அனைவரின் கைக்கும் க்ளாசோடு கஞ்சி வந்து சேர்ந்துவிட "சியர்ஸ்" சொல்லி அடிக்க ஆரம்பித்தோம். க்ளாஸையே முறைத்துப் பார்த்த ஏழுமலை குடிக்க முடியாமல் தவித்தான். பியரையே கசப்பு என்பவன் டப்பா கஞ்சி எப்படி அடிப்பான்? ஒரே ஒரு வாய் மட்டும் அடித்துவிட்டு வேண்டாம் என்றான். ஆனால் சரியாய் ஒரு நிமிடத்தில் ஏழு "மலையேற" தொடங்கினான்.

  மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?

மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.

 அடுத்த மாசம் மச்சி?

 ஆங்.. ஜூன்கலை. நக்கலா? அவதான்டா என் லைஃபு.

மச்சி நீதான் நல்லா பாடுவியே.அவள பத்தி பாடுடா.

    டேய்.இப்போ எதுக்கு அவ? நான் சரக்க பத்தி பாடப் போறேன். நீ போய் எனக்கு இன்னோரு க்ளாஸ் வாங்கிட்டு வா. மச்சி.கணக்குல் வரவு வை. இதோட எத்தனை மூனு ஆச்சா?

    எனக்கு அவனை அப்படியே கடலில் தள்ளி விட வேண்டும் போலிருந்தது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக இருப்பவனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்ததால் மன்னித்தேன். ஆனால் அவன் எங்களை மன்னிக்காமல் பாடத் தொடங்கினான்.

கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்திக் கேட்டேன்
வாசம் வீசும் வொயினை கேட்டேன்
கும்முனு ஏறும் ரம்மைக் கேட்டேன்
ஜம்முனு ஒரு ஷாம்பெய்ன் கேட்டேன்

கின்னுனு இருக்கும் ஜின்னைக் கேட்டேன்
குளிருக்கேத்த ஸ்காட்ச்சைக் கேட்டென்
ஆரஞ்சு ஜூஸோட வோட்கா கேட்டேன்
லெம‌ன் சால்ட்டோட‌ ட‌க்கீலா கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் அடிக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி  கேட்டே ஏஏஏஏஎஏன்

   வேறு வழியில்லாமல் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு புற‌ப்பட்டோம். எதிரில் இருவர் நல்ல மப்புபுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏழுமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என்றான்.

 நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?

  கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல".

 

Dec 1, 2008

கிடைச்ச கேப்புல சின்ன மொக்கை

55 கருத்துக்குத்து

மு.கு: எங்கள் விட்டிலே ஒரு சின்ன நிகழ்ச்சி என்பதால் வீடு முழுவதும் ஆட்களும் எனக்கு வேலையும் நிரம்பி வ்ழிந்தன. இணைய பொருட்கள் அனைத்தையும் என் அம்மா நான் வரும் முன்னே மூட்டை கட்டி வைத்து விட்டார். கிடைத்த கேப்பில் ரெடி செஞ்ச  மேட்டர் இது. ப்ரூஃப் ரீடிங் கூட செய்யலைங்க. 

************************************************

அப்படியே ஒரு 30 வருஷத்துக்கு பின்னாடி போங்க.. 

   தீபாவளி வரப்போகிறது என்பதெல்லாம் மதனுக்கு காலண்டரைப் பார்த்தோ,அது நவம்பர் அக்டோபரில்தான் வருமென்றோ தெரியாது. டெய்லர் பாபு வீட்டுக்குள் வரும்போதுதான் தெரியும். காதில் பென்சிலோடும் கையில் நோட்டோடும் அவர் வரும்போது டெய்லரின் டிர‌யிலராக காஜா எடுக்கும் சிறுவன் குட்டி பாபுவும் வருவான்.

   மனைவி ஒன்று மற்றது இரண்டு என்று இருக்கும் டெய்லர் ஏனோ தைப்பதில் ஆண்கள் மட்டும் என்று சொல்வார். 12..25..16.. என்று இன்ச் டேப்பால் அளந்துக் கொன்டே அவர் சொல்ல குட்டி பாபு, "குடியை மறக்க இங்கே வாருங்கள்" என்ற துண்டு நோட்டிஸின் பின்னால் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். மதன் மெல்ல டெய்லரை அழைத்தான். அவர் என்ன்டா என்பது போல் குனிய அவர் காதில் கிசுகிசுத்தான் "போன வருஷம் என் டிராயிரல பட்டன் வைக்காம விட்டுட்டிங்க. பக்கத்த் வீட்டு மாமி பார்த்துட்டு ஷேம் ஷேம் நு சொன்னா. இந்த தடவ மறக்காதீங்க மாமா".

   "சரி தம்பி. நீயும் வள‌ர்ந்துட்ட. இந்த தடவ முழுப்பேன்ட்டா தைச்சிடுவோம்" என்று ஆசையை வள‌ர்த்தார்.

   "டேய் போன வருஷம் மாதிரி தீபாவளி அன்னைக்கு காலைல கொண்டு வராதடா. ஒரு நாள் முன்னாடியே வந்துருனும்".இது தாத்தா. தலையை சொறிந்துக் கொண்டே "வந்துருங்க" என்று இழுத்தார் டெய்லர். தாத்தா முன்பணம் கொடுக்க கிளம்பினார் டெய்லர். இந்த தீபாவளிக்கு முழுப்பேன்ட் என்று தெரு முழுக்க சொல்லிக் கொண்டு திரிந்தான் மதன்.

   தீபாவளியும் வந்தது. டெய்லரை மட்டும் காணவில்லை. பேன்ட்டில்லாமல் வெளியே போக மாட்டேன் என்று மதன் வீட்டுக்குள்ளேயே திரிந்தான். ஒரு வழியாய் காலை 11 மணிக்கு துணியுடன் வந்தான் குட்டி பாபு. தாத்தாவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் போதே தன் பேன்ட்டை உருவிக் கொண்டு ஓடினான் மதன். கச்சிதமாய் தைத்திருந்தார் டெய்லர். வீட்டில் யாரிடமும் காட்டாமால் தெருவுக்கு ஓடி வந்தான். எதிரில் மாமி வர அவசர அவசரமாய் பட்டனை தேடினான் மதன். பட்டன்கள் இருப்பதை உறுதி செய்தவன் ஹாயாக பாக்கெடுக்குள் படு ஸ்டைலாக கைகளை விட்டான்.

  "படுபாவி" . கைகள் தொடையை தொட்டன. இந்த முறை பாக்கெட்டை வைக்க மறந்திருந்தார் டெய்லர்.

Nov 29, 2008

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"

14 கருத்துக்குத்து

    அவ்வபோது பலரின் பழையப் பதிவுகளை மேயும்போது ஆச்சிரியம் தரும் வகையில் பல நல்ல பதிவுகளை படிக்க நேரிடுகிறது. பதிவர் சந்திப்பன்று என்னை சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசியபோது நிறைய பேர் நிறைய எழுதுவதால் பல நல்ல பதிவுகளை தவறவிடுவதாக சொல்லியிருந்தார். அப்படி என் கண்ணில் படும் பதிவுகளுக்கு சுட்டிக் கொடுத்தால் படிப்பவர்களும் மகிழ்ச்சிக் கொள்வார்கள், எனக்கும் ஒரு நாளுக்கான மேட்டர் கிடைத்துவிடும். இனி,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழைமையும் இப்படி நான் படித்து ரசித்த பழைய பதிவுகளில் ஒன்று பதிவிடலாம் என்றிருக்கிறேன். நிச்சயம் அதை எழுதியவரின் அனுமதி பெற்றே பதிவிடுவேன்.

************************************************      சென்னையில் ஒரு வீக் எண்ட்ட தனியா எப்படி கழிக்கிறதுன்னு நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அவர்களும் பல யோசனைகள் சொல்லியிருந்தார்கள். நான் போன பதிவில் எழுதியிருந்தவாறு, அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Jokes apart, I really thank them all. Thank you friends!
சனிக்கிழமை காலையில் நான் எழுந்தேன். எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்த என் நண்பன் Good afternoon என்றான். What?
Oops! மணி 11:50.
     சடாரென்று எழுந்தேன். காலையில் செய்ய வேண்டியவைகளை செய்து முடித்து, சாப்பிடும் போது கிட்டத்தட்ட சாயங்காலம் ஆகிவிட்டது. என்னுடைய ப்ளாக்கை திறந்து நண்பர்கள் சொன்ன யோசனைகளை மறுபடி ஒருமுறை படித்தேன். பெசன்ட் நகர் பீச் போவதுதான் ஒரே வழி என்று தெரிந்தது.
பெசன்ட் நகர் பீச்...மெரினா போலவே இங்கேயும் கூட்டமாகத்தான் இருந்தது. என்ன கொஞ்சம் வேறு மாதிரியான கூட்டம். கைகளை பாக்கெட்டில் விட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தேன்.
என்னைப்போல் யாரும் கைகளை பாக்கெட்டில் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு பிடித்துக்கொள்ள யாராவது இருந்தார்கள்.
Seems, Remaining single is a sin.
   கூட்டத்தை விட்டு விலகி நடந்தேன். தனியாக ஓரிடத்தில் நின்று கொண்டு கடலை பார்க்க ஆரம்பித்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். கடலுக்கு நம் எண்ணங்களை கிளரும் சக்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ரொம்ப நேரம் நின்று கொண்டே இருந்திருப்பேன் போல. மனதுக்குள் கவிதை ஒன்று உருவாவதுபோல் இருந்தது. பயம் பற்றிக் கொள்ள இடத்தை மாற்றிக் கொள்ள முடிவெடுத்தேன்.
     சட்டென்று என் பேண்ட்டை யாரோ பிடித்தார்கள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தேன். சிரித்துக் கொண்டிருந்த ஒரு சின்னக் குழந்தை ஏதோ மொழியில் என்னவோ சொன்னது. எனக்கு அது சிரித்த மொழி மட்டும் தான் புரிந்தது. பேசிய மொழி? ம்ஹும்....
நான் குழம்பிப் போய் பார்க்க, சற்று பெரிய சைஸில் அந்த குழந்தையின் அம்மா ஓடிவந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு என்னை பார்த்து ஏதோ மொழியில் என்னவோ சொன்னார்கள். நான் ஏதும் சொல்வதற்க்குள் போய்விட்டார்கள். குழ்ந்தையை மணலில் நடக்கவிட்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். எனது முதல் போட்டோ எப்போது எடுத்தது என்று யோசித்தேன். 6 வயது இருக்கும்.
    ஒரு காபி குடித்து விட்டு போகலாம் என்று கிளம்பினேன். Barista நிரம்பி வழிந்தது. அந்த கூட்டத்திற்க்குள் போக மனமில்லாமல் பார்த்தேன். சற்று தொலைவில் Coffee Day தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். நான் மட்டும்தான் தனியாக நடப்பது போல் இருந்தது.
நிறுத்தப்பட்டிருந்த கார்களை சுற்றி சுற்றி கடந்து வந்தால் Coffee Dayம் சந்தைக்கடை மாதிரி தான் இருந்தது. காபி மட்டும் குடித்துவிட்டு வெளியே வந்தேன்.
ரொம்ப அமைதியாக ஃபீல் பண்ணினேன். வேறு எதுவும் செய்ய தோன்றவில்லை. வீட்டுக்கு போன் செய்தபடியே திரும்பி நடந்தேன்.
  என் தங்கை போனை எடுத்தாள்.

"ஹேய் கார்த்திக், பார்க் பீச்சுனு யார்கூட சுத்திட்டிருக்கே?"

***********************************************

   இந்த பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்க இங்கே கிளிக்குங்கள்

Nov 28, 2008

வ‌லையுல‌க‌ த‌ர்பார் (2)

34 கருத்துக்குத்து

முத‌ல் ப‌குதி

(மன்னர் மற்றும் குழு வேட்டைக்காக காட்டுக்குள் சென்ற போது அங்கே ஒரு குழுவை பார்க்கிறார்கள்)

மன்னர்: யார் நீங்கள்? இந்த நேரத்தில் இங்கே என்ன வேலை உங்களுக்கு?

சஞ்சய்: நாங்கள் வியாபாரிகள் (தொழிலதிபர்கள் என்றும் சொல்லலாம்) மன்னா. அவ்வபோது இது போல குழுவாக சென்று வியாபாரத்தை பெருக்குவது பற்றி பேசுவோம்.

குசும்பன்: அதற்கேன் காட்டுக்குள் வர வேண்டும்? எனக்கு சந்தேகம் வலுக்கிறது மன்னா.

மன்னர்: குசும்பன் சொன்னால் சரிதான். உங்கள் மேல் எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் யார்? பூச்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

நந்து: நான் அவற்றை பார்த்து படம் வரைகிறேன் மன்னா. நான் ஒரு ஓவியன்.

மன்னர்: என்ன ஓவியனோ? ஒரு முறையாவது அரசு நடத்தும் பிட் ஓவியப் போட்டியில் வென்றிருக்கிறாயா?

நந்து: (தலையை சொறிந்துக் கொண்டே)இல்லை மன்னா.

(வீர‌ன் ஒருவ‌ன் ஓடி வ‌ந்து புலி ஒன்றைப் பார்த்தாக‌ சொல்கிறான். உட‌னே அனைவ‌ரும் வாரி சுருட்டிக் கொண்டு ஓடி விடுகின்ற‌ன‌ர்.)

ம‌றுநாள் ச‌பையில்..

ம‌ன்ன‌ர்: நேற்று நான் வேட்டைக்கு சென்ற‌ போது புலியுட‌ன் ச‌ண்டை போட‌ நேர்ந்த‌து. அதில் என் வ‌ல‌து கையில் ஆறு அங்குல‌ நீள‌த்திற்கும் ஒன்ற‌ரை அங்குல‌ ஆழ‌த்தில் வெட்டு ஒன்று ஏற்ப‌ட்ட‌து.

செந்த‌ழ‌ல் ர‌வி : என்ன‌.. புலிக‌ளுட‌ன் சண்டையா? மான‌ங்கெட்ட‌ ம‌ன்னா.. இன‌ உண‌ர்வு அற்ற‌ மூட‌னே.. உன் ட‌வுச‌ர் அவுக்கிறேன் பார்

ம‌ன்னர்: இவ‌ன் ஏன் பித‌ற்றுகிறான்? இவ‌னை சுவீட‌ன் தேசத்துக்கு நாடு க‌ட‌த்துங்க‌ள்.

குசும்ப‌ன் : ம‌ன்னா. நம் நாட்டு சோம‌பான‌த்தின் பெருமைக‌ளை வ‌ரலாற்றில் ப‌திய‌ "சோம‌பான் சிறுக‌தைக‌ள்" என்று இவ்ர் எழுத‌ ஆசைப்ப‌டுகிறார்.

கார்க்கி: ஆம்.அர‌சே. நீங்க‌ள் அவ்வ‌ போது சோம‌பான‌ம் அருந்தி விட்டு புரியும் சாக‌ச‌ங்க‌ளை தொகுக்க‌ ஆசைப்ப‌டுகிறேன்.

ம‌ன்ன‌ர்: உன் ச‌தித் திட்ட‌ம் குசும்ப‌னுக்கு தெரியாது. நான‌றிவேன். மேலை நாட்டு ட‌க்கீலாவையும் கேர‌ள‌ நாட்டு ஷ‌க்கீலாவையும் இணைத்து எழுதியவ‌ன‌ல்லவா நீ.

வால்பையன்: மன்னா. புலியுடன் போரிட்ட உமது வீரத்தை முன்னிட்டு இன்று சோமபான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்.

ம‌ன்ன‌ர்: நீர் பேசாதே. நான் ஒரு நாள் உற‌ங்கும் போது கொசு ஒன்றை அடித்துக் கொண்றேன் என‌க் கூறி சோம‌பான விருந்து வைத்த‌வ‌ன‌ல்ல‌வா நீ.. அர‌ண்ம‌னை ம‌ருத்துவ‌ர் உன‌க்காக‌ உன் வீட்டிற்கு அடிக்க‌டி வந்தும் மாற‌வில்லையா?    

      மந்திரிகளே உங்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள்.

டோண்டூ: மன்னா.. ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌..

ம‌ன்ன‌ர்: உங்க‌ள் ச‌மீப‌ம் எதுவென்று ஊர‌றியும். அம‌ருங்க‌ள்.

உண்மைத்த‌மிழ‌ன்: ம‌ன்னா..

ம‌ன்ன‌ர்: ஒரு நிமிட‌ம். சொல்ல‌ வ‌ருவ‌தை இன்று மாலைக்குள் முடிப்ப‌தென்றால் சொல்லுங்க‌ள்.

உ.த‌மிழ‌ன்: அது க‌டினம். ம‌ன்னா. நான் அம‌ர்ந்து விடுகிறேன்

குசும்ப‌ன்: ம‌ன்னா ந‌ம் அர‌ச‌வையில் உங்க‌ள் ஓவிய‌ம் ஒன்றை..

ம‌ன்ன‌ர்: என்ன‌ செய்வாய் என‌த் தெரியும் குசும்பா. என்னிட‌ம் வேண்டாம் உன் விளையாட்டு.

(யாரையும் பேச‌ விடாம‌ல் தின‌மும் அவ‌ரே அதிக‌மாக‌ பேசிகிறார் ம‌ன்ன‌ர்)

முற்றும்

 

all rights reserved to www.karkibava.com